Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இந்தியா புலிகளை அழித்ததா? நோர்வே அறிக்கையை முன்னிறுத்தி ஒரு மதிப்பீடு : யதீந்திரா

இனியொரு... by இனியொரு...
01/23/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
61
Home பிரதான பதிவுகள் | Principle posts

இனப்படுகொலையின் இரத்தச் சுவடுகளை மறைக்கும் காலச்சுவடும் குட்டிக் கேபியும்!

சிறுபான்மைத் தேசிய இனம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவதற்குப் பின்னால், ராஜபக்ச குடும்ப ஆட்சியின் பாசிசம் நிலை பெறுவதற்குப் பின்னால், இனச்சுத்திகரிபின் பின்னணியில், நாள்தோறும் பட்டினியால் மரணித்துப் போகும் சிங்களத் தொழிலாளர்களின் பின்னணியில் ஒரு பிரச்சார வலைப் பின்னல் முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாம் தலித்தியம் பேசுகிறோம், முஸ்லீம் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம், பின்நவீனத்துவப் பையன்கள் என்று அழகிய “கதையாடல்கள்” உலக மக்களை ஒரு பிரச்சார வரம்புக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது.
ஈழத்தின் இனப்படுகொலையை முன்வைத்து தெற்காசிய மக்கள் மத்தியில் அதிகாரவர்க்கத்திற்கு எதிரான உணர்வலைகள் எழுச்சிபெற ஆரம்பித்துள்ள ஆரோக்கியமான சூழ்லில் இந்தப் பிரசார வலை ‘புதிய விசையோடு’ முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அன்னா ஹசரே ஊழல் நடக்கிறது என்று சாகும் வரை சாகாமல் உண்ணா விரத நாடகம் போடுவார். மங்காத்தா மக்கள் கூட்டம் அவரின் பின்னால் அணிதிரளும். இந்தியாவின் பெரும்பகுதி உணவின்றிச் செத்துக்கொண்டிருக்கிறது என்று மறு கேள்வி கேட்டால் ஊழலுக்கு எதிராகப் போராடுவது தவறா என்பார்கள். தலித் அடையாளத்திற்காக அமரிக்க நிதி நிறுவனங்களிலிருந்து பணம் பெற்று தன்னார்வப் போராட்டம் நடத்துகிறோம் என்பார்கள். சாதியால் ஒடுக்கப்படுவதைவிட அமரிக்க அடிமையாக வாழலாம் என்பார்கள். வன்னி அழிந்துகொண்டிருந்த போது ராஜபக்சவிடம் சென்று சாதிக்காகப் போராடுகிறோம் என்று மனுக்கொடுக்கும் ஆங்கிலம் பேசும் மேல்தட்டு புத்திசீவிகளின் பிரச்சார வலைப்பின்னல் எல்லாத் தளத்திலும் பரந்து விரிகிறது.கேள்விகேட்டால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசுவது தவறா என்பார்கள்.
தன்னார்வக் கொடுமைக்காரர்கள் அரசுகள் மக்களைப் பிய்த்துத் தின்றாலும் அரசுகளோடு முரண்பட்டுக்கொள்ள மாட்டார்கள். ஏகாதிபத்தியங்கள் குறித்துப் பேசமாட்டார்கள். இவர்களின் பிரச்சார வலைப் பின்னல் அழிக்கப்பட வேண்டிய அபாயகரமான “ஜனநாயகம்”.
இந்த ஜனநாயகத்தின் தமிழ் நாட்டின் நுளைவாசல்களில் காலச்சுவடு என்ற பார்ப்பன பதிப்பகமும் ஒன்று. ஈழப் போராட்டம் என்றாலே கிரிமினல்களின் போராட்டம் என்று கொக்கரித்த தமிழ் நாட்டுப் பார்பனீயத்தின் கர்த்தாக்களான சோ, சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா போன்றவர்கள் வெளிப்படையாகத் தெரிந்த முகங்கள்.

இதன் இரண்டாம் கட்ட புத்திசீவி முகம் காலச்சுவடு பதிப்பகம். இஸ்லாமிய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்பவை காலச்சுவட்டின் வரலாற்றுச் சுவடுகள். இலங்கையில் இனப்படுகொலை நிகழ்த்திய இந்தியா மட்டுமே எம்மை இரட்சிக்கும் என்று கோளைத்தனமான முன்னை நாள் புலி ஆதரவாளர் ஒருவரின் கட்டுரையைக் காலச்சுவடு பதிப்பித்திருக்கிறது. தமிழ் நாட்டின் “புத்திசீவிகளுக்கு” ஈழத் தமிழர்கள் இந்தியாவை வரவேற்பதாக பாலர்பாடம் நடத்தும் யதீந்திரா என்ற எழுத்துலகின் “குட்டிக் கே.பி” இன் கட்டுரையை இங்கு பதிவிடுகிறோம்.

-மோகன் கதிர்வேல்
==========================================================================================================================================================================
இந்தியா புலிகளை அழித்ததா?
நோர்வே அறிக்கையை முன்னிறுத்தி ஒரு மதிப்பீடு -யதீந்திரா


எல்லா உண்மைகளும் மூன்று கட்டங்களைத் தாண்டிச் செல்கின்றன. முதலாவது அது பரிகசிக்கப்படுகிறது. இரண்டாவது அது வன்மையாக எதிர்க்கப்படுகிறது. மூன்றாவது அது சுயசான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
– Arthur Schopenhauer
1
சமாதானத்திற்கான கையாளுகை: 1997- 2009 வரையான நோர்வேயின் சமாதானத்திற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் குறித்த மதிப்பீடு – (Pawns of Peace – Evaluation of Norwegian Peace Efforts in Sri Lanka, 1997-2009) என்னும் அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. 183 பக்கங்களாக விரிந்திருக்கும் மேற்படி அறிக்கையில், 1999இல் நோர்வே ஒரு சமாதான இலகுபடுத்துநராக (facilitator) (அரசு மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளால்) அழைக்கப்பட்டதிலிருந்து, 2009இல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, அரசால் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அனைத்து விடயங்களும் இவ்வறிக்கையில் நேர்த்தியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் வெளிவந்திருக்கும் சர்வதேச ஆவணம் என்ற வகையில் இது அதிகக் கவனிப்பைப் பெற்றிருக்கிறது.
மூன்று பகுதிகளாக நோக்கப்பட்டிருக்கும் இவ்வறிக்கையில், முதல் பகுதியில் நோர்வேயின் சமாதான இராஜதந்திரம், இலங்கை முரண்பாட்டின் பின்னணியில் சமாதானத்திற்கான முன்னெடுப்பு மற்றும் முரண்பாட்டின் தோற்றப்பாடு ஆகிய விடயங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியில், யுத்த நிறுத்தத்திற்கும் சமாதானப் பேச்சுவார்த்தைக்குமான முதல் நகர்வு (1990 – 2003), பிணக்குகளும் உடைவுகளும் (2003 – 2006), யுத்தத்தின் வெற்றியும் மனிதநேய அனர்த்தமும் (2006 – 2009) ஆகிய தலைப்புகளிலும் மூன்றாவது பகுதியில் – சமாதான முன்னெடுப்பின் சர்வதேசப் பரிமாணம், சமாதானத்திற்கான மத்தியஸ்தமும் அதில் இடம்பெற்ற மாற்றங்களின் கதையும் சமாதானமும் இல்லை யுத்தமும் இல்லை என்பதான நிலைமைகள், நிதியுதவியும் சமாதானமும், முன்னிலைப்படுத்தப்பட்ட உள்ளக அரசியல் சிக்கல்கள் ஆகிய விடயங்களும் மதிப்பிடப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் சில உயர்மட்ட விடயங்களைத் தவிர்த்துப் பார்த்தால், பல்வேறு தகவல்கள் ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற வகையில் உலவிக்கொண்டிருந்த விடயங்களாகவே இருக்கின்றன. இந்த அறிக்கை அவ்வாறான தகவல்களின் உண்மைத் தன்மையைத் தற்போது உறுதிசெய்துள்ளது. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, சமாதான முன்னெடுப்பில் பிரதான இடையீட்டாளராகச் செயற்பட்ட ஒரு நாட்டின் அனுசரனையில் வெளி வந்திருக்கும் ஆவணம் என்ற வகையிலேயே இது அதிகக் கவனத்தைப் பெற்றிருக்கிறது. எதிர்காலத்தில் இலங்கையின் அரசியல் தொடர்பில் எடுத்தாளப்படவிருக்கும் ஒரு முக்கியமான சர்வதேச அறிக்கையாகவும் இதுவே இருக்கப்போகிறது. ஆனால் இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளின் பின்னணியில் இந்தியாவே பிரதான சக்தியாக இருந்தது என்ற கருத்து, முற்றிலும் புதிய தகவலாகவும் அதேவேளை இந்தியாவே – தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தது என்று வாதிட்டுவரும் தமிழ்த் தேசிய சக்திகளின் கருத்துக்கு வலுசேர்க்கும் தகவலாகவும் அமைந்திருக்கிறது. இதைப் பிறிதொரு வகையில் சொல்வதானால் – இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்திவரும் தீவிர தமிழ்த் தேசிய சக்திகளைப் பொறுத்தவரையில், மேற்படி அறிக்கை அவர்கள் மெல்லுவதற்குக் கிடைத்த அவல் போன்றது எனலாம். ஆனால் அது உண்மைதானா? புலிகளின் இத்தகையதொரு அவமானகரமான வீழ்ச்சிக்கு இந்தியாவா காரணம்?

இந்த இடத்தில் ஒரு கட்டுடைப்பு விமர்சனம் நமக்குத் தேவைப்படுகிறது. இலங்கை விடயங்களைப் பொறுத்த வரையில், இந்தியா என்பது ஒரு (கலாநிதி ஜயந்த தனபால) புவிசார் அரசியல் நிர்ப்பந்தம் அதேவேளை இலங்கை தொடர்பான விடயங்களில் அது (கலாநிதி பாக்கியசோதி சரவண முத்து) அச்சாணி போன்றது. எனவே நோர்வேயின் அனுசரனையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்புகளில் இந்தியா ஒரு திரை மறைவுச் சக்தியாக இருந்தது என்பது ஆச்சரியமான விடயமல்ல. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் போக்கில் இடம்பெற்றுவந்த அனைத்துத் தவறுகளும் இந்தியாவின் தவிர்க்க முடியாத இடத்தை விளங்கிக்கொள்ளாமையின் விளைவுகள்தாம். அத்துடன் விடுதலைப்புலிகள் 1991இல் மேற்கொண்டதொரு வரலாற்றுத் தவறு, இந்தியாவிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நிரந்தரமான பிரிகோடாகவும் அமைந்தது. இதன் காரணமாகவே இந்தியா நோர்வேயை முன்தள்ளிப் பின்னிருந்தது.

மேற்படி அறிக்கையை வெளியிட்டுவைத்துப் பேசிய எரிக் ஷொல்ஹெய்ம் நோர்வே என்பது வெறுமனே பிரபாகரனை அணுகுவதற்கான ஒரு தொடர்பாளர் பாத்திரம் மட்டுமே என்று குறிப்பிட்டதை நாம் இந்த இடத்தில் குறித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில், இந்தியாவிற்கும் பிரபாகரனுக்கும் இடையில் இருக்கும் பிரிகோடானது, ஒருபோதுமே இந்தியா நேரடியாகப் பிரபாகரனை அணுகுவதை அனுமதிக்காது. ராஜீவ் கொலைக்குப் பிற்பட்ட காலத்தில், தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியாவில் செயற்பட முடியாதவொரு அமைப்பாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள், அரசியல் நாட்டம் கொண்ட ஈழத் தமிழ் மக்களை அதிகளவில் உட்கொண்டிருக்கும் நிலைமையக் கருத்தில் கொண்டு தான், இந்தியா தனது மேற்பார்வையில் மேற்கின் தலையீட்டுக்கு ஆதரவு வழங்கியது எனலாம். இலங்கையின் சமாதான முன்னெடுப்பு வெளிப் பார்வைக்கு நோர்வேயின் குழந்தை போன்று காட்சியளித்தாலும் உண்மையில் இதை இயக்கிய சக்தி இந்தியாதான் என்று ஷொல் ஹெய்ம் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதைப் பிரபாகரன் எவ்வாறு கையாண்டார் என்பதைக் கவனிப்பதன் மூலமே நாம் விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியை விளங்கிக் கொள்ள முடியும்.

2

ஆழமாகப் பார்த்தால் நோர்வேயின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை சமாதான முன்னெடுப்பானது, தோற்றப்பாட்டில் இரண்டாவது இந்திய – இலங்கை ஒப்பந்தம் போன்றது எனலாம். ஆனால் இதில் இந்தியாவின் பங்களிப்பு ஒரு மறைமுக அதிகாரமாகத் தொழிற்பட்டிருக்கிறது. அவ்வளவு தான் வித்தியாசம். பிரபாகரனும் 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எவ்வாறு கையாண்டாரோ அவ்வாறே இரண்டாவதாக மேற்கொள்ளப்பட்ட மேற்படி நோர்வே தலைமையிலான முயற்சியையும் கையாண்டிருக்கிறார். முதலாவது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைச் செயலிழக்க ரணசிங்க பிரேமதாசவைத் தெரிவுசெய்திருந்த பிரபாகரன், நோர்வேயின் முயற்சியைச் செயலிழக்கச் செய்வதற்காக மகிந்த ராஜபக்ஷவைத் தெரிவுசெய்தார். எல்லாக் காலத்திலும் ஒரே உபாயம் கைகொடுக்கும் என்னும் பிரபாகரன் கணக்கு இம்முறை தவறாகப்போனது. அவரது தந்திரோபாயம் இறுதியில் அவரையும் பலியெடுத்தது. இதுதான் தமிழீழ விடுதலைப்புலிகள் விழுந்த கதை. ஆனால் இதை ஏற்றுக்கொள்வதில் தான் நம் மத்தியில் சங்கடங்கள் தொடருகின்றன.

1987இன் இந்திய – இலங்கை ஒப்பந்தம் புலிகளுக்கு எவ்வாறான வாய்ப்புகளை வழங்கியிருந்ததோ குறிப்பிட்ட நோர்வேயின் மத்தியஸ்த காலத்திலும் அதையொத்த வாய்ப்புகளையே புலிகள் அனுபவித்தனர். “அடிப்படையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் புலிகளுக்கே நன்மையளித்தது. இலங்கைப் படைகள் இராணுவத் தங்குமிடங்களுக்குள் முடக்கப்பட்டன. ஆனால் விடுதலைப்புலிகள் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டனர் – பொது விளையாட்டு நிகழ்வுகளில் பங்குகொண்டனர் – அனைத்திலும் தங்கள் புலிக் கொடியை ஏற்றினர். பாடசாலைகளில் தங்களது பிரச்சாரப் படங்களைக் காட்சிப்படுத்தும் நிகழ்வுகள், ஒரு பொதுவிடயமாக மாறியது. தங்களின் செல்வாக்கை பலப்படுதிக்கொள்வதற்காக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட இது போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அரசத் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் ஏதும் வரவில்லை, மாறாக மூன்றாவது இனக் குழுவான முஸ்லிம்களிடமிருந்தே எதிர்ப்பு கிளம்பியிருந்தது. பின்னர் அரசு – புலிகள் – இரு தரப்பு சமநிலைவலு பிறிதொரு நிலைக்கு மாறியிருந்தாலும், அடிப்படையில் யுத்த நிறுத்த உடன்பாடானது விடுதலைப்புலிகளுக்கே நன்மையளித்தது” – (அறிக்கை – பக்கம் – 79).

அறிக்கை, விபரித்திருக்கும் மேற்படி விடயங்கள் அனைத்தும் பொதுவாக, ஈழத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தக் காலத்தில் வாழந்தவர்கள் அனைவரும் நன்கறிந்த உண்மைகள். ஆனால் பிரபாகரன் இந்தக் காலத்தைத் தனது யுத்த முனைப்புவாத அரசியலுக்குப் பயன்படுத்தினாரேயன்றி, மாற்றங்களுக்குட்பட்டுவரும் சர்வதேச நிலைமைகளைக் கருத்திலெடுத்து அரசியல் செய்வதற்கான, மாறுநிலைக் காலகட்டமாகப் பயன்படுத்தியிருக்கவில்லை.

