வன்னி மீதான் போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரச அதிபர இந்தியப் பிரதமர் நேரடியாக சந்திக்கவில்லை. தன் நாட்டிற்கு வருமாறு வெளிப்படையாக அழைப்பு எதனையும் அனுப்பவும் இல்லை. ராஜபட்சேவின் முதல் பயணமாக சீனாவுக்குச் சென்றார். இந்நிலையில் வருகிற 28,29-ஆம் தேதிகளில் பூட்டான் தலைநகர் திம்புவில் தெற்காசிய நாடுகளுக்கான சார்க் உச்சி மாநாடு நடைபெறுகிறது. நாளை துவங்க இருக்கும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கைப் பிரதமர் ராஜப்ட்சே திம்பு சென்றுள்ளார். நாளை அவர் அங்கு இந்தியப் பிரதமரை சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.