இணையதள ஆசிரியருக்கு சீனா தண்டனை!

31.08.2008

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த மே மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அழிந்த பள்ளிகளின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ஆசிரியர் ஒருவரை கடும் ஊழியம் செய்யும் முகாமுக்கு அனுப்பி சீன நிர்வாகம் தண்டித்திருப்பதாக நியூயார்க்கில் உள்ள மனித உரிமைகள் சீனா என்ற அமைப்பு கூறியுள்ளது.

லியா ஷகூன் என்ற அந்த ஆசிரியர் வதந்திகளைப் பரப்பினார் என்றும் சமூக ஒழுங்கை சீர்குலைத்தார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கூறி தடுத்துவைக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சிச்சுவான் நிலநடுக்கத்தில் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதில் பலர் பாடசாலைகளில் சிக்குண்ட பள்ளி மாணவர்கள்.

பாடசாலைக் கட்டிடங்களின் மோசமான நிலைமை சீன அரசாங்கத்திற்கு மிகவும் இக்கட்டான அரசியல் பிரச்சனையாக இருந்து வருகிறது.

குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சீன அரசாங்கம் இதற்காக தமக்கு விளக்கம் தரவேண்டும் என்று கோரி பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.