இதை இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போமாயின் – யுத்த நிறுத்த காலத்தில் தனது இராணுவக் கட்டமைப்புகளின் வலிமையைப் பெருக்கிக்கொண்டு, மீண்டும் பொருத்தமானதொரு சந்தர்ப்பத்தில் யுத்த நிறுத்தத்திலிருந்து வெளியேறுவதே பிரபாவின் திட்டமாக இருந்தது. ஆனால் அந்த வெளியேற்றத்திற்கான முழுப்பழியும் கொழும்பின் மீது விழ வேண்டும். ரணில் விக்கிரம சிங்கவை அரசியல் அரங்கிலிருந்து அகற்றும் பிரபாகரனின் திட்டத்தை, நாம் இந்தப் பின்புலத்திலேயே நோக்க வேண்டும். விடுதலைப்புலிகள், தமிழ் மக்களின் வாக்களிக்கும் உரிமையைத் தடுத்ததன் விளைவாக, மிகச் சொற்பளவான வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையில் வலிந்து தலையிடாமல் இருந்திருந்தால் மகிந்த ராஜபக்ஷவால் வெற்றி பெற்றிருக்க முடியாது. இந்த யதார்த்தத்தை ராஜபக்ஷ நன்றாகவே உணர்ந்திருந்தார். இதனாலேயே அவர், பிரபாகரனுக்குத் தனது நன்றியைத் தெரிவுக்குமாறு எரிக் ஷொல்ஹெய்மிடம் குறிப்பிட்டிருக்கின்றார். இந்தத் தகவலை ஷொல் ஹெய்ம் பிரபாகரனிடமும் தெரிவித்திருக்கிறார். (பக்கம் – 55)

“2005இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த ராஜபக்ஷவின் வெற்றியானது சமாதான முன்னெடுப்பு மற்றும் அதன் சர்வதேசமயப்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. எவ்வாறிருந்த போதும், தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு போதுமே தங்களது மேற்படி முடிவு குறித்து விளக்கமளித்திருக்கவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச வலையமைப்பு தொடர்பான அச்சத்தை ஒரு சாத்தியமான விளக்கமாக முன்வைத்தனர். ராஜபக்ஷவோ மேற்குலகுத் தொடர்பில் மிகவும் குறைவான ஆர்வத்தையே கொண்டிருந்தார். மகிந்த வெற்றிபெறும் நிலையில் விக்கிரமசிங்கவால், சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்த முடியாமல் போகும் என்பதே பிர பாகரனின் கணக்காக இருந்தது. ராஜபக்ஷவின் அதிகார வருகை, சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிரான தேசியவாத அலையாகத் திரும்பியதுடன், விடுதலைப்புலிகளுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டையும் தீவிரப்படுத்தியது (பக்கம் – 77).

இங்கு அறிக்கையிடப்பட்டிருப்பது போன்று, பிரபாகரனின் எதிர்பார்ப்பும் அத்தகையதொரு தேசியவாத எதிர்ப்பலை தெற்கில் உருவாக வேண்டும் என்பதாகவே இருந்தது. பிரபாகரன் எதிர் பார்த்தது போன்ற நிலைமைகள் விரைவாகவே தெற்கில் ஏற்பட்டன. மகிந்த ராஜபக்ஷ சமஸ்டி மற்றும் சுனாமிக்குப் பின்னரான கட்டமைப்பு (P-TOMS) ஆகியவற்றை நிராகரித்ததுடன், சமாதான முன்னெடுப்பில் மேற்கு மற்றும் பிராந்தியத் தலையீடுகளை நிராகரிகப்பதாகவும் அறிவித்தார் (பக்கம் – 55).

பிரபாகரனின் கணிப்பில், தெற்கில் தீவிர தேசியவாதத் தலைமைத்துவம் ஒன்றின் வருகையே தனது தமிழீழக் கோட்பாட்டிற்கான நியாயத்தை வழங்கும். இது விடுதலைப் புலிகளின் அடிப்படையான அரசியல் அணுகுமுறை. இது குறித்து நோர்வேயின் அறிக்கை போதியளவு கவனம் செலுத்தியிருக்கவில்லை. பிரபாகரனின் அடிப்படையான அரசியல் அணுகுமுறை எதிரியைப் பேணிக்கொள்வதன் மூலத் தனது இலக்கிற்கான நியாத்தை உருவாக்கிக்கொள்வதாகும். ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருப்பின் பிரபாகரன் ஏதாவதொரு இணக்கப்பாட்டிற்கு நிச்சயம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும். அறிக்கை வெளியீட்டின்போது பேசிய ஷொல்கெய்ம் தானும் அரசாங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட மிலிந்த மொறகொடவும் இணைந்து சமஸ்டித் தீர்வு நகலொன்றை வரைந்ததாகவும் அதை விடுதலைப்புலிகளின் தத்துவ ஆசிரியர் (என அழைக்கப்பட்ட – அழுத்தம் என்னுடையது) அன்ரன் பாலசிங்கம் ஏற்றுக்கொண்டதாகவும் ஆனால் அது பிரபாகரன் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது நிராகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். எனவே எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பரிசீலிக்கப்போவதில்லை என்ற முடிவிலிருந்தே பிரபாகரன் தனது திட்டங்களை வகுத்திருந்தார். அத்தகையதொரு மாற்றுத் தீர்வை நோக்கிச் செல்வதற்கானதொரு புறநிர்ப்பந்தமாக ரணில் விக்கிரமசிங்க இருந்ததன் காரணமாகவே ரணிலை அரசியல்ரீதியாகக் கொலைசெய்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்னணியில் அரங்கேறியிருந்த விடயங்களுக்கும் தற்போது நோர்வேயின் இணக்கப்பாட்டு முயற்சிகளின் போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் விடயங்களுக்கும் இடையில் அடிப்படையிலேயே சில ஒற்றுமைகள் இருப்பதை நாம் அவதானிக்கலாம்.

இந்தியப் படைகள் வடகிழக்கில் நிலைகொண்டிருக்கும்வரை தன்னால் முன்னகர முடியாது என்பதை விளங்கிக் கொண்ட பிரபாகரன், (சிங்களத் தலைவரான) ரணசிங்க பிரேமதாசவுடன் கைகோத்துக்கொண்டதன் மூலம் இந்தியாவை வெளியேற்றுவதில் வெற்றி பெற்றார். இறுதியில் ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்வில், இலங்கை அனுபவம் ஒரு கரும் புள்ளியானது. பின்னர் அதே பிரேமதாசாவின் அரசியல் வாழ்வையும் அவர்களே முடித்துவைத்தனர். மீண்டும் ராஜீவ் காந்தி பிரதமரானால் தனது தமிழீழக் கனவு நிறைவு பெறாது என்பதைக் கருத்தில் கொண்டே பிரபாகரன் இதைத் திட்டமிட்டிருக்கிறார் என்று ராஜீவ் கொலையின் புலன் விசாரணைக் குழுவின் தலைவரான டி. ஜி. பி கார்த்திகேயன் குறிப்பிட்டிருப்பதை இந்த இடத்தில் நாம் ஒப்புநோக்க முடியும். ரணில் விடயத்திலும் இதே அணுகுமுறையே கையாளப்பட்டிருக்கிறது. ஒரு வித்தியாசம், ரணிலை விட்டுவிட்டு, அவரது அசியல் இருப்புக்கு இலக்கு வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் சகாப்தத்தில், ஒரு விடயம் தங்களுக்குத் தடையென உணரப்படும்போது, அதை அழித்தொழிப்பது அல்லது பிறிதொரு சக்தியைத் தெரிவுசெய்வதன் மூலம் தற்காலிமாகக் குறித்த தடையை அகற்றுவது வழமை. இதுதான் புலிகளின் இறுதி நாட்கள்வரை அவர்களை வழி நடத்திச் சென்ற அரசியல் பண்பு நிலையாகும். இத்தகைய அரசியல் பண்பே புலிகளை நண்பர்களற்ற அமைப்பாகச் சுருக்கியதுடன் அவர்களின் அழிவுக்கும் வித்திட்டது.

3

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க வேண்டுமென்ற எண்ணம் இந்தியாவிற்கு இருந்திருக்கவில்லை என்பதை, நோர்வே அறிக்கையை அவதானிக்கும்போது நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் விடுதலைப்புலிகளை ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்க வேண்டுமென்னும் ஆர்வம் இந்தியாவிற்கு இருந்திருக்கலாம். இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்ற வகையில் தனது அயல்நாடுகளில் சுமூகமான நிலைமை அவசியமென்று கருதியிருக்கலாம். ஆனாலும் அந்த முரண்தணிப்பு எத்தகைய நிலையில் அமைய வேண்டும் என்பதைச் சொல்லும் நாடாகத் தான் இருக்க வேண்டும் என்பதில் இந்தியா நிச்சயமாகக் கரிசனை கொண்டிருக்கும் என்பதில் ஜயமில்லை. 80களுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிட்ட காலத்திலிருந்து அத்தகையதொரு கொள்கை நிலைப்பாட்டையே இந்தியா கடைப்பிடித்துவந்திருக்கிறது. இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் அதன் முக்கிய வழிநடத்துநராக இருந்த ஜே. என். தீட்ஷித் அத்தகையதொரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவே இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர் குல்திப் நய்யார் பதிவுசெய்திருக்கிறார். இதை மேலோட்டமாகப் பார்த்தால், மேலாதிக்கம் போன்று தோற்றம் காட்டலாம். ஆனால் இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்ற வகையில் தனது பிராந்திய நலன்கள் குறித்த அக்கறையைப் புறம்தள்ளி விட்டு ஒருபோதுமே அதனால் இயங்க முடியாதென்னும் யதார்த்தத்தை இந்தக் கட்டுரையாளர் ஏற்றுக்கொள்கிறார். இந்தியா மட்டுமல்ல எந்தவொரு நாடும் தனது நலன்களைப் புறம்தள்ளித் துறவு நிலையில் பிறிதொரு நாட்டின் பிரச்சினையைக் கையாள முன்வராது. இது சர்வதேச உறவுகள் தொடர்பான எளிய உண்மையாகும்.

மேற்படி அறிக்கை பதிவுசெய்திருப்பது போன்று இந்தியாவின் மௌன அங்கீகாரத்துடன்தான் எல்லாம் நடந்து முடிந்தன. இந்தியா மனம் கொண்டிருந்தால் யுத்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் அதைத் தடுத்திருக்க முடியும். ஆனால் இந்தியா அவ்வாறு செய்யவோ சொல்லவோ இல்லை – (பக்கம் – 78). ஆனால் இங்கு நிபந்தனையுடனான எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் முயலவில்லை என்பதுதான் விடயம். இந்தியா விடுதலைப்புலிகளை அழித்தொழித்ததாகப் பேசிவரும் சிலர், இந்த அறிக்கையில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஒரு முக்கியத் தகவலைப் பார்க்க மறுக்கின்றனர்.

“மூன்றாக இருந்த யுத்தத் தவிர்ப்பு வலயங்கள் இரண்டாகச் சுருங்கிய நிலையில், மே 8இல் விடுதலைப்புலிகள் மிகச் சிறியதொரு நிலப் பகுதிக்குள் அகப்பட்டிருந்தனர். மறுதினம், சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கடைசிக் கப்பல் வன்னியைச் சென்றடைகிறது. கடுமையான சண்டையால் கப்பலின் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன. இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்புகொண்டு, ஆயுதக் கழைவு தொடர்பானதொரு வரையப்பட்ட உடன்பாட்டுடன் இணங்கிப்போகுமாறு ஆலோசனை கூறுகின்றார். அந்த ஆவணம் தீவிர – ஆனால் செல்வாக்கு குறைந்த – ஈழ ஆதரவு அரசியல்வாதியான வைகோவின் காதுகளுக்கு எட்டுகிறது. அவர் இது காங்கிரஸ் கட்சியின் தந்திரம் என்று கூறி நிராகரிக்கிறார். நடைபெறவிருக்கும் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியே வெற்றிபெறும், அது புலிகளைக் காக்கும் என்று ஆலோசனை கூறுகிறார். இந்த வேளையில், இலங்கை இராணுவம் தனது அறுதியும் இறுதியுமான தாக்குதலைத் தொடுப்பதற்குத் தயாராகியிருந்தது” (பக்கம் – 67).

புலிகள் அழிந்துபோக வேண்டுமென்று, இந்தியா விரும்பியிருக்கவில்லை என்பதற்கு இது ஒரு வலுவான சான்று. இந்தத் தகவலை ஏலவே இறுதிக் காலத்தில் விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளாராக இருந்த செல்வராசா பத்மநாதன் அல்லது கே. பி. தனது நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியிருந்தார் (டி. பி. எஸ். ஜெயராஜ் நேர்காணல்) ஆனால் கே. பியின் கருத்தை எவரும் கருத்தில் கொண்டிருக்கவில்லை ஆனால் தற்போது அதை நோர்வே அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் வரலாற்று எதிரிகளான சீனா, பாகிஸ்தான் நாடுகளின் உதவியைக் கொண்டு, கொழும்பு யுத்தத்தைத் தீவிரப்படுத்த எத்தனித்த வேளையில், இந்தியா தனது பிராந்திய நலன்களைப் புறம் தள்ளி இயங்க முடியாத நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியது என்பதே உண்மை. ஈழ அரசியலில் இன்றுவரை சாபக்கேடாகத் தொடரும் அவலம் என்னவென்றால், அது தன் நோக்கிப் பார்க்கத் தயாராக இல்லாமல் இருப்பதுதான். எப்போதுமே மற்றவர்களை அடிப்படையாகக் கொண்டே நமது அரசில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாகவே, உள்நோக்கிய பார்வைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இந்த அடிப்படையான அரசியல் குறைபாடுதான் புலிகளின் வீழ்ச்சியை, அவர்களது அரசியல் புரிதலிலிருந்தும் தந்திரோபாயத் தவறுகளிலிருந்தும் நோக்குவதற்கு மாறாக, இந்தியாவை மையப்படுத்தியும் இலங்கை அரசை மையப்படுத்தியும் நமது பார்வைகள் கட்டுண்டுகிடப்பதற்குக் காரணம்.

நாம் நமது நலன்களில் நூறு விகிதம் உறுதியாக இருந்துகொண்டு, மற்றவர்களை எங்களுக்காகக் கீழிறங்குமாறு வாதிடுவது சரியானதா? இது விடுதலைப்புலிகளின் அரசியலிலுள்ள மிகப் பெரிய குறைபாடாகும். இந்தப் புரிதல்தான் இந்திய நலன்களைப் புறம்தள்ளிச் சிந்திக்கும் போக்கொன்று, ஈழத் தமிழர் அரசியலின் பொதுப்போக்காக முன்னிறுத்தப்பட்டதற்கான காரணமாகும். வெளிவிவகாரக் கொள்கையில் எடுத்தாளப்படும் ‘நலன்கள் சந்திக்கும் புள்ளியில்’ (convergence of interests) ஒன்றிணைவது குறித்த பார்வை, புலிகளின் கடந்த முப்பது வருடகால அரசியலில் ஒருபோதுமே இருந்ததில்லை. இந்தப் போக்குதான் எப்போதுமே நமக்கு அருகில் வைத்துக்கொள்ள வேண்டிய இந்தியா என்னும் பெரியண்ணனை மற்றவர்கள் வரிசையில் இருக்கச் செய்தது.

ஆரம்பத்தில் இந்தியாவிற்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் அனுதாபம் இருந்திருக்கிறது. ஆனால் அதைப் புலிகள் இந்தியாவின் பலவீனமாகக் கருதிக்கொண்டனர். இந்தியாவின் பிரபலப் பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், இலங்கைக்கான இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என். தீட்ஷித்தின் மன நிலையை இவ்வாறு பதிவுசெய்திருக்கிறார்.

