ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பூஞ்ச் பகுதியில், இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இடையே நேற்று முன்தினம் விடிய விடிய துப்பாக்கிச்சண்டை நடந்தது.
எல்லையில் தீவிரவாதிகள் குழு ஊடுருவ முயற்சிகள் நடைபெற்றதாகவும், இதை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நாட்டு ராணுவம் கூறி வருகிறது.
எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்காக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில், பிரிகேடியர் அந்தஸ்திலான இரு நாடுகளில் கமாண்டர்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கஷ்மீரில் சுயநிர்ணய உரிமை கோரிப் போராடிவரும் குழுக்கள் பாகிஸ்தானை தளமாகப் பயன்படுத்தி வருகின்றன என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், தற்போதைய நிலைமைகள் வேறுபட்டவை.
அமரிக்கா மற்றும் அதன் மனித உரிமைக் கூறுகளான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகண்காணிப்புச் சபை போன்றன பாகிஸ்தான் மீது மனித் உரிமை யுத்தம் ஒன்றையே கட்டவிழ்த்துவிட்டுள்ளன.