இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக தெலங்கானா புதிதாக உருவாகியுள்ளது.
கடலோர கிழக்கு மாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா – என மூன்று பெரும் பிராந்தியங்களைக் கொண்டதுதான் ஆந்திரப் பிரதேசம். இதில் தெலுங்கானா பிராந்தியம் ஒப்பீட்டளவில் பெரியது. முன்பு நிஜாம் சமஸ்தானமாக இருந்த காரணத்தால் தெலுங்கானாவில் பேசப்படும் தெலுங்கில் உருது கலப்பு அதிகமாக உள்ளது. கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாபெரும் தெலுங்கானா பேரெழுச்சியைத் தொடர்ந்து, போலி சுதந்திரத்துக்குப் பின் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகு தெலுங்கானா இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.
தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை என்பது பிராந்திய ஏற்றத்தாழ்வை வைத்து ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் ஆட்சியதிகாரத்தில் பங்கு கோரும் போட்டா போட்டிதானே அன்றி, அது மக்களுக்கான அரசியல் – பொருளாதார கோரிக்கைகளின் அடிப்படையிலான போராட்டமோ, முற்போக்கான ஜனநாயகக் கோரிக்கையோ அல்ல. ஆளும் வர்க்கப் பிரிவுகளிடையே பொதுச் சொத்தைச் சூறையாடவும், நடக்கும் போட்டியின் விளைவாகத் தெலுங்கானா மாநிலம் உருவானது.
புதிதாக உருவாகியுள்ள தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்றார். சந்திரசேகர ராவுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 63 தொகுதிகளில் வென்று தெலங்கானா ராஷ்ட்ர சமிதி ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சர் சந்திரசேகர ராவுடன் அமைச்சர்களும் பதவியேற்றனர். நாட்டின் 29 வது மாநிலமாக தெலங்கானா உருவாகியுள்ளது.
புதிய முதல்வராக டி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் சந்திர சேகர ராவ் பொறுப்பேற்கிறார். அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள இனக்கொலையாளியும் பிரதமருமான நரேந்திர மோடி, புதிய மாநிலத்துக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதுடன், மத்திய அரசு அனைத்து வித உதவிகளையும் தெலங்கானாவுக்குச் செய்யும் என்று உறுதியளித்துள்ளார்.