“தமிழீழ விடுதலைப்புலிகள்மீது அவருக்குக் கொஞ்சம் பாசமுண்டு. இலங்கையில் தமிழர்கள் தங்களுக்குரிய பங்கைப் பெற வேண்டும் என்றளவிற்குத்தான் அந்தப் பாசம். தனி ஈழம் என்ற புலிகளின் நிலைப்பாட்டில் அவருக்கு ஒப்புதல் இல்லை. இலங்கையின் வடபகுதிக்கு சுயாட்சி அளிப்பதை அவர் ஆதரித்தார். (ஜெயவர்த்தனே சொன்னது என்ன? – ஸ்கூப் – பக்கம் – 241)

ஆரம்பத்தில் பிரபாகரனை, இந்தியா எந்தவகையிலும் நிராகரித்திருக்கவில்லை. ஆனால் ஒரு தீர்வுக்குள் கொண்டுவரவே எத்தனித்தது. ஆனால் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகள் உண்மையான தேவைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கும் தயாராக இருந்ததாகவே சில பதிவுகள் கூறுகின்றன. விடுதலைப் புலிகளின் தேவை ஒரு நடைமுறை ஈழ அரசு (De-facto-State) என்றாலும், அது குறித்துக் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் தயாராக இருக்கிறேன் – இவ்வாறு முரசொலி மாறனிடம் ராஜீவ் காந்தி குறிப்பிட்டிருக்கிறார் (டி. பி. எஸ். ஜெயராஜ்). வட இந்தியத் தலைவரான ராஜீவ் காந்தியால் இந்தளவு இறங்கிவர முடிந்திருக்கிறது. ஆனால் மறுபுறமாகப் புலிகள் பக்கத்தில் அது குறித்துப் போதுமான நெகிழ்ச்சியோ புரிதலோ இருந்திருக்கவில்லை. இதற்காக இந்திய அமைதிப் படை பொதுமக்களுடன் நடந்து கொண்ட முறைகளை, இந்தக் கட் டுரையாளர் ஏற்பதாக அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. சில தவறுகள் இடம்பெற்றுள்ளன என் பதை மறுக்ககவுமில்லை.

தேவை எவருக்கு இருக்கிறதோ அவர்கள் பக்கத்தில்தான் பொறுமையும் நிதானமான அணுகுமுறையும் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் புலிகள் தலைமையிலான ஈழத் தமிழர் அரசியல் போக்கில் அத்தகையதொரு பார்வை எப்போதுமே இருந்திருக்கவில்லை. இந்த நிலைமைதான் எங்களுடன் இருக்க வேண்டிய இந்தியாவை மற்றவர்கள் பக்கம் தள்ளியது. உண்மையில், இந்தியாவின் தலையீட்டுக்கு சிங்களத் தேசியவாத சக்திகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. இதன் உச்சகட்டமாகவே கடற்படை அணிவகுப்பின்போது படைசிப்பாய் ஒருவர் ராஜீவ்காந்தியைத் தாக்க முற்பட்டார். தெற்கின் சிங்களத் தேசியவாத சக்திகளைப் பொறுத்தவரையில் அவர்கள், இந்தியா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஒரு நாடு, அவர்கள் எங்களுக்கு எதிராகவே வந்திருக்கின்றனர் என்றே நம்பினர். ஆனால் புலிகளின் அணுகுமுறையால் இந்தியாவைத் தீவிரமாக எதிர்த்தவர்களே இறுதியில் இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்குமளவிற்கு நிலைமைகள் மாறின.

இன்று முற்றிலும் புதியதொரு நிலைமை உருவாகியிருக்கிறது. இது வரை இந்தியாவை நாமும் இந்தியா எங்களையும் நெருங்குவதில் செல் வாக்குச் செலுத்திக்கொண்டிருந்த சில சங்கடங்கள் இப்போதில்லை. இன்றைய சூழலில் ஈழத் தமிழர்களின் நலன்சார்ந்து இயங்கும் சக்திகள் அனைத்தும், ஈழத் தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்குள்ள வரலாற்றுக் கடப்பாட்டை வலியுறுத்த வேண்டுமேயொழிய, தேவையற்றவகையில் இந்திய எதிர்ப்பு அரசியலைக் காவிக்கொண்டு திரிவதால், ஈழத் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. இந்தியாவின் பிராந்திய நலன்களுடன் முரண்படாத வகையில் ஈழத் தமிழர்களின் நலன்சார்ந்து, ஒரு புதிய கொள்கை வகுப்பு நமக்குத் தேவைப்படுகிறது.

ஓர் அரசியல் போக்கின் வீழ்ச்சிக்கான காரணங்களை அதன் இயங்கு நிலைக்குள் தேடுவதே சரியானதொரு அரசியல் பகுப்பாய்வு முறையாகும். இன்றைய சூழலில் அவ்வாறான ஆய்வுகளே ஈழத் தமிழர் அரசியலை முன்னோக்கி நகர்த்த உதவும். எனவே தமிழீழ விடுதலைப்புலிகள், தமது வீழ்ச்சிக்கான கருப்பையைத் தமக்குள்ளேயே கொண்டிருந்தனர் என்பதே உண்மை. இந்தியாவிற்கான, இஸ்ரவேலியர்களாக இருக்க வேண்டிய ஈழத் தமிழர்களை இந்தியாவிற்கு எதிர் நிலையில் நிறுத்தும் புலிகளின் விஷப்பரீட்சையின் பெறுபேறே முள்ளிவாய்க்கால் முடிவு. இந்தியாவின் ஆதரவின்றி அல்லது அனுசரனையின்றி ஈழத் தமிழர்கள் எக் காலத்திலும் எந்தவொரு தீர்வையும் அடைய முடியாது என்பதே பின் – முள்ளிவாய்க்கால் யதார்த்தமாகும். இதை விளங்கிக் கொண்டு அரசியல் செய்யும் சாணக்கியம் கற்க வேண்டிய காலமொன்றே, தற்போது நம் முன் விரிந்துகிடக்கிறது. கிடைக்கும் ஒவ்வொரு படிப்பினையிலிருந்தும் தமது அடுத்த கட்டம் குறித்துச் சிந்திக்கத் தலைப்படும் எவருமே, எதிரிகள் – நண்பர்கள் என்னும் முரண் சோடிகளைக் காவிக்கொண்டு திரிவதில்லை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மலயகத்தை உலுக்கும் டெங்கு நோய் அவலம் : சை.கிங்ஸ்லி கோமஸ்

Comments 61

  1. alaku says:
    14 years ago

    அடப்பாவிகளா,  உள்ள விட்டு அடிக்கிறது தான் கேள்விப்பாடிருக்கன். உள்ளவிட்டு சாத்தினதை இப்பதான் பாத்திருக்கேன் கண்ணா..

  2. thevan says:
    14 years ago

    யதீந்திரா ஒரு இந்தியக் கைக்கூலி என்பதை உணர்ந்துகொள்ள இனியொருவுக்கு இத்தனை காலங்கள் எடுத்திருக்கிறது. அன்று அவருடைய கட்டுரைகளைப் பிரசுரித்தபோது அதன் பின்னால் இந்திய ஆதரவு ஒளிந்திருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்டியபோது “நான் முத்திரை குத்துவதாக கூறி எனது கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டன”.ஆனால் இன்று நான் கூறியவை உண்மை என்பது நிரூபணமாகியுள்ளது. இனியொரு தனது தவறுக்கு வருத்தம் தெரிவிக்குமா?

  3. RAJAN says:
    14 years ago

    ‘இந்தியாவிற்கான, இஸ்ரவேலியர்களாக இருக்க வேண்டிய ஈழத் தமிழர்களை இந்தியாவிற்கு எதிர் நிலையில் நிறுத்தும் புலிகளின் விஷப்பரீட்சையின் பெறுபேறே முள்ளிவாய்க்கால் முடிவு. இந்தியாவின் ஆதரவின்றி அல்லது அனுசரனையின்றி ஈழத் தமிழர்கள் எக் காலத்திலும் எந்தவொரு தீர்வையும் அடைய முடியாது என்பதே பின் – முள்ளிவாய்க்கால் யதார்த்தமாகும்.’…………..

    இவர் யார் என்பதை அடையாளம் காண,இது ஒன்றே போதும். 2009 இக்கு முன்னர் ‘தாரகா’ என்ற புனைப்பெயரில் புலிகளின் போராட்டம்

    நியாயமானதென்று தனது தொடர் கட்டுரைகளை வீரகேசரியில் எழுதியவர்தான் இந்த பின்நவீனத்துவத்தின் குட்டிப் பையன். யதீந்திரா என்ற நிஜப்பெயரின் ஊடாக நிஜமுகத்தை காட்டிவிட்டார் ‘குட்டிக் கே.பீ’. அமெரிக்காவின் கோரமுகமாக இஸ்ரவேல் இருப்பது போல், இந்தியாவின் குட்டி சண்டியராக ஈழத்தமிழினம் இருக்க வேண்டுமென்பதே தாரகாவின் பேரவா. இலங்கைப் பாசிச அரசை தனது வழிக்குக் கொண்டுவர தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை இந்தியா இப்போதும் பயன்படுத்துகிறது.

    அது என்னப்பா ‘கட்டுடைப்பு விமர்சனம்’? .விமர்சனம் என்பது ஒரு பார்வை. அறிவியல்பூர்வமாக முன்வைக்கப்படுவது ஆரோக்கியமானதாகவும், மக்களுக்கு பயன்தருவனவாகவும் அமையும். இவர் எந்தக்கட்டை உடைக்கப் போகிறார் என்று தெரியவில்லை. இந்திய ஆளும்வர்க்கத்தின் நலனுக்கு ஒத்து ஊதாமல் போனதுதான் இவ்வாறான கட்டுடைப்புக் கதையாடல்களுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது. ஒடுக்கப்படும் சர்வதேச மக்களோடு இணையாமல், இந்திய மேலாதிக்க ஆளும் கும்பலோடு சேருங்கள் என்பதுதான் யதீந்திராவின் கருத்துத் திணிப்பின் அடிப்படை.

    இந்தியா புலிகளை அழிக்கவில்லை ஆதலால் எல்லோரும் சோனியாகாந்தியின் கரங்களை பற்றிப் பிடியுங்கள் அப்போதுதான் உங்களுக்கு

    விமோசனம் கிடைக்கும் என்கிறார் இலக்கியத்தமிழில் அரசியல் பேசும் தாரகா [யதீந்திரா]. உலக அரசியல் புரியாத, புரிந்து கொள்ள விரும்பாத யதீந்திராக்கள், காலச் சுவடுகளை நிரப்பிக் கொள்வார்கள். இச்சுவடுகள் காலமாற்றத்தில் அழிந்து போகும்.

    போராட்டத்தில் என்ன சார் ‘அவமானகரமான வீழ்ச்சி?’. ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவது அவமானமா? படுகொலைக்கு துணை நின்றவர்களோடு கூட்டுச் சேர்வதுதான் பெருத்த அவமானம்.

    • Inthu says:
      14 years ago

      புலிகள் அழிந்த பிறகு கொழுபில் ரூம் போட்டு யோசித்திருப்பார் போல.. 

  4. veeran says:
    14 years ago

    எப்படியோ இந்தியாநல்ல விடயத்தை தான் செய்துள்ளது, இலலை எனில் இவர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் இருந்த்திருக்கும்,

    • a voter says:
      14 years ago

      புலிகளுடன் சேர்த்து மக்களும் மக்களின் போராடும் ஆற்றலும் பெருமளவில் அழிக்கப்பட்டதே. இன்று வன்னி மக்களில் பலர் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர்.
      ஒன்றில்தமிழ் மக்கள் இந்திய உழைக்கும் மக்களுடன் சேர்ந்து இந்தியாவின் பாத்திரத்தை நடுநிலைப் படுத்தியிருக்க வேண்டும். அல்லது இந்தியாவின் அடியாளாக (யசீந்திரா கூறுவது போல) மாநில சுயாட்சியின் கீழ் வாழ்க்கை நடத்தியிருக்க வேண்டும். இதைவிட்டால் அழிவு மட்டுமே மிஞ்சும். இதுதான் கடைசியில் நடந்தது.

    • அரிச்சந்திரன் says:
      14 years ago

      ஐய்யய்யோ….ஐய்யய்யோ…. இந்த கொசுத்தொல்லைய…

      • veeran says:
        14 years ago

        ஐயோ பி…    என்னும் கொசுவை  அடிச்சி கொன்னுட்டாங்களே

        • அரிச்சந்திரன் says:
          14 years ago

          இப்படிக்கு லங்காபுவத் வால்.

  5. sami saranan says:
    14 years ago

    “போராட்டத்தில் என்ன சார் ‘அவமானகரமான வீழ்ச்சி?’. ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவது அவமானமா? படுகொலைக்கு துணை நின்றவர்களோடு கூட்டுச் சேர்வதுதான் பெருத்த அவமானம்.”

    ராஜன்>
    இந்த அவமானம் எல்லாம் யதீந்திராக்களுக்கு விளங்காது!
    மார்க்சீயம் பேசிக்கொண்டே – ஒரு என் ஜி ஓ வை வைத்துக்கொண்டு உ லகவங்கியின் இலங்கைப் பிரதிநிதியிடம் அவர் பணம் வாங்கிய படம் தினக்குரல் பத்திரிகையில் முன்பு வந்ததே!

  6. thevan says:
    14 years ago

    மீண்டும் எனது ஒரு கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அநேகமாக அடுத்த வருடம் எனது இந்த தணிக்கை செய்யப்பட்ட கருத்தை இனியொரு ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன். ஆனால் பெங்களுர் வழியாக ஆசியாவில் பரவும் இந்திய உளவு பற்றி நாம் நிச்சயம் ஆராய வேண்டும்.

  7. Raasu says:
    14 years ago

    இந்தியாவிற்கு ஒரு இஷ்ரேலாக இருப்பதை விட சிங்களவர்களோடு சேர்ந்து வாழலாம்.

  8. Kumari says:
    14 years ago

    புலிகளைக் கட்டுப் படுத்தி> அழிக்கும் முடிவினை இந்தியா> அமொpக்கா> மேற்கு ஐரோப்பிய நாடுகள் 1985ஆம் ஆண்டிலேயே எடுத்திருந்தன. இதற்குக் காரணம் புலிகள் தாமாக ஆயுதக் கொள்வனவு> ஆயுத இடமாற்றம்> பயிற்சி> பிரசாரம்> சர்வதேச நிதி சேகாpப்பு வலைப் பின்னல்களை உருவாக்கியமையே.
    இவற்றினடிப்படையிலான செயற்பாடுகள் பிரான்ஸ்> ஜேர்மனி> மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
    ஓரரு விடுதலை அமைப்பினை அழிக்கவேண்டுமாயின்> முதலில் அந்த விடுதலை அமைப்பானது எந்தச் சந்தர்ப்பத்திலும் பேச்சு வார்த்தைகளுடாகத் தனக்குப் பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொள்ளாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்.
    இதைத்தான் இந்தியாவும்> அமொpக்காவும் 1989ஆம் ஆண்டில் புலிகள் பிறேமதாஸவுடன் பேச்சுக்களை நடாத்த முற்பட்டபோது செய்ய முற்பட்டிருந்தன. ஆனால்> அவை தோல்வியுற்ற நிலையில்> இந்தியக்கொலைப்படைகள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டன> அதன் கைக்கூலிகளும் வெளியேறின.
    நோர்வேயின் அனுசரணையூடான பேச்சுவார்த்தைகளின்போது> முன்னைய தவறு நடைபெறாது இந்தியாவும்> அமொpக்காவும் பார்த்துக்கொண்டன.
    புலிகள் ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு> ஆயுதங்களைக் கையளிக்கவேண்டும் என்ற நிபந்தனையூடாக> புலிகளைக் குற்றவாளிகள் ஆக சர்வதேசத்திற்குக் காட்டிக்கொள்ள முடிந்தது.
    வன்னிப் போpன் இறுதிக் கட்த்தினைக் கண்காணிக்க ஏப்பிரல 20ஆம் திகதி> 2009 இல் இந்தியாவானது அதனது நவீன ஸ்பை சற்றலைட்டையும் விண் வெளிக்கு ஏவி> அனைத்து நாடுகளும் இணைந்து விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அழித்துக்கொண்டன.
    1948ஆம் ஆண்டில் சுதந்திரத்தை வழங்கியபோது> பிரித்தானியர் தமது நலன்களைப் பேண இந்து சமுத்திரத்தின் இராணுவ தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் இரு நாடுகள் உருவாகாது பார்க்க இலங்கையைச்சிங்கள பெளத்தர்களின் கைகளில் விட்டதுபோல்> இன்று இந்தியா> அமொpக்கா> ஐரோப்பிய நாடுகள் தமது நலன்களைப் பேண> விடுதலைப் புலிகளை அழித்து> இலங்கைத் தீவினைச் சிங்கள பெளத்த தேசியவாதிகளின் னககளில் முழுமையாக விட்டுள்ளன.
    இந்தநிலையில்> இந்நாடுகள் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது உண்மையில் அரை-குறை தீர்வாகவும்> ஏமாற்றாகவும்தான் இருக்கமுடியும்.
    இந்த நாடுகள் தமிழர்கள் உரிமைக்குக் குரல் எழுப்புவதை ஆதாpக்கின்றன> மேற்கு நாடுகளில் ‘புலம்பெயர்ந்த தமிழீழ அரசு’ அமைக்கப்பட இடம் அளித்துள்ளன எனப் பேசுவதும்> கருதுவதும் உண்மையில் வெறும் அறியாமையே!
    இப்படியான செயற்பாடுகள் தொடர விட்டாலே> அதைக் கட்டுப்படுத்தவும் முடியும்> ஒரு காலகட்டத்தில் தீவிரமாகச் செயற்படுபவர்களை கைதுசெய்து> ஈற்றில் அணைத்துப் போராட்டத்தினையும் முறியடித்து> இந்து சமுத்திர பிராந்தியமூடாகத் தமது நலன்களைப் பேணிப் பாதுகாக்க முடியும்.!
    இந்தநிலையில்> அவெளிநாடுகளில் வாழ்ப்பவர்கள் வாய்ச் சவடால்களைவிட்டுவிட்டு> எப்படிச் செயற்படுவது சிறந்தது என்பதை ஆராய்ந்து செயற்படவேண்டியுள்ளது.

