மக்கள் படும் இன்னல்களைக் கருத்திற்கொண்டு தற்போதைய மனிதப் படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக விடுதலைப் புலிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளார்கள்.
இந்த மனிதாபிமான நெருக்கடியை முடிவிற்குக் கொண்டு வர ஒபாமா விடுத்த அழைப்பை கவனத்திற்கெடுக்க விடுதலைப் புலிகள் தயாராக உள்ளனர்.
சர்வதேச சமூகம் வெளிப்படையாகவும், பாரபட்சமற்ற முறையிலும் இப்போது செயற்பட வேண்டுவதோடு இரக்கமற்றமுறையிலும், கௌரவமற்ற முறையிலும் நடாத்தப்படும் மக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பபையும் அது எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று இரத்தஆறு பெருகுவதை தடுத்து நிறுத்த சாத்தியமான எல்லாவழிகளையும் மேற்கொள்ளசிறிலங்கா அரசாங்கத்திற்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம் என விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








புலிகளின் வேலை> கண்கெட்டபின் சூரியவணக்கம் செய்வதுபோல் உள்ளது!