தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்தை அம்பலப்படுத்திய எட்வார் ஸ்னோடனின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்புக் குறித்து கவலையடவதாக டெக்சாஸ் மாநிலத்திற்கான முன்னை நாள் அமரிக்கப் பிரதிநிதி ரொன் போல் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆளில்லா விமானத்தின் ஏவுகணையால் தனது அரசைச் சார்ந்த ஒருவர் ஸ்னோடனை கொலைசெய்யக்கூடும் என என தான் அஞ்சுவதாக அவர் அந்த நேர்காணலின் போது மேலும் தெரிவித்தார்.
‘நாங்கள் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் வாழ்கிறோம், அமரிக்கர்களுக்கு உரிமைகள் கிடையாது அவர்கள் எப்போதாயினும் கொல்லப்படலாம். ஸ்னோடன் உண்மைகளை என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற உண்மையைச் சொல்லுகிறார்.; ஸ்னோடன் எந்த அன்னிய நாட்டின் சார்பாகவும் இதனை மேற்கொள்வதாக எந்த ஆதாரமும் இல்லை, ஆக, அவர் எமக்கு அச்சுறுத்தல் இல்லை. அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற உண்மையைக் கூற முற்படும் போதெல்லாம் அவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்’ என அவர் தனது நேர்காணலின் போது தெரிவித்தார்.
அமரிக்காவின் உள்புறத்தில் ஆழமான வெடிப்பு உருவாகியிருப்பதையும் அதன் ஆதிக்கம் சரிவடைய ஆரம்பித்துவிட்டத் என்பதையும் இவை உறுதிப்படுத்துகின்றன.