  9. சாம் தம்பிமுத்து says:
    14 years ago

    யதீந்திராவை சமீப காலமாக எதிர்த்து கருத்து வெளியிடும் இணையங்கள் அத்துடன் நபர்கள் ஆகியோர் அனைவரும் யாழ்ப்பாணத்தவர்களாகவே இருக்கின்றனர். யதீந்திரா நான் அறிந்தவரை கிழக்கைச் சேர்ந்தவர். அவர் கிழக்கில் ஒரு ஆளுமையாக வளர்ந்து வருவதை சகிக்க முடியாமல்தான் இத்தகைய விமர்சனங்கள் வருகின்றனவா? இங்கு யதீந்திராவின் கட்டுரை தொடர்பில் கட்டுரை பற்றி கருத்துச் சொல்ல முற்பட்டவரோ அல்லது இனியொருவோ ஆழமாக எதனையும் சொல்லாமல் மற்றவர்கள் அவரை கேவலப்படுத்த வேண்டும் என்னும் நோக்கிலேயே அவரது கட்டுரையை அப்படியே மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா புலிகளை அழித்ததை நிறுவ முடியமானால் அதனையே இங்கு முன்வைக்க வேண்டும். அதுதான் எங்களுக்கு பயனுடையதாக அமையும். எவ்வாறு அழித்தது, படைகளை அனுப்பியதா? திட்டம் தீட்டிக் கொடுத்ததா? எத்தனை கோடி ஆயுதங்கள் வழங்கியது? இப்படியான தகவல்களை இனியொரு புலனாய்வு செய்யுமானால் வாசகர்கள் பயனடைவார்கள். இதில் அனாவசியமாக யதீந்திரா குட்டிக் கே.பியா காட்டப்படுகின்றார். அதற்கான ஏதாவது ஆதாரங்கள் உள்ளனவா? அல்லது கிழக்கைச் சேர்ந்தவர்களை துரோகியாகக் காட்டும் யாழ்ப்பாண மனநிலையா இது. 

    • thevan says:
      14 years ago

      சாம் தம்பிமுத்து அவர்களே! பிரதேசவாதத்தைக் காட்டி யதீந்திராவைக் காப்பாற்ற முயலும் உங்கள் இந்திய விசுவாசம் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை என்பதை முதலில் கவனத்தில் கொள்ளுங்கள்.இங்கு கருத்து எழுதும் பலருக்கு யதீந்திரா எந்த ஊர் என்று தெரியாது.அதுபோல் கருத்து எழுதுபவர்கள் யார் என்பதோ அல்லது அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதோ யதீந்திராவுக்கு தெரியாது.ஏன் “இனியொரு”க்கே தெரியவாயப்பில்லை.அப்படியிருக்க உங்களுக்கு மட்டும் எப்படி இது தெரிந்தது என்று எனக்கு புரியவில்லை. மேலும் நீங்கள் கூறுவதுபோல் அவரை எதிர்ப்பவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்ற உங்கள் கருத்தை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும் அவருடைய கருத்துக்களை பிரசுரித்து அவருக்காக வக்காலத்து வாங்குபவர்களில் பலர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது தங்களுக்கு தெரியாதா? அத்தோடு யதீந்திரா தன்னை கிழக்கை சேர்ந்தவர் என்று இதுவரை பிரகடனப்படுத்தியது இல்லை.மேலும் அவர் கிழக்கிற்காக குரல் கொடுத்ததும் இல்லை.அவரே கிழக்கு பற்றி பேசாமல் இருக்கும்போது நீங்கள் எதற்காக அவருக்கு “கிழக்கு” முத்திரை குத்துகின்றீர்கள் என்று புரியவில்லை.
      இந்தியா செய்த அழிவுகளுக்குஆதாரம் கேட்கின்றீர்கள்.இதை படித்தபோது இத்தனைநாளும் என்ன கோமாவில் இருந்தீரா என்று கேட்கத்தோன்றுகிறது.கட்டுரை எழுதிய யதீர்திரா கூட “இந்திய ராணுவம் செய்தவற்றை பெரிதுபடுத்தாமல் விடுவோம்” என்றுதான் குறிப்பிட்டுள்ளாரே தவிர இந்தியா எந்த அழிவும் செய்யவில்லை என்று வாதாடவில்லை. ஆனால் நீங்களோ அவரைவிட ஒருபடி மேலே சென்று இந்தியா செய்தவற்றுக்கு ஆதாரம் கேட்பதன் மூலம் அவரைவிட உங்கள் இந்தியவிசுவாசம் அதிகமானது என்று காட்டிவிட்டீர்கள். உங்கள் எஜமானர்களை திருப்திப்படுத்த நீங்கள் என்னவேண்டுமானாலும் எழுதுவீர்கள் என்பதை நான் அறிவேன்.ஆனால் உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இந்தியா பற்றி என்ன சொன்னாலும் நம்புவதற்கு இது ஒன்றும் 1983ம் ஆண்டு அல்ல.இது 2012ம் ஆண்டு.மக்கள் அனபவத்தின் மூலம் இந்தியா பற்றி நன்கு அறிந்துவிட்டார்கள்.எனவே உங்கள் கனவு இனி பலிக்காது நண்பரே!

      • சாம் தம்பி முத்து says:
        14 years ago

        உங்கள் பேனா, எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போங்கள். பொறுப்பற்று மற்றவர்களை கைக் கூலிகள் என்று சொல்லுவதற்கான உாிமையை உங்களுக்கு தந்தது யார். ஒரு புறும் புலிகள் அழிந்ததில் மகிழ்சி அடைகின்றீர்கள். இன்னொருபுறம் இப்போது புலிகளை இந்தியா அழிக்கவில்லை என்று எவரேனும் கூறிவிட்டால் பின்னர் வக்காளத்து வாங்கிக் கொண்டு இருக்கின்றீகள். எப்படி உங்களைப் போன்றவர்களால் மட்டும் இப்படி முடிகிறது. திருந்தாத ஜென்மங்களுடன் பேசிப் பயனில்லை என்பார்கள். 

    • Shivapalan says:
      14 years ago

      யாழ்ப்பாண வேள்ளாள மனோபாவத்தின் மொத்த உருவமே உங்கள்நண்பரும் ஆசானுமான சுமந்திரன் தானே. இதற்குள் வேறு பிரதேச வாதம். சாதி வாதம், பிரதேச வாதம், இனவெறி எல்லாம் அயோக்கியர்களின் இறுதி ஆயுதம் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.

    • RAJAN says:
      14 years ago

      சாம் அவர்களே….யதீந்திராவின் முழுப்பேரை கூட நாம் அறியவில்லை. அவர் தமிழரா..முஸ்லிமா…சிங்களவரா என்று கூட எமக்குத் தெரியாது.
      இவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் , அவர் கட்டுரை விமர்சனத்திற்கு அப்பால்பட்டது என்று ஆகிவிடாது. இவரை கருணாவோடு ஒப்பீடு செய்திருந்தால் நீங்கள் சொல்வதை ஓரளவு நம்பலாம். ஆனால் ‘குட்டிக் கேபி’ வேறுமாதிரி இருக்கிறது.
      இதில் எழுதும் சகலரும் யாழ்ப்பாணத்தவர் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள் சாம்? துரோகிகள் வடக்கிலும் இருக்கிறார்கள், கிழக்கிலும் இருக்கிறார்கள், கொழும்பிலும் இருக்கிறார்கள்

    • a voter says:
      14 years ago

      //இணையங்கள் அத்துடன் நபர்கள் ஆகியோர் அனைவரும் யாழ்ப்பாணத்தவர்களாகவே இருக்கின்றனர். //
      ஆதாரம் ஏதாவது? ஒருவேளை முன்பு இஸ்ரவேல் கதையளந்த “கடலில் நீந்தும் ஒருவரைக் கண்டுபிடித்து அவரது இனத்ததைச் சொல்லும் வல்லமையுடைய ராடர்” போல ஏதாவது உங்கள் வசம் இருக்கிறதா?
      இங்கு யதீந்திரா மீதான விமர்சனம் அவரது கட்டுரையை மையமாக வைத்துத்தான்.

  10. a voter says:
    14 years ago

    இந்தக் கட்டுரை இந்திய ஆளும் வர்க்கத்தின் பார்வையைப் புலப்படுத்துகிறது. இதைத்தான் இந்தியா வங்காள தேசத்திலும் செய்தது. இதுபற்றி புளொட் அமைப்பினர் வங்கம் தந்த பாடம் என்றோரு புத்தகமும் (1984 ல் என்று நினைக்கிறேன்) வெளியிட்டிருந்தார்கள்.
    எந்தவொரு பலமான வல்லரசுக்கும் அண்மையில் விடுதலைப் போராட்டம் நடத்துபவர்கள் புறச்சூழலைக் கட்டாயம் கவனத்தில் எடுக்க வேண்டும். வைகோ போன்றவர்களை நம்புவது எவ்வளவு ஆபத்தானது என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

  11. stalinguru says:
    14 years ago

    அப்பட்டமான இந்திய,சிங்கள அதிகாரவர்க்க கைகூலிதனமான கட்டுரை என்பதை தவிர ஒன்றுமில்லை.

  12. thevan says:
    14 years ago

    யுத்தம் முடிந்ததும் அறிக்கை விட்ட கோத்தபாயா “இது இந்தியாவின் வெற்றி. இந்தியாவுக்காகவே நாம் இந்த யுத்தத்தை நடத்தினோம்” என வெளிப்படையாக கூறினார்.அதை இதுவரை இந்தியா மறுக்கவில்லை. ஆனால் இந்திய விசுவாசிகள் சிலர் நீண்ட உறக்கத்தில் இருந்து வந்தவர்கள்போல் இந்தியாவின் பங்கிற்கு ஆதாரம் கேட்பதை எண்ணும்போது பிஸ்கட்டுக்காக வாலை ஆட்டும் நாயக்குட்டியின் ஞாபகம் வருகின்றது.

  13. lambert says:
    14 years ago

    இது இன்னுமொரு உளவாளி டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய கட்டுரை:

    நடந்த சம்பவம் எப்படியாயினும் கடுமையான தாக்கங்களைக் கொண்டிருப்பதுடன் அதை தனிமைப்படுத்தப்பட்ட தனியான ஒரு சம்பவமாகப் பார்க்க முடியாது. இராமேஸ்வரத்தில் நடைபெற்ற ரௌடித்தனம் அமைதியை நேசிக்கும் தமிழ் நாட்டு மக்களில் தொந்தரவு செய்யும் ஒரு பகுதியினரின் ஸ்ரீலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகள் எனும் நோயின் பயங்கரமான அறிகுறியே. ஸ்ரீலங்காவுக்கும் சில ஸ்ரீலங்காவாசிகளுக்கும் எதிராகத் திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகள் மாநிலத்தில உள்ள சில சிறிய அரசியற் கட்சிகளின் செயற்பாட்டாளர்களால் அடிக்கடி இங்கு நடைபெறுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் மற்றும் அதைப் பின்தொடர்பவர்கள் எனக் கருதப்படும் அரசியல்சக்திகளினால் சமீப காலமாக ஜனாதிபதி ராஜபக்ஸவுக்கும் மற்றும் அவரது அரசாங்கத்துக்கும் எதிராக இங்கு கடும் விரோதம் காண்பிக்கப்படுகிறது. இந்த சக்திகள் தமிழ் நாட்டுக்கு வருகை தரும் ஸ்ரீலங்கா அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றன. இம் மாநிலத்தில் இனரீதியான ரௌடித்தனம் உதவியற்ற சிங்கள சுற்றுலாப்பயணிகள் மற்றும் யாத்திரிகள் மீது காண்பிக்கப்படுகிறது. இந்த அப்பாவி மக்கள் ராஜபக்ஸ ஆட்சியினோடு எந்த தொடர்பையும் கொண்டிராதவர்கள்.

    இராமேஸ்வரத்தில் சமீபத்தில் நடைபெற்றது, ஒரு ஸ்ரீலங்காத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகளே, அவை அவரது இனத்தின் காரணமாக நடத்தப்பட்டதல்ல ஆனால் அவர் ராஜபக்ஸ குடும்பத்தின் ஒரு தூரத்து உறவினராக இருந்து ராஜபக்ஸவின் ஆட்சியின் நலன்வேண்டி சமயச் சடங்குகளில் ஈடுபட்டுள்ளார் எனக் கருதப்பட்டதுதான் அதற்கான காரணம்.

    கொழும்பு – 7 ,ஹோட்டன் இடத்தில், வசிக்கும் 57 வயதான திருக்குமார் நடேசன், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு இலங்கைத் தமிழராவார். அவருடைய தந்தை யாழ்ப்பாணம் அராலியையும், தாயார் மானிப்பாயையும் சேர்ந்தவர்கள். திரு மற்றும் குமார் என இரண்டு பெயர்களாலும் அவரது நண்பர்களால் அழைக்கப்படும் அவர், கொழும்பிலேயே பிறந்து வளர்ந்து, கொழும்பு புனித.சூசையப்பர் கல்லூரியில் கல்வி கற்றவராவார். பின்னர் அவர் ஐக்கிய ராச்சியத்திலுள்ள மிடில்செக்ஸ் பல்கலைக் கழகத்தில் வணிகக் கற்கை நெறியில் சிறப்பு இளநிலைப் பட்டம் பெற்றார்.

    திருக்குமார் நடேசன் பிரதானமாக முதலீடு, சொத்து அபிவிருத்தி, மற்றும் விருந்தோம்பல் துறைகள் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் ஒரு வணிகத் தொழில் முனைவராவார். அவர் ஹோட்டல்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவரும் மற்றும் ஆசிய திட்டமிடல் சேவைகள் நிறுவனத்தின் தலைவரும், மற்றும் லைட்ஹவுஸ் மற்றும் வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல்களின் நிருவாக இயக்குனராகவும் உள்ளார். இந்தப் பொறுப்புகளுக்கு அப்பால் நடேசன் சுதந்திரமான வணிக மற்றும் முதலீட்டு ஆலோசகராகவும் கடமையாற்றுகிறார்.

