Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி : ஆனந்த குமார்

இனியொரு... by இனியொரு...
10/21/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க் கல்வி கற்பிப்பதற்கென்று பல பாடசாலைகள் இயங்குகின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் இந்தப் பாடசாலைகளுக்கு சிறிய மானியத் தொகையும் வழங்கப்படுகின்றது. தவிர பாடசாலை நிர்வாகிகள் பெற்றோரிடம் மாதாந்தம் சிறிய தொகைப் பணத்தையும் அறவிடுகின்றனர். பாடசாலைகள் வார இறுதியில் மண்டபங்களையும், ஆங்கிலப் பாடசாலை வகுப்பறைகளையும் வாடகைக்கு அமர்த்துவதனூடாக நடைபெறுகின்றது.

தமிழைக் கற்பிபதே இவர்களின் பிரதான நோக்கம். இதனை சூழ பல வியாபார நிறுவனங்கள் புத்தகங்களை வெளியிடுதல், பாடல்களை வெளியிடுதல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் வியாபாரம் அவர்களுக்கு பெருத்த வெற்றியளிக்கவில்லை என்பதே உண்மை.

இந்தப் பாடசலைக்கு நிர்வகிக்கின்ற நிர்வாகிகள் உட்பட ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தை அப்படியே திரும்ப நினைவுபடுத்துகின்றனர். அதுவும் 80களின் யாழ்ப்பாணத்தை நினைவுபடுத்துகின்றனர். ஆண் வாத்தியார்களுக்குப் பிரம்பையும், பெண்களுக்கு சுடுதண்ணிப் போத்தலையும் களட்டிவிட்டால் யாழ்ப்பாண வாத்திமார்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாட்டையும் காணமுடியாது.

பெரும்பாலானவர்கள் பாட்டி வடை சுட்டு விற்ற கதையிலிருந்தோ இல்லை அதுபோன்ற கதையிலிருந்தோ ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கதைகளை எந்த அர்த்தமும் புரியாமல் குழந்தைகள் மனப்பாடம் செய்து கொள்கிறார்கள்.

ஒரு தமிழ்ப் பாடசாலை நடத்திய விழாவில் ‘ஆட்டுக்குடி எந்தன் குட்டி, அருமையான சின்னக்குட்டி, ஓட்டம் ஓடு வந்திடுவாய்’ என்று ஒரு எட்டு வயதுக் குழந்தை பாடியது. நிகழ்ச்சி இடைவேளையில் அந்தக் குழந்தையை ஆட்டுக்குட்டியைப் பார்த்திருக்கிறாயா என்று நான் கேட்டு வைத்தேன். கிட்டத்தட்ட பக்கத்துவீட்டு ஒஸ்ரியன் நாயைப் போல இருக்கும் என்று அம்மா சொல்லியிருப்பதாக அவன் சொன்னான்.

அந்தக் குழந்தை பாடும் போது எனக்கு பழை நினைவுகள் பிளாஷ் பாக்லில் வந்து போயின. மெட்டுக் கூட எந்த மாற்றமும் இல்லை.

இன்னொரு குழந்தை தீபாவளி நாளில் எப்படி எல்லாம் உற்சாகமாக இருந்தார்கள் என்று கூறி வைத்தது. இன்னும் ஒரு குழந்தை தமிழின் பெருமையையும், ஆறுமுக நாவலரையும் பற்றிப் பேசியது.

குழந்தைகளிலிருந்து முற்றாக அன்னியப்பட்ட ஒரு சூழலை அவர்கள் மீது திணித்து அவர்களை யாழ்ப்பாணத் தமிழர்களாக்கி மகிழும் பெற்றோரினதும் ஆசிரியர்களதும் திமிருக்கு தமிழ்க் கல்வி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

தாம் வாழுகின்ற புலம்பெயர் நாடுகளில் கூட, அரச பாடசாலைகளில் , கல்வி கற்பதற்கு நவீன முறைகளை அறிமுகப்படுத்துகிறார்கள். நவீனமொழிகள் என்று அழைத்துக்கொள்ளும் ஐரோப்பிய மொழிகளைக் அந்த மொழி பேசாத குழந்தைகளுக்குக் கற்பிபதற்கு ஐரோப்பியர்கள் நாளந்தம் புதிய உக்திகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு மொழி மீதான விருப்பை உருவாக்கும் வகையில் புதிய வழிமுறைகள் எல்லாம் கையாளப்படுகின்றன.

