இத்தாலியின் மத்திய வங்கியின் தலைவர் தனது நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது கடினம் என்று கூறியுள்ளார். நாட்டின் உறுதித் தன்னைமே பிரச்சனைக்குரியது என்று ஆரம்பிக்கும் இத்தாலிய மத்திய வங்கியின் தலைவர் அரசியல் உறுதியின்மையால் நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முடியாத நிலை காணப்படுவதாகக் கூறியுள்ளார். அதே வேளை பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர் பென் மே கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்படும் என்கிறார். முதலாளித்துவம் ஒவ்வொரு முறையும் சரிந்து விழும் போதும் அது அதற்கான தீர்வைக் எட்டமுடியாத நிலையில் புதிய அமைப்புக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதீத நிதி மூலதனத்தைக் கையிருப்பில் வைத்திருக்கும் ஒரு சில அமரிக்க முதலைகளிளால் ஐரோப்பிய மூலதனச் சொந்தக்காரர்களின் துணையோடு உலகம் முழுவதும் பரப்பபட்ட நவ தாரளவாதப் பொருளாதரம் முடிவிற்கு வருகிறது.
உழைக்கும் மக்கள் பட்டினியோடு வாழும் கிரேக்கத்தில் கூட மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்பட்ட சமூக நலத் திட்டங்கள் அழிக்கப்படுகின்றன. இப்போது வரிப்பணம் நவ தாராளவாதத்தின் ஏகாதிபத்திக் கூறுகளான ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கி ஆகியவற்றினூடாகச் சுரண்டப்பட்டு பல்தேசியக் கூட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.பல்தேசி நிறுவனங்களின் வரி குறைக்கப்பட்டு உழைக்கும் மக்களின் வரி அதிகரிக்கப்படுகின்றது. இவற்றிற்கு எதிராகப் போராட முனைபவர்கள் அடக்கப்படுகிறார்க> கிரேக்கத்தின் முன்னுதரணத்தைப் பயன்படுத்தி இத்தாலியில் மக்கள் மீதான ஒடுக்குமுறை அதிகரித்துள்ளது. ஐரோப்பா முழுவது இந்த நிலை இன்னும் குறுகிய நாட்களுக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்ரது.