    நிருபமா

    நடேசன், ராஜபக்ஸவுக்கு உறவினராக மாறியது, ஜோர்ஜ் மற்றும் லலிதா ராஜபக்ஸ தம்பதியரின் மகளான நிருபமா தீபிகா ராஜபக்ஸவை மணம் செய்து கொண்டதால்தான். நிருபமா என்ற பெயரால் பொதுவாக  அழைக்கப்படும் அவர் பொதுசன ஐக்கிய முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், நீர்வினியோக வடிகாலமைப்பு உதவி அமைச்சராகவும் உள்ளார். நிருபமாவின் தந்தைவழிப் பாட்டனாரான டிஎம். ராஜபக்ஸதான் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அரசியலில் ஈடுபடுவதை ஆரம்பித்;து வைத்த அவர்களது முதலாவது குடும்ப அங்கத்தவராவார் .1936ல் அவர் அம்பாந்தோட்டைத் தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு அரச கவுன்சிலரும் மற்றும் “றுகுணுச் சிங்கம்” எனும் பெயரால் புகழப்பட்டவருமாவார். 1945ல் அவரது மறைவுக்குப் பின்னர் அவரது இளைய சகோதரரான டிஏ.ராஜபக்ஸ  அதற்காக இடம்பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு அரச கவுன்சிலராக தெரிவானார். அம்பாந்தோட்டை பின்னர் திஸ்ஸமகரகம மற்றும் பெலியத்த எனும் இரண்டு தொகுதிகளாக 1947ல் பிரிக்கப்பட்டது.

    டொண் அல்விஸ் ராஜபக்ஸ ஐக்கிய தேசியக் கட்சிக்காக 1947ல் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டார். அவர் 1951ல் கட்சிமாறி எஸ்டபிள்யுஆர்டி பண்டாரநாயக்காவுடன் சேர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை (எஸ்.எல்.எப்.பி) ஆரம்பித்த இணை நிறுவனர்களில் ஒருவராக மாறினார். டிஏ.ராஜபக்ஸ எஸ்.எல்.எப்.பி சார்பாக 1952, 56 மற்றும் 1960 ஜூலையில் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவா 1960 மார்ச்சில் நடந்த தேர்தல் மற்றும் 1965ல் நடைபெற்ற தேர்தல் ஆகியவற்றில் தோல்வியடைந்தார். 1967 நவம்பரில் டிஏ.ராஜபக்ஸவின் மறைவுக்குப்பின்னர், அவரது மகன் மகிந்த பெலியத்த தொகுதி எஸ்.எல்.எப்.பி அமைப்பாளராக ஆகி அதன்பின்னர் 1970ல் அத்தொகுதி பாராளுமன்ற அங்கத்தவரானார். அப்போது அவர்தான் 24 வயதுடைய பாராளுமன்றத்திலுள்ள ஆகவும் இளைய அங்கத்தவராக இருந்தார்.

    டிஎம். ராஜபக்ஸவின் மகன்களான லக்ஸ்மன் மற்றும் ஜோர்ஜ் ஆகியோரும் அரசியலுக்குள் நுழைந்தார்கள். எப்படியாயினும் லக்ஸ்மன் ராஜபக்ஸ அரசியலில் நிலையற்ற தன்மையைகொண்ட கடிவாளமில்லாத அரசியல்வாதியாக இருந்தபோதிலும், அவரது சகோதரர் ஜோர்ஜ்  நிலையான தன்மையுள்ள வெற்றிகரமான அரசியல்வாதியாக உருவானார். அவர் புதிதாக உருவாக்கப்பட்ட முல்கிரிகல தொகுதியில் எஸ்.எல்.எப்.பி வேட்பாளராக 1960 மார்ச் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார்.

    ஜோர்ஜ்  ராஜபக்ஸ 1960, 1965, மற்றும் 1970களில் நடந்த தேர்தல்கள் யாவற்றிலும் முல்கிரிகல தொகுதியில் தோற்கடிக்க முடியாத ஒரு வேட்பாளராகவே இருந்தார். அவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்தில் சுகாதார மற்றும் மீன்பிடி அமைச்சராகக் கடமையாற்றினார். 1976 ல் ஜோர்ஜின் மரணத்தின்பின் அவரது சகோதரர் லக்ஸ்மன் முல்கிரிகல தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அரசியலில் பலமான ஆசீர்வாதம் பெற்ற ஜோர்ஜ்  ராஜபக்ஸவின் மகளான நிருபமா 1983ல் இடைத்தேர்தல்களில் போட்டியிட்டபோது அவருக்கு வயது 20 மட்டுமே. அதில் அவர் தோல்வியடைந்தாலும் அதன் பின் வந்த தேர்தல்கள் மூலமாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்ததுடன் பின்னர் பிரதி அமைச்சராகவும் தெரிவானார். நிருபமா பிரதானமாக மகிந்த ராஜபக்ஸவின் பெறாமகள் எனச் சொல்லப்பட்டாலும், ஜனாதிபதியின் சகோதரர்களான சாமல், கோட்டபாய, மற்றும் பசில் ஆகியோரும் அவரது சிறிய தந்தையர்களே.

    திருக்குமார் நடேசன்

    திருக்குமார் ஜனாதிபதியுடன் இணைப்பை ஏற்படுத்தியது, நிருபமா மூலமான தொடர்பு காரணமாகவே. இந்த உறவுமுறைதான் அந்த தம்பதியர் இந்தியாவுக்கு குறிப்பாகத் தமிழ் நாட்டுக்கு விஜயங்களை மேற்கொள்ளும்போது தொந்தரவுகளுக்கு ஆளாவதற்கு காரணமாக அமைந்தது. சில வருடங்களுக்கு முன்புகூட அவர்கள் அந்த மாநிலத்தில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி காவல்துறையினரின் பாதுகாப்பை பெறவேண்டி ஏற்பட்டது.

    கொழும்பில் வளர்க்கப்பட்டிருந்தாலும்கூட திருக்குமார் ஒரு பயபக்தியுள்ள இந்து, அவர் மத மற்றும் கலாச்சார நோக்கங்களுக்காக அடிக்கடி இந்தியாவுக்கு விஜயம் செய்வதுண்டு. மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான வட இந்தியாவிலுள்ள பெனாரஸ், கயா,மற்றும் ஹரித்துவார் போன்ற இடங்களுக்கும் தென்னிந்தியாவிலுள்ள திருப்பதி, போன்ற அநேக இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். ஒவ்வொரு வருடமும் கந்தஷஷ்டி காலங்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று கந்தஷஷ்டி கவசத்தை  பராயணம் செய்வதுண்டு.

    திருக்குமார் நடேசன் அடிக்கடி இராமேஸ்வரத்தில் உள்ள பிரபலமான இராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்று அங்கு குடிகொண்டுள்ள சிவபெருமானிடம் வழிபாடு செய்வதுண்டு. பெரும்பாலும் யாத்திரிகர்களும் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் வந்து குவியும் நகரம்தான் இராமேஸ்வரம். சுவராஸ்யமான வகையில் இராமேஸ்வரமும், இராமநாதசுவாமி கோவிலும் நம்பிக்கை மற்றும் வரலாற்று அனுபவம் என்பனவற்றால் ஸ்ரீலங்காவுடன் தொடர்பு கொண்டிருக்கிறது.

    தமிழ் நாட்டு இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாம்பன் தீவில் அமைந்துள்ள ஒரு கரையோர நகரம்தான் இராமேஸ்வரம். பாம்பன் தீவு மன்னார் குடாவிலுள்ள இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது, இந்தியாவின் பிரதான நிலப்பரப்புடன் இ;து  பாம்பன் கால்வாய் என்கிற நீர்ப் பரப்பின்மேல் அமைந்துள்ள பாம்பன் பாலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இராமேஸ்வரம், ஸ்ரீலங்காவிலுள்ள மன்னார் தீவிலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவிலுள்ளது. ஸ்ரீலங்காவின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு வழமையாக இந்திய இலங்கை படகுச்சேவை நடைபெற்று வந்துள்ளது. சந்தர்ப்ப வசமாக தனுஷ்கோடிதான் தற்போது இலங்கைக்கு வருகை தரவிருக்கும் பிரபல விஞ்ஞானியும் முன்னாள் இந்திய ஜனாதிபதியுமான ஏஜே.அப்துல்கலாமின் பிறந்த இடமாகும்.

    இராமேஸ்வரம்

    இராமேஸ்வரம் எனும் பெயர் விளக்குவது விஷ்ணு கடவுளின் அவதாரமாகிய அயோத்தியின் அரசர் இராமரையே.புராணக் கதைகள் மற்றும் நம்பிக்கைகளின்படி  இராமர் தனது வானர சேனைகளின் உதவியுடன் இராமேஸ்வரத்திலிருந்து ஸ்ரீலங்காவுக்கு படையெடுப்பு நடத்தி கடத்திச் செல்லப்பட்ட அவரது மனைவியை லங்காபுரி அரசன் இராவணனின் பிடியிலிருந்து மீட்பதற்காக இராமர் அணை அல்லது இராம சேது(ஆதாமின் பாலம்) எனும் பாலத்தைக் கட்டினார்.

    புராணக்கதைகளின்படியும் சில இராமயண பதிப்புகளின்படியும் இராமேஸ்வரம்தான் இராமர் சிவபெருமானிடம் மன்னிப்புக் கோரியும் மற்றும் இராவணனுடன் போரிட்டபோது தன்னால் செய்யப்பட்ட பாவங்களின் குற்றச்செயல்களிலிருந்து விடுவிக்கும்படி கோரியும் தவம் செய்த இடம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலின் பிரதான கடவுளாக சைவர்களின் கடவுளான சிவபெருமான் உள்ளபோதும், சைவர்கள் அதேபோல வைஷ்ணவர்கள் ஆகிய இருபகுதியினரும் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்து வழிபாடு செய்வதால்,சகல இந்துக்களுக்கும் புனிதமான இடங்களில் ஒன்றாக இராமேஸ்வரம் உள்ளது.

    காக்கும் கடவுளான விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவர்களுக்கு விஷ்ணுவின் அவதாரங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்;ட நான்கு பிரதான வழிபாட்டுத்தலங்கள் எனப் பொருள்பட அழைக்கப்படும் “சார் தாம்” என்பனவற்றில் பத்ரிநாத், பூரி ,மற்றும் துவாரகா என்பனவற்றுடன் இராமேஸ்வரமும் ஒன்றாகும். பத்ரிநாத் வடக்கிலும், இராமேஸ்வரம் தெற்கிலும், துவாரகா மேற்கிலும், பூரி கிழக்கிலுமாக புவியல் சதுரமாக அமைந்துள்ளன.

    இராமேஸ்வரம் கோவிலின் பிரதானமான கடவுளான இராமநாதசுவாமி சிவலிங்கவடிவில் காட்சியளிக்கிறார். ஜோதி லிங்கம் என அழைக்கப்படும் இங்குள்ள லிங்கமானது இந்தியாவிலுள்ள பன்னிரண்டு முக்கிய சிவ வழிபாட்டுத் தலங்களில் உள்ள விக்கிரகங்களில் ஒன்றாகும். இந்த கோவில்களில் சிவபெருமானை ஒளி வடிவத்தில் (ஜோதி லிங்கம்)வழிபாடு செய்வதுண்டு.

    சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில்களில், காசி விஸ்வநாதர் கோயில் வட இந்தியாவிலுள்ள வரணாசியிலும்(பெனாரஸ்) மற்றும் இராமநாதசுவாமி கோவில், தென்னிந்தியாவிலுள்ள இராமேஸ்வரத்திலும் அமைந்துள்ளன, இவை இரண்டும் மிக முக்கியமானவைகளாக போற்றப்படுகின்றன இந்த இரண்டு இடங்களும் இறந்தவர்களுக்கான இறுதிக் கிரியைகள் செய்வதற்கும் அவர்களின் சிதறல் அல்லது அஸ்தியை கரைப்பதற்கும் மற்றும் முன்னோர்களைச் சாந்தப்படுத்தும் சடங்குகளை செய்வதற்கும் பயன்படுகின்றன.

    இராமநாதசுவாமி

    ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களுக்கும் மற்றும் இராமேஸ்வரம் கோவிலுக்கும் இடையில் ஒரு விசேட உறவு உள்ளது. ஒருகாலத்தில் இராமேஸ்வரம் கோவிலுக்கு வடக்காக உள்ள நெடுந்தீவு எனும் தீவில் பசுமாடுகள் வளர்க்கப்பட்டு கோவிலில் நடக்கும் அபிஷேகத்துக்காக தினசரி பால் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கோவிலுக்குச் சொந்தமான பல சொத்துக்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளன .யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில் உள்ள பல நகைக்கடைகள் இராமநாதசுவாமிக்கு சொந்தமாக உள்ளன.

    பல வருடங்களாக பக்தர்கள் இராமேஸ்வரத்துக்கு கூட்டமாகச் செல்வதுண்டு. அநேகர் நிரந்தரமாகவே இராமேஸ்வரத்தில் குடியேறியுள்ளனர் மற்றும் கோவிலின் கிழக்கு கோபுர சுற்றாடலில் ஒரு சிறிய யாழ்ப்பாண குடியிருப்பே அமைந்துள்ளது. அங்கு குடியேறியுள்ள யாழ்ப்பாணத் தமிழர்கள் மத்தியில் கனகசுந்தரம் எனும்; ஒரு பாடசாலை ஆசிரியர், முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு ஆங்கிலம் போதித்தவராவார். தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக முத்திரைபதித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தவமணிதேவியும் தனது கடைசி நாட்களில் ஒரு பிராமண ஐயரைத் திருமணம் செய்து இராமேஸ்வரத்தில்தான் குடியேறியிருந்தார்.

    அங்கு ஒரு விசேடமான யாத்திரிகர் மடம் ஒன்று விசேடமாக யாழ்ப்பாண பக்தர்களுக்காக வேண்டி யாழ்ப்பாணத்தார் திருமடம் என்கிற பெயரில் கோவிலின் வடக்குவீதியில் அமைந்துள்ளது. அது சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் அந்தக் கட்டிடம் தமிழ் நாட்டு அரசாங்கத்தால் கையேற்கப்பட்டு தற்சமயம் கோவில் அலுவலகமாகப் பயன்பட்டு வருகிறது. இந்தத் தொடர்புகள் யாவும் வெளிப்படுத்துவது, யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் மற்றும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் உள்ள தொடர்ச்சியான உறவுகளைத்தான். இந்தப் பின்னணிக்கு எதிராகத்தான் யாழ்ப்பாணத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட இந்துமத பக்தர் ஒருவாமீது சமீபத்தைய காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டதாகப் பார்க்க வேண்டியுள்ளது. எப்படியாயினும் அது வலியுறுத்துவது அதை தனித்துவமான ஒரு சம்பவமாகப் பார்க்கவேண்டும் என்பதையல்ல ஆனால் ஸ்ரீலங்கா மற்றும் ராஜபக்ஸ மீதான எதிர்ப்புகள் காரணமான கிளர்ச்சியின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலுள்ள தீவிரவாத இனவெறி சகத்திகள் மேற்கொள்ளும் தூண்டுதல்களாகவே பார்க்க வேண்டும். இதர பக்தர்களைப் போலவே திருக்குமார்; நடேசனும் பல வருடங்களாக நடத்தும் விசேட பூஜைக்காகவும் மற்றும் சினம் தணிவிக்கும் நோக்கத்துக்கான வேள்விகளுக்குமாக இராமேஸ்வரம் வந்துள்ளார். அவர் அப்படிச் செய்வது தன்னுடைய சுய நோக்கங்களுக்காக வேண்டியே. ஆனால் துரதிருஷ்டவசமாக அவருடைய இராமேஸ்வர விஜயம்  அவரைத் தாக்கிய கூட்டமாகிய சில அரசியல் சக்திகளினால் அவர் ஜனாதிபதி ராஜபக்ஸவுக்கு வேண்டியே பூஜைகளை நடத்துகிறார் என குற்றம் சாட்டும் விதத்தில் முற்றிலும் தவறாக விளக்கப்பட்டுள்ளது.

