ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் மலேரியாவால் பலி

18.09.2008.

உலகளவில் ஆண்டு தோறும் பத்து லட்சம் மக்கள் மலேரியா நோயினால் இறக்க நேரிடுகிறது என்று உலக சுகாதர நிறுவனத்தின் ஆண்டறிக்கை கூறுகிறது.

மலேரியாவை பரவச் செய்யயும் கொசுக்களை( நுளம்புகளை) கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இன்னமும் மலேரியா காரணமாக நாளொன்றுக்கு 2700 பேர் பலியாகும் நிலை உள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதுவும் குறிப்பாக இந்த இறப்புகள் ஆப்பிரிக்காவில் இருக்கும் இளம் சிறார்களிடையேதான் பெரும்பான்மையாக காணப்படுகிறது என்றும் உலக சுகாதார நிறுவவனத்ததின் அறிக்கை தெரிவிக்கிறது.

வருடத்துக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கும் மேலாக மலேரியாவை எதிர்ப்பதற்கு தற்போது செலவு செய்யப்படாலும், அந்தத் தொகையை மும்மடங்கு அதிகரிக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும் உலக சுகாதார நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
BBC.