எமக்குக் கிடைக்கும் மற்றுமொரு தகவல் இப்படுகொலைகள் இந்திய புலனாய்வு அதிகாரிகளின் நேரடிப் பணிப்பில் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. அத்தகவலின்படி சரணடைபவர்களில் புலிகளின் கருமையத்தைச் சார்ந்தவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு இந்திய புலனாய்வு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட பின் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
ஆனால் புலிகள் ஆயுதங்களைப் போடும் சரணடையும் முடிவுக்கு வந்த பின் மே 17 2009 இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்து இருந்தது. இந்தியப் பிரதமர் அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மேற்கொண்ட ஆலோசனை குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டம்மான் இருவரும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையின் முக்கிய சந்தேக நபர்கள். அவர்கள் மீது இந்திய நீதிமன்றம் பிடியாணையும் விதித்து உள்ளது. அவர்கள் சரணடைந்தால் அல்லது கைது செய்யப்பட்டால் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட வேண்டும். அவ்வாறான ஒரு சூழல் இந்திய அரசியலில் குறிப்பாக தமிழ் நாட்டு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதும் இன உணர்வுகளைத் தூண்டிவடும் என்பதும் உறுதியானது. அவ்வாறான ஒரு அசௌகரியத்தை தவிர்ப்பதற்காக இந்தியா அவர்களை படுகொலை செய்யும்படி கேட்டிருக்கலாம் என்ற பொருத்தமான வாதம் ஒன்று வைக்கப்படுகிறது.








இந்தியத் துரோகத்தை> வார்த்தைகளில் சொல்லவோ + ஓவியத்தில் வடிக்வோ முடியாது! கிடலர் முசோலினி போன்றவர்களின் மறுவடிவமே> இந்திய மேலாதிக்கம்!