  14. thevan says:
    14 years ago

    சாம் தம்பிமுத்து அவர்களே! முதலில் பிரதேசவாதம் என்று சொல்லிப் பார்த்தீர்கள்.அது எடுபடவில்லை என்றவுடன் இப்ப திருந்தாத ஜென்மம் என்கிறீர்கள்.இத்தனை அழிவுகளுக்குப் பின்னரும் அதற்கு காரணமான இந்தியாவிற்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் திருந்தாத ஜென்மமா? அல்லது அந்த எதிரியை இனங்காட்டும் நான் திருந்தாத ஜென்மமா?இந்திய எதிரியை அதன் அக்கிரமங்களை மறைத்து அது தமிழ்மக்களுக்கு நண்பன் எனக் காட்டும் யதீர்திராவின் எழுத்துக்கள் “கைக்கூலி” என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது நண்பரே?மேலும் இனத்தைக்காட்டிக்கொடுக்கும் கருங்காலியை கைக்கூலி என்று அழைப்தற்கு நானும் ஒரு இலங்கைத் தமிழன் என்ற தகுதியைவிட வேறு என்ன தகுதி வேண்டும் நண்பரே?மீண்டும் சொல்கிறேன் 83ம் ஆண்டுபோல் மக்கள் முதுகில் சவாரி செய்யலாம் என கனவு காணாதீர்கள் நண்பரே!

    • RAJAN says:
      14 years ago

      ‘தன்மானம்’,இனமானம்’,..என்ற உணர்வு , போராடும் நரம்பு உள்ளவர்களுக்கு மட்டும் வரும். வெகுமானத்திற்காக எழுதுபவர்களுக்கு போராட்டத்தின் வீழ்ச்சியும் அவமானமாகத்தெரியும்.

      • சாம் தம்பி முத்து says:
        14 years ago

        யார் அப்பன் அந்த தன்மானம் இனமானம் உள்ள ஆக்கள். பிபரகாரன் மண்டையப் போட்டதும் பணத்தை எப்படி சுருட்டிக் கொண்டு அதற்காக சண்டை போட்டுக் கொண்டு இருப்பவர்களா? வெளிநாடுகளில் விஸ்கி அடித்துக் கொண்டு தேசியம் மாக்சியம் கதைத்துக் கொண்டு இருப்பவர்களா? யார் அந்த தன்மானிகள். உண்மையில் அப்படி யாராவது இருந்தால் உடனடியாக வந்து களத்தில் மகிந்திற்கு எதிராகவும் இந்தியாவிற்கு எதிராகம் போராடுவதுதானே. இப்படிக் கேவலமாக அடுத்தவர்களுக்கு பட்டம் சூட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு எவனும் எவளும் தன்மானம் பேச முடியாது. ஆனால் களத்தில் இப்போதும் இருந்து கொண்டு பேசுகிறாகளே அவர்கள்தான் உண்மையான தன்மானிகள். உழைப்பதற்காக ஜரோப்பிய நாடுகளுக்கு போய்ப் போட்டு அதுவும் புலியாலதான் ஆபத்தெண்டு சொல்லி அசைலம் எடுத்துப் போட்டு என்னப்பா தமிழ் தேசியம் மாக்சியம் எல்லாம்.  உங்களுக்கு தன்மானம் அப்படி ஏதாவது இருக்கிறதா? 

        இன்றைக்கு வெளிநாடுகளில் இருக்கும் முக்கால் வாசிப் பேர் புலியால ஆபத்தெண்டுதானே போனனிங்கள். புலிகளலாதான் நீங்கள் உங்கட மனிசி பிள்ளையளோட அங்கு சுகமாக வாழுறிங்கள். ஆனால் புலியால எல்லாவற்றையும் இழந்து போட்டு இறக்றதுகள் களத்தில் சொல்லொணா துயரங்களால் வதங்கினம். ஆனால் அவர்களின்ர பேரால நீங்கள் ஆடம் போடுறியள். அடுத்தவங்களுக்கு பட்டம் சூட்டிறியள். உண்மையிலேயே உங்களுக்கு எங்கட மக்களில் அக்கறையிருந்தால் இங்க வாருங்கோ. எல்லாத்தையும் விட்டுப் போட்டு வாருங்கள். ஆனால் சொல்லுவியள் மகிந்த அடிப்பான் என்டு. அவன் அடிப்பதான் இல்லாட்டி கொஞ்சுவானோ? அவன் அவங்கள் அடிக்கிறதாலாதானே இத்தனை அரசியலும் தேவைப்பட்டது. அடிய வாங்கிக் கொண்டு மக்களுக்காக போராடுங்க. அப்படி போராடித்தானே நீங்கள் எல்லாம் தன்மானிகள் சூடு சுறணை உள்ளவர்கள். கெதியா தமிழீழத்திற்கு வாருங்கோ. அந்தந்த நாட்டு குடியுாிமைய ரத்துச் செய்யுங்கோ. அப்படி நீங்கள் செய்தால் நீங்கள் மனிசர். இல்லாட்டி? 

        • RAJAN says:
          14 years ago

          ரொம்பத்தான் டென்ஷன் ஆகிட்டீங்களோ சாம். அங்க இருக்கும் உங்களைப் போன்றவர்கள் காட்டிக்கொடுத்ததாலே போராட்டம் அழிந்ததென்று கேள்வி. யதீந்திராவுக்கு எம்பி ஆகிற ப்ளான் போலக்கிடக்குது. சுமந்திரனோடும் நல்ல ஒட்டாம். போராட்டத்தை வைத்துதான் நீங்களும் அரசியல் பண்ணுறியள். கிழக்கு மாகணத்தில தமிழர்கள் துரத்தப்பட்ட போது புலிகள் இல்லையே அப்பு. திருமலையில் சிங்களக் குண்டர்கள் தமிழர்கள் வெட்டும்போது புலிகள் இல்லையே ஐயா. ஏதோ புலிகள் இல்லாவிட்டால் மகிந்தர் எல்லாவற்றையும் தூக்கித் தந்துவிடுவார் என்று கனவு காணாதேயும் சாம். அங்கு முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்படும் போது, நீங்கள் என்ன ரூபவாகினியா பார்த்துக் கொண்டு இருந்தனீர். மக்கள் சாரை சாரையாகக் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை புலிகள் அழிய வேண்டுமென இந்தியா போல் நீங்கள் சந்தோசமாக இருந்து விட்டீர். புலம் பெயர் நாடுகளில் குறைந்த பட்சம் மக்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் தோழரே? அண்ணன் எப்ப போவான் எப்ப திண்ணை காலியாகுமென்று பார்த்துக் கொண்டிருந்தீரோ?

  15. thevan says:
    14 years ago

    சாம் தம்பிமுத்து அவர்கள் ஒரு முற்றும் உணர்ந்த ஞானியோ என எண்ணத்தூண்டுகிறது.ஏனெனில் இங்கு கருத்து எழுதுபவர்கள் எல்லாம் யாழ்ப்பாணிகள் என்றும் அவர்கள் “பிரதேசவாதம்” பேசுகின்றனர் என்றும் கண்டுபிடித்தார்.அதன்பின் அவர்களை “திருந்தாத ஜென்மங்கள்” என்றார்.இப்போது வெளிநாட்டில் தண்ணி அடித்துவிட்டு வாய்வீரம் பேசுவதாக கண்டுபிடித்துள்ளார். எப்படி இப்படியெல்லாம் கண்டுபிடித்து எழுதமுடிகிறது? இதற்கு ஏதும் ஆதாரம உண்டா? என்று நாம் கேட்க முடியாது.
    இங்கு இப்பொழுது விவாதம் என்னவெனில் இந்தியாவுக்கு ஆதரவாக யதீந்திரா எழுதியது சரியா அல்லது அவரை நாம் இந்தியக்கைக்கூலி என்று அழைப்பது தவறா என்பது பற்றியே.ஆனால் இந்திய விசுவாசியான சாம்தம்பிமுத்து அவர்கள் அதற்கு சரியான பதிலை அளிக்கமுடியாத நிலையில் கருத்து எழுதுபவர்களை சூடு சொரணை இருந்தால் களத்திற்கு வாருங்கள் என சவால் விட்டு விவாதத்தை திசை திருப்ப முனைகிறார். இந்த சவாலை முன்பு புலிகள் மாற்றுக் கருத்தாளர்களுக்கு எதிராக பாவித்தார்கள்.அதாவது தாமே களத்தில் இருப்பதாகவும் எனவே தங்களைப்பற்றி கருத்துக்கூற மற்றவர்களுக்கு தகுதி இல்லை என்றார்கள்.இப்போது அதே சவாலை இந்திய ஆதரவாளர் விடுகிறார்.இதன் மூலம் இவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.இவ்வாறு தன்னை இலகுவாக புரிந்து கொள்ள இனங்காட்டியமைக்கு முதலில் எனது நன்றிகளை சாம் தம்பி முத்து அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவரிடம் நான் இரண்டு வினாக்கள் கேட்க விரும்புகிறேன்.முதலாவது நீங்கள் கேட்டபடி நாட்டில் களத்தில் இருந்து ஒருவர் இந்தியா எதிரி என்று கூறினால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? அல்லது நீங்கள் கூறுவதுபடியே இந்தியா எமது நண்பன் என ஒத்துக்கொண்டால் உங்கள் இந்தியா எப்போது? என்ன? தீர்வை எமக்கு பெற்றுத் தரும் என்பதை உங்களால் உறுதியாக கூறமுடியுமா?தயவுசெய்து சமாளிக்காமல் உங்கள் மனச்சாட்சிப்படி உண்மையான பதிலை தெளிவாக தரவும். (குறிப்பு- மாஓ சேதுங் அவர்கள் ஒரு மாக்சியவாதி நீருக்குள் இருக்கும் மீன் போல் மக்களுக்குள் இருந்து பணி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறாரேயொழிய வெளிநாட்டில் இருந்து புரட்சிப் பணி செய்வது தவறு என்று சொல்லவில்லை. இன்னும் தெளிவாக கூறினால் தோழர் லெனின் முதல் பல மாக்சிய தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டே தமது புரட்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளனர் .எனவே ஒரு மாக்சியவாதி எங்கே இருக்கிறான் என்பதல்ல பிரச்சனை.மாறாக அவன் என்ன செய்கிறான் என்பதே கவனிக்கத்தக்கதாகும்.மேலும் நாட்டில் வந்து போராட வேண்டும் என்று கூறவதன் மூலம் கிட்டத்தட்ட பத்து லட்சம் புலம் பெயர்ந்த மக்களின் பங்களிப்பை மறுக்கும் உங்கள் அரசியல் அறிவை என்னவென்று அழைப்பது? இன்று புலத்தில் மக்கள் பொராடுவது கோத்தபாயாவுக்கும் இந்தியாவுக்கும் அடக்க முடியாத தலைவலியாக இருக்கிறதாம்.அதே உணர்வு உங்களுக்கு வருவதன் மூலம் நீங்கள் யார் பக்கம் இரந்து விவாதிக்கின்றீர்கள் என்பதை எம்மால் இலகுவான இனம் காணமுடிகிறது.)

  16. அரிச்சந்திரன் says:
    14 years ago

    திரு. சாம் தம்பிமுத்து அவர்கள் முன்னாள் மட்டு M.P சாம் தம்பிமுத்து அவர்களை நினைவூட்டுகின்றார். குறித்த M.P அவர்களும் அக்காலகட்டத்தில் இந்திய ஏவலாள்தான்.

    இந்திய மேலாதிக்கம்தான் போராட்டத்தை அழித்தது என்பதில் ஒரு சாதாரண மனிதனுக்கு எவ்வித சந்தேகமுமிருக்க முடியாது. எனினும், எதிர்காலம் நோக்கிய பார்வையில் கட்டுரையாளரின் சில பகுதிகள் புறத்தொதுக்க முடியாதவை என்பதை வரலாறே எண்பிக்கும்.

    இங்கு திரு. சாம் தம்பிமுத்து அவர்கள் மிகவும் குள்ளத்தனமான மனிதராக காட்சிதருகின்றார். முதலில் எந்தவித அடிப்படையுமில்லாமல் பிரதேசவாதத்தை தூ(தோ)ண்டினார் அது வெற்றியடையாத போது களம் புலம் என்று கண்டபடி ஏதோவெல்லாம் கக்குகின்றார்.

    ஐயாமார்களே, புலத்தில் வாழும் தமிழர்கள் யாரேனும் ஆபிரிக்ககண்டத்திலிருந்தோ அல்லது ஆகாயத்திலுள்ள சந்திரமண்டலத்திலிருந்தோ வந்தவர்களல்லர் என்பதை முதலில் விளங்கிக்கொள்ளுங்கள். நேற்று களத்தில் நின்றவர் இன்று புலத்தில், இன்று களத்தில் நிற்பவர் நாளை புலத்தில் இதுதான் நியதி, இங்கு எவருக்கும் முடிந்த முடிவு இதுதான் என்று பட்டயம் எழுதி கொடுக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, இந்த பழம் புளிக்கும் மனநிலையில் விதண்டாவாத கூச்சல் வேண்டாம்.

    அன்று புலிகளின் பகுதிக்குள் வாழ்ந்த மக்களையும், புலிகளையேற்ற மக்களையும் பார்த்து அருவருப்புப்பட்டவர்களும் அவர்களுக்கெதிராக செயற்பட்டவர்களும் இன்று அவர்களை எங்கள் மக்கள் என விளிப்பது வேடிக்கையாகவுள்ளது. அதுமட்டுமின்றி, அவர்களுடன் வாழ்ந்து அவர்கள் இன்பதுன்பங்களில் பங்குகொண்டு சூழ்நிலையால் புலம்பெயர்ந்து நின்றாலும் அவர்களின் நினைவுகளுடனேயே வாழுவோரைப் பார்த்து தகுதியும் தராதரமும் அற்றவர்கள் எவ்வித கேள்விகளைக்கேட்கவும் முடியாது அது வலுவானதுமாக இருக்காது.

  17. veeran says:
    14 years ago

    அவர் அப்போது இந்திய ஏவளாள்,நீங்கள் சிங்களவரின் ஏவள்ளாக தானே அப்பொது இருந்தீர்கள், ஏன் அதை சொல்லாமல் ஒழிக்கின்றீர்கள், தனிநாடு இறுதி யுத்தம் என்று சேர்த்த பனம் எங்கே, சுவிஸ் பேங்கிலா அல்லது கொழும்பில் வீடா, உங்கள் போன்ற ஏமாற்று காரர்களை விட சாம்  தம்பி முத்து மேலானவர், காட்டி குடுத்த்து தேசிக்காய் தலையன், கடைசியில் சிங்களவர் அவனுக்கு கோவனம் உடுத்தி விட்டனர்

    • அரிச்சந்திரன் says:
      14 years ago

      வலது குறைந்த வீணன், குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டாமல் இருக்கும் களிமண்ணையாவது வைத்து புதிதாக ஏதாவது சிந்தித்து பின்னூட்டம் வரைய முயற்சிசெய்யப்பாரும், சும்மா அரைச்ச மாவையே அரைச்சிக்கொண்டு…

      • veeran says:
        14 years ago

        கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவிடில் தனி மனித தாக்குதல் தான், புலிகலின் பாணி அது தானே, சாம் தம்பி முத்துவை கொன்று விடுதலை பெறலாம் என்று எண்ணிய, வீனர்களின் வழி வந்த மேதாவி தாங்கள்

        • அரிச்சந்திரன் says:
          14 years ago

          ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, வீர….. அவர்களே, உங்கள் புண்ணாக்கு கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எமக்கில்லை. எப்போதும் முறையான கேள்விகளுடன் முட்டிமோதுங்கள் ராசா, அப்போது நிறையான வேள்விகளாய் உடனுக்குடன் பதில் வரும் லேசா.

          என்னதான் இருந்தாலும் உங்களைப்போன்றவர்களுக்கு விளங்கக்கூடிய ஒரே ஒரு மொழி புலிகள் மொழி மட்டுமே என்பதே எமது தீர்ப்பு.

          • veeran says:
            14 years ago

            புலிக்கும் விளங்குவது புலி மொழி தானே, அந்த் மொழிய்ல் தான் ரஜபக்ச  விளக்கினாராம், சயனைடை கழற்றி விட்டு சரனடைந்தவர்களுக்கு தான், அதாவது பீக்கு தான்

  18. அரிச்சந்திரன் says:
    14 years ago

    வீர..சிங்க மாத்தையா, ஒங்கோட தமுழ் சரியல்ல ஒழுங்கா கத்துக்கிட்டு எழுதுங்கோ. நாய்கள் அடிபட்டால் அதன் வாலும் அதன் கவுட்டுக்குள் வளைந்து கொள்ளும், புலிகள் அடிபட்டால் அதன் வாலும் கூட சிலிர்ந்தே நிற்கும், புலிகள் மொழி மீண்டும் கேட்கும்.

