இந்தியாவைக் கேலிசெய்த அமரிக்கா

ஜெனிவாவில் உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் நடை பெற்று வருகின்றன. வழக்கம் போல வளர்ந்த நாடுகள் பிடிவாதம் பிடித்து வருகின்றன.

தங்கள் நாடுகளில் வழங்கப்படும் மானியம் மற்றும் சலுகைகளை நீக்குவதற்கு மறுத்துவரும் அதே வேளையில், மற்ற நாடுகள் சலுகைகளை நீக்கிக் கொள்ள வேண்டும் என்று இரட்டை வேடம் போட்டு வருகின்றன. இந்த முகாமுக்கு அமெரிக்கா தலைமை தாங்கி வருகிறது.

இந்த விவாதத்தில் கலந்து கொண் டுள்ள இந்தியாவின் வர்த்தகத்துறை அமைச்சர் கமல் நாத், உலக வர்த்தக அமைப்பின் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா பங்கேற்க வேண்டுமானால் மானியங்களை அமெரிக்கா உள் ளிட்ட நாடுகள் விலக்க வேண்டும் என்று கோரினார். ஆனால், சடங்குக் காக எதையாவது குறைத்தால் கூட ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்றும் கோடிட்டுக் காட்டினார்.

ஒரு டாலர் மானியத்தைக் குறைப்பதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து பரிசீலனை செய்வோம் என்று கூறினார். வளரும் நாடுகளில் நியாயமான, ஏன் கமல்நாத் கடைசியாகக் கொடுத்த மோசடி ஆலோசனையைக் கூட காதில் போட்டுக் கொள்ள அமெரிக்கா தயாரில்லை.

கமல்நாத்தின் ஆலோசனையைக் கேட்ட வுடன் அவரைக் கிண்டல் செய்யும் வகையில் ஒரு கவரில் டாலர் நோட்டு ஒன்றைப் போட்டு கொடுத் துள்ளார் அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஹென்றி பால்சன்.