இடிந்தகரையில் தமது வாழ்வுரிமைக்காக அமைதியான வழியில் போராட்டம்நடத்தும் மக்கள் தமிழக அரசால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஜெயலலிதா அரச பயங்கரவாததிற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைகின்றன. இடிந்தகரைக்கு செல்ல முயன்ற ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ம.தி.மு.க பொதுச் செயலர், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் முடிவில் இடிந்தகரைக்கு அவர்கள் செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை, ராதாபுரத்தில் 144 தடை உத்தரவு இருப்பதால் அங்கு செல்ல அனுமதி கிடையாது என்றனர்.
ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனாலும் வைகோ, சீமான் உள்பட அனைவரும் இடிந்தகரை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.








high tragedy in this problem is the people who really affected by the nuclear project are agitating and the rest of the people including the Tamils are encouraging nulear project. that is why this agitation has not become a mass movement.