வடக்கு மக்கள் பிரிவினைவாதத்தை விரும்பவில்லை. சுய கௌரவத்துடன் ஐக்கிய இலங்கைக்குள் தங்களது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென விரும்புகின்றனர் என சம்பந்தன் கூறியுள்ளார்.. பிரிவினைவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் தமி;ழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியும் என அரசாங்கம் கருதிவிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு கால தாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டுமென இந்யா விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் விஞாபனத்தில் சுய நிர்ணய உரிமைக்கு மக்களின் விருப்பத்தைக் கோரியிருந்த சம்பந்தன் இன்று இந்தியாவின் விருப்பத்திற்கு மக்கள் பிரிவினவாத த்தை விரும்பவில்லை எனக் கூறுகின்றார்.
சுயநிர்ணய உரிமை என்பது மக்கள் தம் அரசியற் தலைவிதியைத் தாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை. இலங்கையில் இருந்து பிரிந்து செல்வதையும் விரும்பினால் தீர்மானித்துக்கொள்ளுவதற்கான உரிமை.
பிரிவினைவாதம் என்பது பிரிந்து செல்வதை விரும்பும் அரசியல்.
சுய நிர்ணய உரிமை என்றால் பிரிந்து தான் செல்லவேண்டும் என்றில்லை.
திருமணம் என்பதில் பிரிந்து செல்வதற்கான உரிமை அடங்கியுள்ளது. அதற்காக, திருமணம் முடிக்கும் தம்பதிகள், தாம் பிரிவினையை விரும்பவில்லை என்று கூறினால் விவாகரத்து உரிமையை மறுத்ததாகுமா?
சம்பந்தன் ஐயா சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.