இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தலைமையிலான பாதுகாப்பு குழுவொன்று பாகிஸ்தானுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக பாகிஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ் விஜயத்தின் போது இலங்கை பாதுகாப்பு தூதுக்குழுவினர் பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலளர் கம்ரன் ரசோல் , லெப்டினன் ஜெனரல் ஷாஹீட் சித்தீக் மற்றும் பாதுகாப்பு பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தரப்பிலிருந்து அழுத்தம் பிரயோகிக்கப்படும் சூழ் நிலையில் பாக்கிஸ்தானின் ஆதரவை நாடும் முயற்சியே இது என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டனர்