இந்திய வெளிவிவாகரத்துறை ஆலோசகர் நிருபமா ராவ் இலங்கை சென்றிருக்கும் நிலையில்
புதுச்சேரியில் திங்கள்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பழ.நெடுமாறன் கூறியது: இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு புனரமைப்பு நிதியாக ரூ. 2 ஆயிரம் கோடியை இந்திய அரசு, இலங்கை அரசிடம் வழங்கியுள்ளது. அந்த நிதியைக் கொண்டு அங்கு கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அதில் சிங்களர்கள் குடியமர்த்தப்படுகிறார்கள். இந்த நிதி சரியாக செலவிடப்படுகிறதா என்று பார்வையிட மத்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்புகிறது. இப்பயணம், நிதி செலவிடப்படுவதை பார்வையிட இல்லை. சீனாவை சார்ந்து இருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷவை திருப்திப்படுத்தி, இந்தியா பக்கம் திருப்புவதற்காகவே இவர்கள் இலங்கை செல்கின்றனர். இவர்களின் எண்ணங்களுக்கு தமிழர்களை பலிகடாவாக்கப்படுகிறார்கள்.
இலங்கைக்கு இந்தியா, பாலஸ்தீனத்திற்கு ஒரு அமெரிக்கா, கம்போடியாவிற்கு சைனா என சிறூபான்மை மக்களூக்கு தொல்லைகள் தொடர்கின்றன.
தமிழர்கள் பலியாவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்களின் முரண்பாடுகளும், பதவி ஆசைகளும் ஒரு காரணமாகவுள்ளது.
பழ.நெடுமாறன் என்பவன் ஒரு பொய் பித்தன்.