  19. veeran says:
    14 years ago

    வீர..சிங்க மாத்தையா, ஒங்கோட தமுழ் சரியல்ல ஒழுங்கா கத்துக்கிட்டு எழுதுங்கோ—- இதுவே பிழை, தாங்கள்  எப்போது தமிழ் ஒழுங்காக கற்கபாதக எண்ணம், 

    • அரிச்சந்திரன் says:
      14 years ago

      அடாப்பாவி, இவ்வளவு அப்பக்கோப்பையா நீர்.

      • veeran says:
        14 years ago

        அப்பக்கோப்பையா இது என்ன புது வார்த்தை, குமிழி, ஊந்துருளி, வெதுப்பகம், ஒட்டகம், போன்று தேசியதலைவர் கண்டு பிடித்ததோ

  20. veeran says:
    14 years ago

    ராஜனி திராணகம படுகொலை தொடர்பாக வெளிவராத உண்மைகள்! (இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது சஞ்சிகையில் வெளியாகிய கட்டுரை கீழே) என் சத்தியப்பதிவு 21 – 09 – 2005 எங்கள் மெடம் ராஜனி ஒரு கலங்கரை விளக்கு! 1989 ம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி, எங்கள் அன்புக்குரிய மெடம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டிற்கு போகும்போது வீதியில் வைத்து கோழைத்தனமாகசுட்டுக் கொல்லப்பட்டார். அவரையும் அவரது நேர்மையையும் நேருக்கு நேராக முகம் கொடுக்க முடியாத ‘தமிழீழ விடுதலைக் கோழைகள் முதுகுப் புறமாக வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தக்கோழைத்தனமான கொலையைக் கண்டித்து மருத்துவபீட மாணவர்களும் ஏனைய பல மாணவர்களும் எமது கைகளால் சுவரொட்டிகளை எழுதி யாழ்ப்பணம் எங்கும் ஒட்டினோம். அப்போது எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி எனக்குள் எழுந்த உணர்வை நான் பின்வருமாறு ஆங்கிலத்தல் எழுதினேன். இதுவும் ஒரு சுவரொட்டியாக அப்போது ஒட்டப்பட்டது Free Doom & Free Dump ist our Freedom…? இன்றோடு எங்கள் மெடம் கொல்லப்பட்டு 16 வருடங்கள் ஓடிவிட்டன. அவர் கொல்லப்பட்டு 15 வருடங்களின் பின்னராவது அவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப் பட்டிருப்பது மிகவும் நன்றிக்குரிய விடயம்தான். ஆனால் இன்னும் அவரைக் கொன்றவர்களைப் பற்றிய பல உண்மைகள் சரியாக வெளிவரவில்லை என்பதுதான் மிகக் கவலையான விடயமாகும். இதற்கு முக்கிய காரணம் எம்மிடமிருந்த தத்தமது உயிர் பற்றிய பயம் பிரதானமானதாகும். அதேவேளை நாம் உண்மைகளைச் சொன்னால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் எமது சமூகம் இருக்கிறதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இன்றல்ல 1989இல் மெடம் கொல்லப்பட்ட போதும்கூட அவரை யார் கொன்றார்கள் என்ற உண்மையை எமது சமூகம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதை நான் கண்டேன். அப்போதும்கூட பலருக்கு அந்த உண்மை தெரிந்திருந்தும் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளுவதற்கு துணிச்சல் இருக்கவில்லை. ஆனால் அந்த உண்மையை தமக்குள் மனதளவில் ஏற்றுக் கொண்டவர்களும் பலர் இருந்தார்கள் என்பதும் மறுபக்க உண்மைதான். அவ்வாறு உண்மை தெரிந்து உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். அன்று ஏனைய பலரைப் போன்று எனது உயிர், எனது எதிர்காலம் என்று நானும் இந்த உண்மைகளை எனக்குள் போட்டு அமுக்கிக் கொண்டேன். தற்போது நான் என் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடொன்றில் ஒரு வைத்தியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் நாட்டில் பல ஒடுக்கு முறைகளுக்கு மத்தியில் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களோடு ஒப்பிடுகையில் எனது எதிர்காலத்திற்கும் உயிருக்கும் இவ்வெளிநாட்டில் அதிக உத்தரவாதம் இருக்கிறது. அந்த வகையில் மெடத்தின் கொலை தொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை இன்றாவது வெளியிடடுவது எனது கடமை என்று நினைக்கிறேன். எமது அன்புக்குரிய மெடம் கலாநிதி ராஜினி திரணகம அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது நான் அங்கு மருத்துவபீட மாணவனாக இருந்தேன். அவர் எங்களுக்கு வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் எம்மை மிகத்திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள், நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார். அன்றைய கால கட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நடந்தவைகள் இப்போதும் ஓர் திரைப்படத்தைப்போல் என் மனதிற்குள் ஓடுகின்றன. இந்திய இராணுவத்தினரதும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்களினதும் கெடுபிடிகள் மிக அதிகமாக இருந்ததால் விடுதலைப் புலிகள் இயக்கம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தையும் தமது மறைவிடங்களில் ஒன்றாக பாவித்தார்கள். புலிகள் இயக்கத்தின் நபர்கள் மட்டுமன்றி அவர்களின் ஆயுதங்கள் கூட பல்கலைக்கழகத்திற்குள் சில ஊழியர்களினதும் மாணவர்களினதும் உதவியோடு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த உண்மை பல்கலைக்கழகத்தில் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பலருக்கும் தெரிந்திருந்தது. இதற்கு எமது மருத்துவ பீடமும் விதிவிலக்காக இருக்கவில்லை. இதனால் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களிடையேயும் விரிவுரையாளர்களிடையேயும் புலிகளைப்பற்றி பேசுவது மிக மிக அச்சம் நிறைந்ததாக காணப்பட்டது. இந்த அச்சத்தின் காரணமாக அன்று புலிகள் இயக்கம்தான் சில மருத்துவபீட மாணவர்களின் உதவியுடன் மெடம் ராஜினி அவர்களை சுட்டுக் கொன்றது என்ற உண்மையைப்பற்றி எவரும் வெளிப்படையாக பேசத் துணியவில்லை. அதுமட்டுமன்றி அக்கொலையைச் செய்தது இந்திய இராணுவம் அல்லது அவர்களோடு நிற்கும் ஏனைய ஆயுதக் குழுக்களில் ஒன்று என்ற பொய்யான கருத்தையே பலரும் பரப்ப முயற்சித்தனர். மெடம் அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மருத்துவ பீட மாணவர்களின் உதவியுடன் எமது வளாகத்திற்குள் நுழைந்து அவரை வேவு பார்த்தார்கள். மெடத்தோடு நெருங்கிப் பழகிய மாணவர்கள் பலருக்கு இவ்விடயம் தெரிந்திருந்தும் அதை எவ்வாறு வெளியிடுவது என்ற அச்சம் அவர்களிடம் காணப்பட்டது. அதே நேரம் இக்கொலையாளிகளை உள்ளே கூட்டிவந்த சில மாணவர்களும் கூட மெடத்தோடு மிக நெருக்கமாக பழகிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முக்கியமான இருவரை நான் இங்கு பெயர் குறிப்பிட விரும்புகிறேன். அவர்களில் ஒருவர் வடமராட்சியை சேர்ந்த சூரி எனப்படும் சூரியகுமாரன் மற்றவர் முல்லைத்தீவைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர்களாவர். புலிகள் இயக்கத்தின் உளவாளிகளும் கொலைகாரர்களும் சூரியோடும் தர்மேந்திராவோடும் மருத்துவபீட வளாகத்திற்குள் நின்று கதைத்து பேசுவதும் வளாக சிற்றுண்டிச் சாலையில் தேனீர் அருந்துவதும் அப்போது மிக வெளிப்படையான நிகழ்ச்சிகளாக இருந்தன. புலிகளின் சாவகச்சேரி பொறுப்பாளர் கேடில்சின் சகோதரரான காண்டீபன் என்னும் பிரபல கொலையாளியும்கூட தர்மேந்திராவோடு தேனீர் அருந்துவதை நான் பலமுறை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். 1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று, 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து மெடம் வெளியே வரும்வரை காத்திருந்த புலிகளின் உளவாளிகளில் ஒருவன் வீதியிலே தயாராக நின்றிருந்த கொலையாளிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்தான். அதைச் செய்தவன் வேறு யாருமல்ல. அங்கு பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வக்குமார் என்பவனே. மெடம் தனது சைக்கிளில் வளாக பிரதான வாசலால் வீதிக்கு இறங்கியதும் அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடைவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான். இந்த கொலையாளி யார் என்பதையும் நான் இங்கு சொல்லவேண்டும். புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றியவரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனே அவன். பொஸ்கோவை சாதாரண மக்களில் பலருக்கு தெரியாது. ஆனால் மெடம் கொல்லப்படுவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பொஸ்கோவினதும் இன்னும் பல சந்தேகமான நபர்களினதும் நடமாட்டம் மருத்துவ பீடத்திற்குள் அதிகரித்திருந்தது. பொஸ்கோவிற்கு வயது 30 – 35 இடையில் இருக்கும். எப்போதும் மற்றவர்களை சந்தேகத்தோடு குரோதத்தோடும் பார்க்கும் அவனது விறைப்பான முகமே அவனைக் காட்டிக் கொடுத்து விடும். இந்த பொஸ்கோ சூரியோடும், தர்மேந்திராவோடும் அமர்ந்து வளாக சிற்றுண்டி சாலையில் தேனீர் அருந்துவதை நானும் பல மாணவர்களும் கண்டிருந்தோம். முதலில் எனக்கும் இவன் யார் என்று தெரியாது. எம்மோடு படித்த ஒரு மாணவனே எங்களுக்கு பொஸ்கோ யார் என்ற உண்மையைச் சொன்னான். மருத்துவ பீடத்திற்குள் இவனின் நடமாட்டம் பல தடவைகள் இருந்ததை நானும் சக மாணவர்களும் கண்டிருந்தோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கொலை நடக்கும்போது அச்சம்பவத்தை நேரில் பாக்த்த ஓர் மாணவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். அந்த மாணவனும் நானும் ஒன்றாக திரியும்போதும்கூட பல தடவை பொஸ்கோவை நாம் கண்டிருக்கிறோம். அன்று அந்த மாணவனும் நாங்களும் இணைந்து, ‘புலிகள் இயக்கமும், அதன் கொலையாளி பொஸ்கோவும், அவனுக்காக உளவு வேலை செய்த சூரிய குமாரனும் தர்மேந்திராவும்தான் மெடத்தின் கொலைக்கு பொறுப்பு’ என்று கூறியிருந்தால் நாங்கள் ஒருவரும் இன்று உயிருடன் இருக்கமாட்டோம். எனவே என் சக மாணவன் கண்ணால் கண்ட அந்தக் கொலையை யாரிடமும் வெளியே சொல்லாதே என எச்சரித்தவர்களில் நானும் ஒருவன். மெடம் கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்டபொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்தவர்கள் யார் என்று நன்றாக தெரியும். சூரி, தர்மேந்திரா ஆகிய இருவரோடும் நெருங்கி பழகியவர்களும், புலிகளின் கொலைகார அரசியலுக்கு ஆதரவாக இருந்த பல மருத்துவபீட மாணவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரியும். மெடம் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி மருத்துவ பீடத்திற்குள் பரவியதுமே சூரி, தர்மேந்திரா உட்பட அவர்களின் நண்பர்களின் முகங்களை நான் பார்த்தேன். அவர்களின் முகங்களே உண்மையை தெளிவாக வெளிப்படுத்தின. அவர்களைக் காட்டிக் கொடுத்தன. எனது கண்களைக்கூட அவர்களால் நேரடியாக பார்க்க முடியவில்லை. தங்களுக்கு கல்வியை போதித்து வழிகாட்டி, எதிர்கால மாணவ சமூகத்திற்கு கலங்கரை விளக்காக நின்ற அந்த ஒப்பற்ற மேதையை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் இன்று வெளிநாடுகளில் சுகம் அனுபவிக்கிறார்கள். சூரியகுமாரன் இன்று இங்கிலாந்தில் வைத்தியசாலை ஒன்றில் வேலை செய்கிறான். அன்று அந்த தாயின் இரு குழந்தைகளை அநாதையாக்கிய இக்கொலைத்திட்டத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவனாகிய இவன், இன்று தான் உயிர்களைக் காப்பாற்றும் வைத்தியனாக வேஷம் போடுகிறான். இவர்கள் நாளைய சமூகத்தில் பெரிய மனிதர்களாக உலவ நாம் அனுமதிக்கலாமா? இந்த நாகரீக உலகத்தின் முன்னால் இவர்களை நிறுத்தி அம்பலப்படுத்த வேண்டாமா. நிட்சயம் அதை நாம் செய்ய வேண்டும். எனது அன்புக்குரிய சக மாணவர்களே நாம் நீண்டகாலம் மௌனமாக இருந்துவிட்டோம் எமது கண் முன்னால் நடத்தி முடிக்கப்பட்ட இந்த அநியாயத்தை மூடி மறைக்க புலிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் இன்னமும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நடந்த உண்மை வரலாற்றில் புதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நான் இங்கு இதைப் பதிவு செய்கிறேன் இது தொடர்பாக நீங்களும் உங்களின் மனட்சாட்சியின் அடிப்படையில் உண்மையை சமூகத்தின் முன் வைக்க கோரிக்கை விடுக்கிறேன். 1989ம் ஆண்டில் யாழ். மருத்துவபீட மாணவன் (http://www.nichamam.com/​2009_09_01_archive.html)

    • simeon says:
      14 years ago

      நண்பா, இது பேசஸ்பூக் விமர்சனம்:
      ஸ்ரி றன்கன் Vஇஜயரட்னம்

      எத்தனையோ மக்கள்-போராளிகள்,தலைவர்கள்,கல்வியாளர்களெனப் பலரும் ஏதோவொரு வகையில் கொல்லப்பட்டனர் தமிழீழ விடுதலைப்போராட்டத்தால்.ஆனால்,இந்த ராஜினி தரிணகமவை முன்தள்ளித் தள்ளியே ஒரு அரசியல் விரிகிறது.இது யாருக்காக-எந்தக் குடும்பத்துக்காக?மக்களை மொட்டையடிக்கும் ஒரு அரசியல் மெல்ல நெருங்குகிறது.அதற்குள் தமிழ்கத்தோலிக்க மேட்டுக் குடிகள் மெல்லத் தலை காட்டுகின்றனர்…
      அதோடு விடியொ:http://www.youtube.com/watch?v=Y8nYBvlF3fc&feature=youtu.be

      • thamizhan says:
        14 years ago

        சிமியோன் உங்கள் யு-டியூப் வீடியோவைப் பார்த்த பிறகுதான் எனக்கு உண்மை விளங்கியது,நம்ம வெத்து “வீரனையும் “விசர்நாய் கடித்தது என்று. அதுதான் இப்படிப் புலம்பி அலம்பித் திரியிறார். அதுவும் மகிந்த எங்கிற விசர்நாய் கடித்துவிட்டது அவெரை. உங்கள் இணைப்புக்கு மிக்க நன்றி

        • veeran says:
          14 years ago

          இந்த கொலைகலை செய்யும் போது தனக்கும் இத்வே நடக்கலாம் என்று தேசிக்காய் எண்ணவில்லை, இறுதியில் எதிட்ரியிடம் கையூட்டு பெற்று எதிரியையே பதவிக்கு கொண்டு வந்து, அவனிடமே சரணாகதி அடைந்த கேவலம் எல்லாம், இந்த கொலைகலால் வந்த வினையே, அந்த விசர்நாய் அழிந்த பின்பு தான் தமிழ் மக்கள்நிம்மதி அடைந்தார்கள்

        • mahen masil says:
          14 years ago

          ஒரு மனித படுகொலையை அதுவும் விரல் விட்டு எண்ணக்கூடிய
          புத்திஜீவிகளில் ஒருவரின் கொலையை இவ்வளவு கேவலமாக 
           நியாயப்படுத்தும் நீங்கள் எந்த படுகொலை பற்றியும் கருத்து கூற
          தகுதியற்றவர்கள். தாராக்கி போன்றவர்களுக்கு ‘மாமனிதர்’ பட்டம்
          வழங்கத்தான் லாயக்கு.

