08.03.2009.
இந்தியாவில் மாந்தரே மலம் அள்ளும் நிலையை ஒழிக்க வேண்டும் என்று கோரி பிரிட்டனின் தலித் ஒற்றுமைக்கான கூட்டமைப்பு என்னும் அமைப்பு இங்குள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக அமைதியான போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.
இந்தியாவின் பல இடங்களிலும் இன்னமும் பெரும்பாலும் பெண்கள் அடங்கலாக 13 லட்சம் பேர் இன்னும் மனித மலத்தை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் இயக்குனரான மீனா வர்மா குற்றஞ்சாட்டினார்.
இந்திய அரசாங்கம் இது தொடர்பான சட்டங்களை அமல்படுத்தவில்லை. இவ்வாறு மனித மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கான மீள்வாழ்வுக்காக உறுதிவழங்கப்பட்ட நிதியையும் அது வழங்க மறுத்துவருகிறது என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாறு இந்த தொழிலில் ஈடுபடுபவர்களில் 95 வீதமானோர் பெண்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.