புலம் பெயர் நாடுகளில் தமிழ்ப் பேசும் மக்களுக்கான உறுதியான அரசியல் தலைமை அற்றுப் போயுள்ள சூழலில் அதிகாரவர்க்கங்களுடன் இணைந்து காய் நகர்த்தலையே அரசியல் என அறிமுகப்படுத்தும் குழுக்களே ஆங்க்காங்கு முளைவிட்டு நிலை கொண்டுள்ளன. முப்பது வருடப் போராட்டத்தின் அனைத்துத் தியாகங்களும் அழிக்கப்பட்டு உலகின் பின் தங்கிய பிற்போக்கான சமூகம் எனத் தமிழ்ச் சமூகம் தம்மை அறிமுகம் செய்துகொள்ளும் வகையில் இத் தலைமைகள் நடந்துகொள்கின்றன. ஒரு பக்கத்தில் புலிகளின் அடையாளத்தைப் பயன்படுத்தி நிலைகொண்டுள்ள குழுக்களும், மறுபுறத்தில் புலிகளின் எதிரணி என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள குழுக்களும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைப் பங்கு போட்டு வியாபாரம் நடத்துகின்றன.
புலம்பெயர் நாடுகள் எங்கும் முளைவிடும் குழுக்களின் தாம் அதிகாரவர்கங்களோடு கைகோர்த்துக்கொள்வதற்காக ஈழத் தமிழர்களின் அவலத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றன. அந்தவகையில் Non Resident Tamils (of Sri Lanka) என்ற அமைப்பு லண்டனில் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களுக்கு அறிக்கைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்திய அரச ஆதரவாளர்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ள இவ்வாறான அமைப்புக்கள் ஆபத்தான பின் விளைவுகளையே ஏற்படுத்தும். பிரித்தானியாவின் நேரடிக் காலனியாதிக்கம் முடிவடைந்த நாளிலிருந்து இலங்கையில் இந்திய அரசின் தலையீட்டின் வரலாறு முழுவதும் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழிக்கும் வரலாறே. இலங்கை சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்பது இந்திய அரசின் தலையீட்டுக்கும் எதிரான போராட்டமாகவே அமையும். தனது நாட்டின் உள்ளேயே தேசிய இனங்களை அழித்துத் துவம்சம் செய்யும் இந்திய அரசை நோக்கி தமிழர்களைப் பாதுகாகுமாறு கேட்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் இழைக்கும் துரோகமாகும்.
ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களின் பேரால் உலகம் முழுவதுமுள்ள போராடும் தேசிய இனங்களுக்குத் துரோகமிழைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
இந்தியாவில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடும், உலகம் முழுவதுமுள்ள போராட்ட அமைப்புக்களோடும் இணைப்பை ஏற்படுத்தி போர்க்குரலாக உருவாகும் தலைமையே இன்றைய அவசரத் தேவை.
தமிழரின் உருமைக்காக குரல் கொடுப்போர்யார், தங்களின் சுயநலன் களிற்காக தமிழரின் உருமைக்காக குரல் கொடுப்போர்யார் என்பதை
தமிழர் தாமாகவே கண்டறியும் திறனுள்ளவர்களா இல்லாவிடில்
இத்தைய நிலமை தொடர்ந்து கொண்டே போகும்.
போர் முடிந்தவுடன் 2009 பிற்பகுதியில் இலங்கை அரசினுடன் புலம்பெயர் நாடுகளில் புலி எதிர்பாளர்கழும் புலியின் மறைமுக ஆதர்வாளர்கழும்
ஒரே கோப்ப்பையில் உணவருந்தும் நிலமை ஏற்பட்டது.
இதன் பின்பறத்தில் அரச செல்வாக்கினைப்பெறும் நோக்கமும்
பெரும்தொகையான பணமும் கையாளப்பட்டது. இதனால்
சிவலிங்கம் அவர்கள் சொல்வதுபோல் தமிழரின் உருமைக்காக
பாடுபட்டோர் நடுத்தெருவில் தான் இன்றும் நிற்கின்ரார்கள்.
இந்திய அரச ஆதரவாளா;கள் அல்ல இவா;கள். இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இயங்கும் கைக்கூலிகள். இந்திய அரசால் பல அமைப்புக்கள் புலம் பெயா; நாடுகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு அமைப்பு இலக்கிய அமைப்பு போல தோற்றம்பெற்று இன்று இன்னொரு பெயாpல் இயங்குகின்றது. அது இந்திய கைக்கூலிகளை அழைத்து மக்களை திசைதிருப்பும் அரசியல் இலக்கிய கூட்டங்களை தொடா;ச்சியாக நடத்திக் கொண்டிருக்கின்றது. அதன் பின் புலத்தில் மேற்கூறிய சிவலிங்கம் தொடக்கம் முன்னாள் புலம்பெயா; புலி ஜம்பான்கள் கேபியின் ஆட்கள் என பலா; அடங்கும்
இந்தக் கும்பல் எதுவும செய்து விடப் போவதில்லை.
இவர்கள் அரசியல் என்னவாக இருந்தாலும், உங்கள் அரசியல் போக்கு அருவருக்கின்றது. எல்லாவற்றுக்கும் சேறு பூசவேண்டாம். அந்த குடும்பத்துக்கு தெரியும். எத்தனை இழப்புகளுக்கு மத்தியில் தொடரும் அற்பணிப்புளை கொச்ச படுத்த வேண்டாம்.
சறோ எந்தக் குடும்பம் என தெளிவாக சொல்லுங்கள் போராட்டத்தில் அழிந்த பல்லாயிரம் குடும்பங்கள் இருக்கின்றன.
பன்னாடையாக இருந்து கேட்டால், மாசுமட்டும் தான் தெரியும். மனச்சாட்சி மாத்திரம் தான் தேவை.
பல்லாயிரம் குடும்பங்கள்அழிந்த போராட்டத்தில் மனச்சாட்சியே இல்லாமல் ஒரு குடும்பத்திற்கு ஒளிவட்டம் கட்டப் பார்க்கிறீர்களே உஙகளை நான் என்னவென்று சொல்ல?