        • veeran says:
          14 years ago

          அந்த விசர்நாய் உங்கள் தேசிக்காய் தலை தான்

          • Selvan says:
            14 years ago

            இவ்வளவும் தெரிந்த வீரா எனகுத்தெரிந்தவரை ராஜனியின் கொலையாளி உங்கள் மருதுவபீட மாணவன்தான். ஏன் அவரை நீங்கள் அடையாளம் காண மறுக்கிறீர்கள். ஒரு பிஎச்டியோட லண்டனிலிருந்துவந்துட்டா மலையோட போயி மண்டய முட்டிக்கலாம் என்று எண்ணி தன்னை தானே மாய்த்துகொண்டார் ராஜினி. மிகவும் நல்லவர் ஆனால் தனது மணவாழ்க்கையை வெற்று கொள்கைகளுக்காக தொலைத்தவர். நடைமுறை வாழ்கையை அறியாதவர். வேறு என்ன சொல்லமுடியும். தராகியின் தரம் தெரியாமல் பிதற்றுகிறார் மகேன் மாசில்.

          • அரிச்சந்திரன் says:
            14 years ago

            Selvan அவர்களே, veeran எனும் வீணனைப்பார்த்து உங்கள் மருதுவபீட மாணவன்தான் என விளிப்பதற்கு என்ன அருகதையிருக்கு மருதுவபீட என்ற சொல்லுக்கும் வீணனுக்கும் எட்டா தூரம்.

  21. கணேஷ் says:
    14 years ago

    இந்தியாவின் வரலாற்று எதிரிகளான சீனா, பாகிஸ்தான் நாடுகளின் உதவியைக் கொண்டு, கொழும்பு யுத்தத்தைத் தீவிரப்படுத்த எத்தனித்த வேளையில், இந்தியா தனது பிராந்திய நலன்களைப் புறம் தள்ளி இயங்க முடியாத நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியது என்பதே உண்மை… யதீந்திரா

    இந்தியாவின் எதிரிகள் ஒரு நாட்டுக்கு உதவினால் இந்தியா அந்த அரசை தான் எதிர்க்க புலிகளுக்கு உதவியிருக்க வேண்டும்.தனது எதிரிகளுடன் சேர்ந்து ஏன் புலிகளை அழிக்க வேண்டும் ? இந்த அடிப்படை கேள்வியே யதீந்திரவுக்கு ஏன் புரியவில்லை.
    புலிகளின் அபிமானிகளின் நிலைமை பரிதாபத்திர்க்குரியதாக உள்ளது.நேற்றுவரை புலிகளை போற்றியவர்கள் ,இன்று அவர்கள் தோற்றதும் அவர்களை இகழ்வதுமாக இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் இந்த யதீந்திராவும். பாவம்.
    பாவம் பொடியன் தான் ஒரு மேதாவி என்ற எண்ணத்தில் [ யாரோ [கவிஞர் வில்வரத்தினமோ ] அவருக்கு நல்லா குஞ்சம் கட்டி விட்டிருக்கின்றனர் ]ஏதேதோ புலம்பிருக்கிறார்.

  22. chandran.raja says:
    14 years ago

    அரிச்சந்திரன் போன்ற முள்ளிவாய்கால் கேடிகளால் இனியொரு தேடிய சம்பாத்தியத்தைக் கூட இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இப்படித் தொடர்ந்தால் மக்கள் தமது கருத்துக்களை சொல்ல-நெருங்க கூச்சப் படுவார்கள் என்பதில் சந்தேகமும் இல்லை.

    அரிச்சந்திரன் போன்றவர்களால் தான் தணிக்கையும் தேவைப்படுகிறது என்பது தெளிவாகிறது.இல்லையேல் பு.சு.வில் தான் முடிவடையும். யாருக்கும் கருத்துக்கள் சென்றடையாது. பங்கர்ராஜவின் ஆட்சி போல்.

    • veeran says:
      14 years ago

      அவர் அரிச்சந்திரன் என்ற பெயரில் சொல்வதெல்லாம் பொய், அவரது வார்த்தைகள் அவர் புலிகலின் குரலில் பேசுவதை காட்டுகின்றது, மொழி ஆள்மை அவரது தகுதியை காட்டுகின்றது,

      • thamizhan says:
        14 years ago

        வெத்து வீரன் ,நீர் மட்டும்கோழையாய் இருந்து கொண்டு வீரன் என்று பேர் வைத்து பேரின்பம் அடையலாமோ. உ ண்மையிலேயே நீர் ஒரு வீரன் எண்டால் , தமிழ் மக்களுக்குநடந்த,நடக்கின்ற கொடுமையைத் தடுக்கப் போராடி இருக்கணும். அப்படி போராடி இருந்தால் நீர் இறந்து அந்த இடத்தில் புல்லொ, செடியோ இன்றைக்கு முளைத்து இருக்கும். ஏன் என்றால் தமிழ்மக்களுக்காக உண்மையாகப் போராடிய எவரையுமே சிங்கள, இந்திய ஆதிக்க சக்திகள் விட்டு வைப்பதில்லை. இனியாவது மற்றவர்களின் முதுகின் அசுத்தத்தைப் பார்த்து கேலி பேசுவதை விட்டு உமது சொந்த அசிங்கத்தைப் போக்க வழி தேடவும். கூடவே வீரன் என்ற உமது கனவுப்பெயரை மாற்றி , கோழை என்ற நியப்பெயரை வைக்கவும். 🙂 😀

        • chandran.raja says:
          14 years ago

          தமிழ் மாணிக்கமே! தமிழ்மக்கள் இரண்டு சகாப்தத்திற்கு மேலாக சொல்லாத் துயரங்களை அடைந்தது புலத்தில் வாழ்வுதேடி வந்த பத்துமில்லியன் தமிழ்மாணிக்கங்களால் தான். இல்லையேல் வங்கிக்கொள்ளைக்காரன் கொலைகாரன் என்கிற பெயரோடு ஒருசில வருடங்களில் அழிக்கப்பட்டிருக்கும்
          மேற்கத்திய சினிமாப்பாணியில் திறில் விளையாட்டுகளை காட்டி மக்களை புறந்தள்ளிவிட்டு அதற்கு தமிழீழம் எனப் பெயருமிட்டு இறுதியில் வன்னிமக்களை கடத்தி முள்ளிவாய்கால்வரை சென்று வெள்ளக்கொடியும் பிடித்து சந்ததியும் அழிந்து போனது உம்மைப் போல் ஏராளமான சுத்தமான தமிழர்களால் தான்.
          இந்த சுத்தமான தமிழன் அப்பாவிதமிழனையும் ஏழைஎளிய தமிழனையும் சுட்டுதின்று வாழ்வு நடத்தப் பிறந்தவன். ஏய்! தமிழனே! இந்த உண்மை உமக்கு உறைக்குமா? உறைத்தால் தீயா குளிக்கப்போகிறீர்? அதற்குள் வீரத்திற்கு வியாக்கியாணமும் வேறையா?

          • thamizhan says:
            14 years ago

            புலம்பெயர் ஈழத்தமிழர் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்லர். அவெர்களும் ஈழத்தில் இருந்து வந்தவர்களே. அவெர்கள் ஈழதமிழரது உணர்வைப் பிரதிபலிப்பவர்களே.புலம்பெயர் மண்ணில் எல்லா வசதிகள் இருந்தும் அவெர்கள் தாய்மண்னை மறக்கவில்லை என்றால் அவெர்கள் உங்களை விட தேசப்பற்று அதிகம் உடையவ்ர்கள்தான்.

        • veeran says:
          14 years ago

          னாங்கள் இங்கே போராடி சாகிறோம்நீங்கள் ஓடி ஒழிந்து லன்டனில் வாழுங்கள், அதனை தானே உங்களால் செய்ய முடியும், எங்கள் மட்டுனகர் குழந்தைகளை ஏமாற்றி கடத்தி வன்னியிலும் யாழிலும் பழி கொடுதவர் தானே நீங்கள்,நிங்கள் ஏன் போராடமல் லன்டனுக்கு ஒடினர்

          • thamizhan says:
            14 years ago

            வெத்து வீரா…….நாடு , அதைநாடாவிட்டால் உனக்கு ஏதுடா வீடு.நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட் காதே ,நாட்டிற்குநீ என்ன செய்தாய் என்று கேட்டுப்பார். உன் சொந்த மண்ணுக்காக ஒரு தடியைக் கூட்டி எடுத்துப் போட்டிருக்க மாட்டய், என்னையா கேட் கிறாய்,நீ என்ன செய்தாய் என்று கோழையே.உங்கள் மட்டுனகர் குழைந்தகளை ஏமாற்றி போராக் கொண்டு வந்தது ,நாம் அல்ல உங்களது அருமைய்த் தள்பதி, சூடு , சொரணை , மானம், ரோசம் உள்ள கருணாவே. போய் ஏன் என்று அவெனிடம் கேளுங்கள்.( மன்னிகணும்நான் லண்டனில் இல்லை )

  23. நெருஞ்சி says:
    14 years ago

    “சம்பாத்தியம்” என்பது முதலாளித்துவ “வினை”.
    “தணிக்கை” என்பது கம்யுனிச “அராஜகம்”.

    இனியொருவை சந்திரன் ராசா! என்ன குத்தகைக்கு எடுத்திருக்ககிறீரோ!

    மற்றக் கருத்துகளை மறிச்சு,எங்கேயோ காப்பியடிச்சுப் பாடுற,உங்கிட பிலாக்கணத்தை மட்டும்,வாறவை கேட்கோணுமே ராசா!.
    ஆயிரம் மலர்கள் மலரட்டும் ராசா! மலட்டுக்கு வாழ்க்கைப்படத் துடிக்காதேயுங்கோ மோனே!

    • veeran says:
      14 years ago

      சா!.
      ஆயிரம் மலர்கள் மலரட்டும் ராசா! மலட்டுக்கு வாழ்க்கைப்படத் துடிக்காதேயுங்கோ மோனே!  னல்ல யாழ்ப்பாண பாசை, 

    • chandran.raja says:
      14 years ago

      என்னே அறிவு! என்னே தத்துவ வழிகாட்டல்.
      ஆயிரம் மலர்கள்.-. காத்திருக்கும் பெறுமையுள்ள நெருஞ்சி இந்த உதவாக்கரை மலரை மலரவிட மறுப்பது ஏனோ?
      பலநுற்றாண்டு காலத்திற்கு முன்பு இருந்த அறிஞர்கள் தேடியதேட்டத்தில் தானே மனிதகுலம் பயணம் செய்து கொண்டிருக்கிறது. கம்யூனிசம் நெருஞ்சிக்கு முள்ளாகக் குத்தலாம் தேவைப் படாமலும் போகலாம். அவஸ்தையும் கொடுக்கலாம். ஆனால் அது அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்கு தேவைப் படுகிறது. உனக்கிருக்கிற உரிமை எனக்கும் வேண்டுமென்கிறது. இல்லையென்றால் பலாத்கார பறிக்கிறது. இல்லை தோல்வி கண்டாலும் இறுதியில் வெற்றி கண்டே தீரும். இதுவே அறிஞர்களிடம் தேடிய சம்பாத்தியம்.

      தமிழ்மக்களின் உரிமை என்கிற பேரில் முப்பதுவருடங்கள் எதிரியை யார் என்று தெரியாமல் தமிழ்மக்களின் உடமைகளையும் அழித்து அறிவாளிகளையும் கொலை செய்து இறுதியில் “சர்வதேசியம் என்றால் என்ன?” “இயங்கியல்” என்றால் என்ன? என்று அரிச்சந்திர மகா ராசா மயாணத்தில்… தமிழ்மக்களை நிறுத்தியதும் ஏதோ ஒருவிதத்தில் தணிக்கை இல்லாமையிலாலேயே!. ஆக நெருஞ்சி இந்த மலரும் பூத்துவிட்டு போகட்டும் என்று விடுவது தான் உங்கள் மட்டயறிவுக்கு மலர்போன்று அழகானது.

  24. அரிச்சந்திரன் says:
    14 years ago

    கம்யூனிச முகமூடி மாட்டிய ச்கன்ட்ரன்.ரஜ, கூரையேறி கோழி பிடிக்க முடியாமல் குப்பற விழுந்து நீங்கள், வானமேறி வைகுந்தம் போவது எப்படியென்று ம(ற்)றவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம். வாய்ப்பாடு மாதிரி நாலு பொ(பு)த்தகத்தை விழுங்கி விட்டால் அறிவும் தெளிவும் ஆகாச(ய)ம் அளவிற்கு ஆகிவிட்டது என்ற கற்பனையை கலையுங்கள்.

    தாங்கள், பலாத்காரம் செய்வார்களாம் தணிக்கையும் செய்வார்களாம் ஆனால், ஆண்டாண்டு காலமாக மண்டைக்குள் அலுப்பும் தொண்டைக்குள் சுழுக்கும் இல்லாமல் அதை புலிகள் செய்கிறார்கள் புலிகள் செய்கிறார்கள் என்று ஓயாமல் ஒப்பாரி வைப்பார்களாம்.

    தாங்கள் தோல்வி கண்டாலும் இறுதியில் வெற்றி கண்டே தீருவார்களாம் ஆனால், புலிகள் மட்டும் தோல்வி கண்டால் பதுங்கியிருக்கும் பல்லிகள் போல் பழிகள் மேல் பழிகள் சொல்லி பல்லைக்காட்டி இளிப்பார்களாம்.

    அவர்களின் பலாத்காரம் என்பது பலகாரம் சுட்டு படையல் வைப்பதுவும், தணிக்கை என்பது கோணிப்பை கொண்டு கொத்தவரங்காய் பறிப்பதுமாக்கும்.

    • chandran.raja says:
      14 years ago

      உலகத்தின் நான்காவது பெரியராணுவத்தை ஓடஓட விரட்டி அடித்து கலைத்துவிட்டு வன்னிக்காட்டுக்குள் இருந்து அப்பாவி விவசாயிகளிடம் இராஜதானி அமைத்து கொண்டுவிட்டு புலம்பெயர்நாட்டுக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரிய வீரமறத்தமிழர் பரம்பரையில் வந்த மறவர்கள் அல்லவா நீங்கள் அரிச்சந்திர மகாராசாவே! அடுத்ததாக எந்த வல்லரசை புறமுதுயிட்டு ஓடப்பண்ணுவதாக உத்தேசம்? ஓடப்பண்ணுங்கள். உண்டியல் குலுக்காமல் ஏழைகளுக்கு அப்பாவிகளுக்கும் குண்டையும் சயினட்டை குடுத்து முன்னுக்கு தள்ளிவிட்டு இங்கிருந்து தொலைக்காட்சிபொட்டிக்கு முன்நின்று வெள்ளி பார்க்காமல் மணைவிமாரையும் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு முன்வரிசையில் நில்லுங்கள்.
      இருந்தும் ஒரு அன்பான வேண்டுகோள்: வைகுந்தம் போகும் போது வெள்ளைக்கொடியை விட்டு போங்கள். நாங்கள் இங்கு கூரை ஏற “றெயினிங்” எடுக்கிறோம்.

      • அரிச்சந்திரன் says:
        14 years ago

        நன்றி chandran.raja, இதுதான் உண்மையான உங்களின் ஒரு பகுதி. எனவே,இனியாவது மேதாவித்தனமாக மேடையில் நிற்காதீர்கள் சதா போலி கம்யூனிச பாட்டுப்பாடிக்கொண்டு.

        • chandran.raja says:
          14 years ago

          உண்மையை தெரிந்தவனுக்கு அல்லவா போலியை இனம்கானமும் தெளிவிருக்கும்? ஈழத்தமிழரும் புலியியக்கமும் தான் நிஜமானவையா அரிச்சந்திரா? இப்படி தான் நித்தமும் குண்டுசட்டிக்குள் குதிரைசவாரி விட்டுக் கொண்டிருக்கப் போகிறீர்களா?.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...