21.11.2008.
உலகப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நிதியத்துக்கு 100 கோடி டாலர்களை ரஷ்யா வழங்கும் என்று ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின் கூறினார்.
ரஷ்யாவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய ரஷ்யா கட்சியின் வருடாந் திர பொதுக்குழு கூட்டத் தில் வியாழனன்று புடின் உரையாற்றினார். உலகப் பொருளாதார நெருக்கடி யால் துயருறும் நாடுக ளுக்கு உதவுவதற்காக 1000 கோடி டாலர்கள் அளிக்கப் படுகிறது என்று அவர் தெரி வித்தார்.
ரஷ்யப் பொருட்களை வாங்குவதற்கும், சேவைக ளைப் பெறுவதற்கும், சீனா வுக்கும் இந்தியாவுக்கும் ரஷ்யா கடன் அளிக்கும் என்றும் அவர் கூறினார். அந்நிய வர்த்தகத்தை மேற் கத்திய நாடுகளில் இருந்து கிழக்கு நோக்கி (ஆசி யாவை) திருப்பும் வியாபார உத்தி மாற்றம் இது என் றும், தீவிரமான ஏற்றுமதி கொள்கைகளை ரஷ்யா பின்பற்றும் என்றும் புடின் குறிப்பிட்டார்.
ரூபிளின் மதிப்பை நிலை நிறுத்தவும், பணவீக்கத் தைக் கட்டுப்படுத்தவும், நெருக்கடியைச் சமாளிக்க வும், ரஷ்யாவின் பெரும் நிதி இருப்பு உதவிடும். ரஷ்யப் பொருளாதாரத்தின் போட்டி திறனை வலுப்படுத்தவும், உலகப் பொருளாதாரத்தில் ரஷ்யா புதிய இடத்தை அடையவும் உலகப் பொரு ளாதார நெருக்கடி வாய்ப்பு அளித்துள்ளது. கட்டுமா னத் துறை, விவசாயம், எந் திரங்கள் கட்டுதல் மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கு நிதி ஆதாரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நிறுவனங்கள் திவாலா வதைத் தடுக்க பாதுகாப்புத் துறைக்கு 182 கோடி டாலர்கள் அளிக்கப்படும். தற்போதுள்ள நிறுவன லாப வரி 2009 ஜனவரி முதல் 24-லிருந்து 20 சதவீத மாககக் குறைக்கப்படும்.
இதன் மூலம் வர்த்தகத் தில் 40 ஆயிரம் கோடி ரூபிள்கள் அதிகமாகப் புழங்கும்.
1991 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் ரஷ்யா சந் தித்த பொருளாதார நெருக் கடி மீண்டும் ஏற்படாமல் இருக்க ரஷ்யா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று புடின் தம் உரையில் குறிப்பிட்டார்.