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் கூட ஆங்கிலம் கற்பிக்கும் போது லண்டனிலிருந்து ஈலிங்கிற்கு தாமதமாக வந்த புகையிரதத்தைப்பற்றிப் போதிப்பதில்லையே.

ஐரோப்பிய நாடுகளில் சந்திக்கும் நாளந்தப் பிரச்சனைகளைக் கூட தமிழ் மொழியில் கதைகளாக மாற்றி குழந்தைகளுக்குப் போதிப்பது போன்ற சிறிய உக்திகளைக் கூட இவர்கள் கையாளாத பழமைவாதிகள்.

தமிழ் கற்பித்தல் தான் இப்படி என்றால் அவர்களின் அடுத்த கனவு கர்நாடக சங்கீதம். பாடுவதற்கு ஆர்வமற்ற குழந்தைகள் கூட பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க தெலுங்குக் கீர்த்தனைகளை மனப்பாடம் செய்து கொள்கிறார்கள்.

யாழ்ப்பாண உயர்குடிகளின் மையவாதம் தான் இந்தப் பாடசாலைகளும் அவற்றில் துன்புறும் ஒன்றுமறியாக் குழந்தைகளும்.

அண்மையில் கொரிய பாடசாலை ஒன்றிற்கு செல்ல நேர்ந்தது. சனிக்கிழமைகளில் நடக்கும் அந்தப் பாடசாலையில் மொழி கற்பிக்க ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள், முதலில் ஆங்கிலத்திலெயே கொரிய கலாச்சாரம் உட்பட ஏனைய நாடுகளின் கலாச்சரங்களையும் கற்பிக்கிறார்கள். சிந்து வெளி நாகரீகம் எல்லாம் கூட கற்பிக்கிறார்கள். பின்னர் மாணவர்களுக்கு ஒரு விருப்பு ஏற்பட்டதும் கொரிய மொழிகளின் சில பகுதிகளை அவர்களே உருவாக்கிய கதைகளின் ஊடாகக் கற்பிக்கிறார்கள்.

இது முழுமையானதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது ஆனால் அவர்களிடம் ஒரு திட்டமிடல் இருக்கிறது என்பதே இங்கு உண்மை.

யாழ்ப்பாணத்தைப் பெயர்த்துவைத்து அழகு பார்க்க எண்ணினால் தமிழை அல்ல தமிழில் பொதிந்திருக்கும் அழுக்குகளையே அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பிடெல் காஸ்ட்ரோ  மக்கள் மத்தியில்  தோன்றினார்

பிடெல் காஸ்ட்ரோ மக்கள் மத்தியில் தோன்றினார்

Comments 2

  1. pidungi says:
    14 years ago

    //யாழ்ப்பாணத்தைப் பெயர்த்துவைத்து அழகு பார்க்க எண்ணினால் தமிழை அல்ல. தமிழில் பொதிந்திருக்கும் அழுக்குகளையே அவர்கள் கற்றுக்கொள்வார்கள்// உண்மையில்நல்லபதிவு “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல”என்று நன்னூலாரே ஒப்புக் கொண்டபின்பும் யாழ்ப்பாணத்து
    காரன் விடமாட்டான்.மாடு என்று எழுது என பணிக்கப்பட்ட பிள்ளை மோடு என்று எழுதியதாகவும் காரணம் கேட்ட போது ஆசிரியர் மாட்டிற்கு இரண்டு கொம்பு இருக்கென்று சொன்னதால்
    கொம்பையிட்டேன் என்று பதில் சொல்லிய பிள்ளைக்கு ஆசிரியரின் கற்பித்தல் முறைமையின் சிக்கலை விளங்க வாய்ப்பில்லை. மாடு அ..;றிணை எருது உயர்திணை என்று கற்பித்த தமிழ்பாடப்புத்த ஆசிரியர் ஒருவரையும்நான் சந்தித்தேன். இவ்வாறானவர்களின் கரங்களில் புலம் பெயர் தமிழ்க்கல்வி இருந்தால் கல்வி,கலவியாகத்தான் முடியும்

    • Dr. Sri S. Sriskanda says:
      14 years ago

      While in Jaffna last time Honourable Ranil Wickremasinghe talked about the intergrity of G. G. Ponnambalam. By voting for the Citizenship and Voting Rights Bills along with the Leader of the House S.W.R.D. Bandarnaike he laid the foundation to make the Sri Lankan Tamils an envy of whole world.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...