இதுவரை உலகில் பணம்படைத்தவர்களாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த ஐரோப்பாவில் கிரேக்கத்திற்கு அடுத்ததாக இத்தாலியும் ஸ்பெயினும் திவாலாகும் நிலையில் உள்ளன. அடுத்த வருட நடுப்பகுதிக்குள் இந்த நாடுகள் யூரோ நாணயத்திலிருந்தும் வெளியேறும் நிலை உருவாகலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
இத்தாலிய நகரங்கள் எங்கும் இன்று (07.10.2011) மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். செல்வியோ பொலர்ஸ்கோனியின் அரசு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததைத் தொடர்ந்து மாணவர் போராட்டங்கள் ஆரம்பித்தன. ஏற்கனவே இத்தாலியில் 29 வீதமன உயர் கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் வேலையற்றவர்களாக உள்ளனர். 40 வீதமானவர்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்புக்கள் இல்லை.
இன்றைய ஆர்ப்பாட்டங்களுக்காக பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருட்ந்தன.