இந்தியாவின் தென் பிராந்தியத்தில் அணு உலை அமைக்கப்பட்டு வருகிறது. இது இலங்கைக்கு மிக அண்மித்த இடத்திலேயே அமைக்கப்படுகிறது. ஆதலால் அணு உலையில் வெடிப்போ, கசிவோ அல்லது வேறு ஏதாவது ஆபத்தோ ஏற்படும் பட்சத்தில் அந்தக் கதிர் வீச்சு இலங்கைக்கு வரக்கூடும். அது காற்று, கடல் நீர், பறவைகள் மற்றும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்படும் மருந்துகள் ஊடாகவும் இங்கு வரமுடியம். அப்படியொரு நிலை உருவானால் நாங்கள் செத்து மடிய நேரிடும்.
இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுகளுக்கு ஏற்ப, இந்தியாவின் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் வட மாகாணம் முழுமையாகவும், புத்தளம் மாவட்டம், திருகோணமலை மாவட்டம் மற்றும் வேறு சில பிரதேசங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும். அது திடீர் மரணத்தில் தொடங்கி புற்று நோய் போன்ற உயிர் கொல்லி நோய்களை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பிறக்கவிருக்கும் பிள்ளைகளும் அங்கவீனர்களாக பிறக்கக்கூடிய பயங்கரமான நிலைமை உருவாகும்.
இவ்வாறான ஆபத்து கண்ணெதிரே இருக்கும்போது அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? இந்த அழிவை நிறுத்துமாறு இந்தியாவிடம் கேட்டிருக்கவில்லை. இன்று அரசாங்க அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்று ஆபத்து ஏற்படும் பட்சத்தில் மக்களைக் காப்பாற்றுவது என்று பேசுவதற்குப் பதிலாக மனிதர்கள் இறந்தால் இழப்பீடு எவ்வழவு கிடைக்கும் என்பதைக் குறித்தே பேசியிருக்கிறார்கள். எங்களது மரணத்திலும் பணம் தேடுவற்கே அரசாங்கம் தயாராகிறது.
இந்தியாவிடமிருந்து கிடைக்கும் வரப்பிரசாதங்களை எண்ணி எதிர்க்கட்சியில் இருக்கும் எந்தவொரு அரசியல்வாதியும் இந்தப் பிரச்சினையில் வாயைத் திறப்பதே இல்லை. இந்தியா கோபித்துக் கொள்ளும் என்ற பயத்தில் மக்களுக்கு விளக்கமளிப்பதுமில்லை.
இந்த நயவஞ்சகர்களை நம்பி மோசம் போகாமல் எமது உயிர்களை பாதுகாத்துக் கொள்ள நாம் தயாராக வேண்டும். இந்த கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தென்னிந்திய மக்கள் போராடி வருகிறார்கள். நாங்களும் அவர்களோடு சேர்ந்து போராட வேண்டும். சூழலைப் பாதுகாத்துக் கொள்ள, மீன்பிடித் தொழிலைப் பாதுகாத்துக் கொள்ள, உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள நாங்கள் ஒன்று சேருவோம். ஒன்று சேர்ந்து இந்த அழிவை நிறுத்துமாறு இந்திய – இலங்கை அரசாங்கங்களை வற்புறுத்துவோம்.
– மக்கள் போராட்ட இயக்கம் / முன்னிலை சோஷலிச கட்சி
We have to get the Northern Provincial Council functioning. Then they have to create a department to handle emergencies. India and Sri Lanka have to work out the formalities through the proper diplomatic chanells. GOP – Grand Old Party – In America it is the Republican Party – in Sri Lanka (Shri Lanka) it is the LSSP.
மரணம் ஓர்நாள் நிச்சயம் வரும் ஆநாள் எவன் கோழையாக இருக்கின்றானோ அவன் பளமுரை இறக்கின்றான் .அரசியள் செய்யாமள் படித்த விஜ்ஜான ஆய்வாளர்களை அழைத்து பின்விழைவைய் ஆய்வுசெய்து அறீக்கையாக உருவாக்குங்கள் அதன்பின் போராடுங்கள் அரசியள் செய்யாதீர்கள் .திருகோனமலையிளூம் வரப்போகிரது .தெரிந்தும் தெரியாமள் நடிப்பதை விட்டு
முதலில் சிங்கள பேரினவாதிகளிடமிருந்து அடிவிழுவதை நிறுத்த ஏதாவது செய்யுங்கள்.
முன்னர் ஜேவிபி இல் இருந்தபோது இவர்கள் என்ன செய்தார்கள் என்றுநானும் சாட்சி சொல்லலாம். அதை விட்டால், இந்த அறிக்கை தந்திரமானது. கூடங்குளத்துக்கு அறிக்கை விட்டால் அரசாங்கத்தால் பிரச்சனை குறைவு. அதேநேரம் சிங்கள மக்கள் மத்தியில் புது ஆதரவு வரும். தமிழ்நாட்டிலும் ஆதரவு கிடைக்கும். அதேநேரம் அறிக்கை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒரு கல்லு பல மாங்காய்!
முன்னிலை சோசலிசக் கட்ச்சியின் போராட்ட அழைப்பே… எடுத்த எடுப்பில அனல் கக்குது…. அப்படியே ராசபக்க்சாவுக்கும் ஒரு செல்லகிள்ளு