அமெரிக்காவில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: இந்தியாவில் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) மின்சாரம், தொலைத் தொடர்பு, துறைமுகம், விமான நிலையம், பெட்ரோலியம், சுரங்கம் போன்ற உள்கட்டமைப்பு முதலீட்டாளர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை இந்தியா ஏற்படுத்தி தந்துள்ளது. எனவே, இத்துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்ய வேண்டும். அண்மையில், இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டினர் நேரடியாக முதலீடு செய்ய ஏதுவாக விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதை பயன்படுத்தி, இந்திய உள்கட்டமைப்பு துறையில் அதிகமான வெளிநாட்டினர் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு பிரணாப் தெரிவித்தார்.
இந்தியாவை அன்னிய முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய பிரணாப் முகர்ஜி நேரடி அழைப்பு விடுக்கிறார். ஏற்கனவே இந்தியாவின் வளங்களை அன்னிய மூலதனத்திற்கு அடகுவைப்பதற்காக ஆயிரக்கணக்கான படுகொலைகளை தண்டக்காரண்யா காடுகளில் இந்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.