இந்திய உயர்மட்ட அரச பிரதினிதிகள் குழுவொன்று கொழும்பிற்கு திடீர் விஜமொன்றை மேற்கொண்டுள்ளது. முன் கூட்டியே திட்டமிடப்படாத இத் திடீர் விஜயம் இந்திய தேசிய பாதுகாப்புச் சபையின் ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்பமைச்சர் விஜய் சிங், வெளிவிவகார அமைச்சர் ஷிவ் சக்கர் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.
மாத இறுதியில் நடை பெறும் சார்க் மாநாடு தொடர்பாகவே இவ் விஜயம் அமைந்த்தது என இந்தியத் தூதரகம் அறிவித்தாலும் இலங்கை அதிகாரிகள் பலதரப்பு பேச்சுக்கள்நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
சனி (21/06/2008) காலை இக்க்குழுவினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கும் என உறுதியாகியுள்ளது.
புது டெல்லியிலிருந்து விஷேட விமானத்தில் இலங்கை நேரப்படி 11:30 இற்கு வந்திறங்கிய இம் மூவரும் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளை ஏற்கனவே சந்தித்துப் பேச்சுக்கள்நடாத்தியுள்ளனர்.