இந்தியாவின் சக்தியை புலிகள் குறைத்துமதிப்பிட்டுவிட்டார்கள் எனவும் அது புலிகளின் மற்றொரு தவறுஎனவும்இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இறுதியில் அவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்ட இந்திய தலைவர் ஒருவரை கொலை செய்தனர் என ஜனாதிபதி கூறினார். 30 வருட காலத்தில் புலிகள் செய்த மிகப்பெரிய தவறு எது என ஜனாதிபதியிடம் வினவப்பட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார். புலிகளுடனான போரின் இறுதிக்கட்டத்தில் இந்திய அரசாங்கம் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததா என வினப்பட்டபோது இல்லை நான் அப்படி எண்ணவில்லை. நண்பர்களுக்கிடையில் அழுத்தமோ வற்புறுத்தல்களோ இருக்கமுடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்தார்.
இலங்கையின் சிறுபான்மை இனம் என எவருமில்லை எனவும் தற்போது இருப்பது நாட்டை நேசிப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரே இலங்கையில் இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா எந்த அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. சீனா ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது போல்இ இந்தியாவுக்கு ஏதேனும் துறைமுகம் ஒன்றை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா என எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள காங்சேன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருக்கிறது எனவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
//இந்தியாவுக்கு எதிராக எவருக்கும் இலங்கை மண்ணை பயன்படுத்த இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.//
இந்தியா தன் பிராந்திய அதிகார நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்ச்சியில் மகிந்தா அரசு மூலம் வெற்றிகொண்டுள்ளது. மகிந்தா அரசும் தன் தேவைக்காக இந்தியாவை பாவித்து தன் அதிகார அரசிலை நிலை நிறுத்தியள்ளது. பயங்கரவாதம் என்ற பெயரால் நசுக்கப்பட்டது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம்.
//இலங்கையின் சிறுபான்மை இனம் என எவருமில்லை எனவும் தற்போது இருப்பது நாட்டை நேசிப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரே இலங்கையில் இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்./ /
நாட்டை நேசிப்பவர்கள் என்பதன் அர்த்தம் இலங்கை நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை இன மக்களின் அரசியல் பொருளாதார நலன்கள் தொடர்பாக சமமான உரிமைகளுடன் வாழ வைக்கவேணுமென்ற நேசிப்பு இருக்கவேண்டும் என்பதே நாட்டை நேசிப்பவர்கள் என்பதன் அர்த்தமாக இருக்கவேண்டும்.
அதைவிடுத்து மகிந்தாவின் அரசியலை நேசிப்பவர்கள். மகிந்தாவின் அரசிலை நேசிக்காதவர்கள் என்று இருப்பதுபோல்தான் அமைந்துள்ளது. நாட்டை நேசிக்கும் மகிந்தா அரசுக்கு தன் ஒருபகுதி மக்கள் மீது மிக மிக மோசமான மனிதப்பேரவலத்தை எப்படி ஏற்படுத்த முடிந்தது. பொறுத்திருந்து பார்ப்போம் ஐயா எப்படி நகர்த்ப்பபோகிறார் என.
சிவராணி
இலங்கை