ஆந்திராவில் கள்ளச் சாராயத்திற்கு 14 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கனிமெர்லா கிராமத்தில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் சனிக்கிழமை இரவு கள்ளச் சாராயம் அரிந்தியதில் இக் கோரம் நிகழ்ந்துள்ளது.
சனிக்கிழமையே 7 பேர் உயிரிழந்து விட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 7 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் பெண்கள். இத்துடன் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.