விமான விபத்தில் பலியான ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழிந்து விட்ட போதிலும் ஆந்திராவில் தற்கொலைகள் நின்றபாடில்லை. கடந்த முன்று அல்லது நான்கு நாட்க்ளுக்குள் ஆந்திரமாநிலம் முழுக்க ஐந்தூறு பேர் அதிர்ச்சியிலும் தற்கொலை செய்தும் இறந்திருக்கிறார்கள். சாராசரியாக ஒரு நாளைக்கு நூறு பேர் தற்கொலை செய்து கொள்வதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கடவுகளைகளைப் போல தங்காளின் தலைவர்களை நம்பும் அப்பாவி மக்கள் இவ்விதமாய் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு கணத்தில் ஏற்படும் மூளைச்சலவை அவர்களை மீள முடியாமல் ஆக்கிவிடுகிறது. ஊடகங்களோ இடைவிடாது ரெட்டியின் மரணச் செய்தியை ஒளிபரப்பி அப்பாவி மக்களிடம் வழிபாட்டு அரசியலை ஊக்குவிக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டியது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியல்தான் நேரு குடும்பம்தான் இந்த வாரிசு அரசியலை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியது. இப்போது அதை எல்லா மாநில அரசியல்வாதிகளுமே கடைபிடிக்கிறார்கள். ஜனநாயகத்தின் பெயரிலான இந்த மன்னராட்சிக்கு ஒத்த இந்த வாரிசு அரசியலில் ரெட்டியும் விதிவிலக்கில்லை. தனது மகனை அவர் இம்முறை எம்பியாக்கியிருக்கிறார். அரசியலுக்கு வந்து வெறும் நூறு நாட்களே ஆகியுள்ள ஜெகன் மோகன் ரெட்டி என்னும் ராஜசேகரரெட்டியின் மகன் முதல்வர் பதவியை குறிவைக்கிறார். கட்சிக்குள் ஏற்கனவே நீண்ட கால அனுபவம் உளளவர்கள் இருக்க ஜெகன் மோகன் அனைத்து எம்.எல்.ஏக்கள்ன் ஆதரவியும் பெற்றுள்ளார். என்பதோடு பல மூத்த ஆந்திர அரசியல்வாதிகளே இது குறீத்து பேச அஞ்சுகிறார்கள். ஏனென்றால் ஆந்திராவில் உருவாக்கப்பட்டிருக்கும் அனுதாப அலைக்கு மாறாக எதாவது கருத்துச் சொல்லி தனிமைப்பட நேருமோ என்ற அச்சத்தில் ஜெகன் மோகனை ரெட்டியை ஆதரிக்கிறார்கள் என்கிற நிலையில், ரெட்டி விவசாயிகளின் நண்பன் என்றும் ஏழை விவசாயிகளுக்கு தன்னலம் பாரா உதவியவர் என்றும் புகழாரம் சூட்டப்படுகிறது. உண்மையில் இது ஒரு கடைந்தெடுத்த கட்டுக்கதையாகும். இந்தியாவின் ஆனமாவான விவசாயத்தை அழிக்கவும் பாரம்பரீயமான விதைகளை திருடி அமெரிக்காவிற்கு விற்று வயிறு வளர்த்தவருமான இயர்க்கை வேளாண் விஞ்ஞானி எம்,.எஸ்,சுவாமிநாதன் பசுமைப் புரட்சி என்னும் பெயரில் நிலங்களை நஞ்சாக்கிய செயலைத் தொடங்கி வைத்தது ஆந்திராவில்தான். அமெரிக்க கோக் கம்பெனிக்கு தேவையான பொருட்களை விவசாய நிலங்களில் பயிர் செய்யச் சொன்னதோடு பூச்சிக் கொல்லி மருந்துகளை விளை நிலங்களுக்குள் கொடுத்து விவசாயத்தை நஞ்சாக்கியவரும் இவரே. விவசாயம் கெட்டுப்போனது இன்னொரு பக்கம் பெரு வணிக முதலாளிகள் நேரடியாக பண்ணைகளை அமைத்து தங்களுக்கு வேண்டிய உணவுவகைகளை தாஙகளே உற்பத்தி செய்து கொண்டனர். இன்னொரு பக்கம் இணைய சூதாட்டம் என்று அழைக்கப்படும் ஆன்லைன் வர்த்தகம்,. இன்னொரு பக்கம் மரணு மாற்றப்பயிர்கள் என்று விவசாயிகள் திண்டாடிப் போனார்கள். வாங்கிய கடனுக்கு வட்டி ஏறிக்கொண்டே சென்றது, விளைந்த பொருட்களுக்கு விலையில்லாமல் போக கடைசியில் விவசாரிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். கடந்த மாதம் இந்திய சுதந்திர தினத்தை ஆந்திரா கொண்டாடிக் கொண்டிருந்த போது ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி அதிர்ச்சிகரமான அந்தத் தகவலை வெளியிட்டார் அதாவது கடந்த நாற்பது நாட்களில் இருபத்தியோடு விவசாயிகள் ஆந்திரா முழுக்க தற்கொலை செய்திருக்கிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா முழுக்க இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விவாசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருகிறார்கள். இது குறித்து இந்திய அரசுக்கோ மாநில அரசுகளுக்கோ எவ்விதமான அக்கறைகளும் இல்லை. ஆனால் ரெட்டியின் மறைவை ஒட்டு ஐநூறு பேர் இறந்திருக்கும் சூழலில் சாவு எண்ணிக்கையை வைத்தே காங்கிரஸ் மேலிடம் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்கிவிடத் தீர்மானித்திருக்கிறதாம்.
இலங்கை பதிவர்களின் புதிய தமிழ் திரட்டி யாழ்தேவிதற்போது Add-தமிழ்விட்ஜெட்டில்!
ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் தமிழின் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்