இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன்.இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவியதால்தான் விடுதலைப் புலிகள் தோல்வி அடைய நேரிட்டது என்று கூறியுள்ளார் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பிரிவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன்.
இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சமீபத்திய போரில், இந்தியா, இலங்கைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. முழு வகையில் உதவிகளைப் புரிந்தது.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு நாங்களும், தமிழ் மக்களும் பலிகடாவாகி விட்டோம்.
இலங்கையின் ராணுவ வெற்றிக்கு இந்தியா எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது எங்களுக்கு முழுமையாக தெரிந்தாலும் கூட, இந்தியாவை நாங்கள் வெறுக்கவில்லை.
இந்தியாவின் பிரதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுமையான பாதுகாப்பாக இருப்பார்கள் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம். குறிப்பாக சீனாவை கருத்தில் கொண்டால் நிச்சயம் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுப் பாதுகாப்பாக இருக்க முடியும்.
இதை இந்தியா ஒரு நாள் உணரும், ஈழத் தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை ஆதரிக்க முன்வரும்.
அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்றார் அவர்
இவர் இந்தியாவுக்கு விலைபோய்விட்டார் என நன்கு புரிகிறது. தமிழீழப் போராட்டத்தை மழுங்கடிக்க முனையும் இவர் ஒரு தமிழீழத் தேசத் துரோகி
இந்தியாவை நம்பி முழு தமிழினமும் அழிய வேண்டியது தான்.
We have to get India on our side. What Pathmanathan is trying to do is the right thing.
இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன் என்று பத்மநாதன் கூறுவதை எந்தச் சந்தர்ப்பத்திலும் விலை போன துரோகச் செயலாகக் கருத முடியாது. நடைமுறை யதார்த்தத்திற்கு அப்பால் கற்பனாவாத அரசியலில் மூழ்கிப்போயுள்ள வெற்றுக் கோசக் கும்பல்கள் இது போன்ற சொற்றொடர்களை சுலபத்தில் உதிர்த்து விட்டுச் செல்லலாம். ஆனால் நடைமுறைவாதி இவை போன்ற அணுகுமுறைகளுக்கூடாகவே பயணிக்க வேண்டியிருக்கிறது மக்களுக்காக. இந்தியா என்பது வெறும் அரசு மட்டுமல்ல. அந்த நாட்டில் வாழும் மக்களையும் உள்ளடக்கியதுதான் இந்தியா என்பதை நாங்கள் புரிந்து கொண்டால் அவர் கூறிய கூற்றில் எந்தச் சிக்கலும் இல்லை.
ந.முரளிதரன்
வணக்கம்,வன்னியில் நடந்தது என்ன? உலக வரலாற்றிலேயே அறிந்திராத மிக மிக கொடிய மனிதாபிமானமற்ற இனப்படுகொலை,முதலில் இந்த போர்க்குற்றத்தை செய்தவர்கள் தண்டனை பெற வேண்டும்.உலகம் உண்மையிலும் நீதியிலும் இயங்கினால் அது நடைபெறும் இல்லையெனில் இவ்வுலகம் இருந்து என்ன பயன்.