இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் நூற்றுக்கணக்கானவர்கள் மாடு கடத்தியதாகவும் மாட்டுக்கறி உண்டதாகவும் கொல்லப்பட்டுள்ளார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்கள்.
இக்கொலைகளில் ஈடுபடுகிறவர்கள் இந்து அடிப்படைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். உத்தரபிரதேசம், சடீஸ்கர், பீகார், ராஜஸ்தான் என இந்துத்துவத்தின் செல்வாக்கு மண்டலங்களில் இந்த கொலைகள் அதிகம். இந்த கொலைகளைத் துவங்கி அதை ஒரு பிரச்சார வடிவமாகச் செய்த பாஜகவினர்.பின்னர் பசுவதைச் சட்டம் என்ற ஒன்றை பாஜக ஆளும் மாநிலங்களில் கொண்டு வந்தார்கள். சட்டீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகம் என பெரும்பான்மை மாநிலங்களில் பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
பின்னர் சில மாதங்கள் இந்த கொலைகள் இல்லாமல் இருந்தது. ஆனால் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதனையொட்டி உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மாடு கடத்தலின் பெயரால் சிறுபான்மை மக்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் ஒரு முஸ்லீம் பெரியவர் துன்புறுத்தப்பட்டார். அதை விடியோவாக எடுத்து இந்துத்துவக் குழுக்கள் பரப்பி விட்டார்கள். இந்த வழக்கில் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் இந்த விடியோவை பரப்பியதற்காக ட்விட்டர் நிர்வாகத்தின் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் திரிபுரா மாநிலத்தின் திரிபுரா மாநிலத்தில் இருக்கும் நமஞாய்புரா கிராமத்தில் சிலர் மாடுகளைக் கடத்துவதாகக் கூறி சில முஸ்லீம்களை கிராம இந்துக்கள் தாக்கினார்கள். இதில் ஹோசின், பிலால் மியா, சைஃபுல் இஸ்லாம் என மூவர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் சைஃபுல் இஸ்லாம் வயது 18. இந்த வழக்கில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் 30 பேர் பசுவின் பெயராலும் மாட்டிறைச்சியின் பெயராலும் கொல்லப்பட்டுள்ளார்கள்.முஸ்லீம்கள் மிகவும் அச்சமடைந்துள்ளார்கள்.