நீங்கள் நேசிப்பதாகக் அடிக்கடி கூறிக்கொள்ளும் மக்கள் இப்போது போராட ஆரம்பித்துவிட்டார்கள். நீங்கள் உயிரையும் துறக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் மண் ஆக்கிரமிக்கப் படுவதற்கு எதிராக கொலைக் களத்தில் நின்று மக்கள் போராடுகிறார்கள்.
பல ஆயிரங்களை கொட்டி நீங்கள் நிகழ்த்திய மாவீரர் தினத்தின் அலங்காரங்கள் கலைவதற்கு முன்பாகவே மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழ்ப் பேசும் மக்கள் ஆயிரம் ஆயிரமாய்க் கொன்று குவிக்கப்பட்ட மண்ணின் ஒவ்வொரு அங்குலத்தையும் பேரினவாத அரசு திட்டமிட்டுச் சூறையாடுகிறது. வன்னி பெரு நிலம் என்று நீங்கள் பெருமையடித்துக்கொண்ட மண்ணின் 30 வீதத்தை ஆக்கிரமித்தாகிவிட்டது.
மூதூர், சம்பூர், அம்பாறை என்று கிழக்கு மாகாணத்தின் நிலம் பல்தேசியக் கம்பனிகளின் வியாபரப் பசிக்கும் சிங்கள பௌத்த இனவாத வெறிக்கும் இரையாக்கப்படுகின்றது. நிங்கள் பேச்சு நடத்திப் புழகாங்கிதம்டையும் அமரிக்கக் கம்பனிகள், ஐரோப்பிய நிறுவனங்கள், இந்திய வியாபாரிகள் எல்லோரும் கோரப்பற்களோடு மக்கள் குடியிருப்புக்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.
பேரினவாதிகளும் பல்தேசிய நிறுவனங்களும் இணைந்தே இந்த ஆக்கிரமிப்பை நடத்துகிறார்கள். இராணுவக் குடியிருப்புகளும், பல்தேசியக் கம்பனிகளும் அருகருகே “பாதுகாப்பாக” பக்கத்துவீட்டுக் காரர்களாக மாறிவருகிறார்கள்.
இதற்கு புலம் பெயர் வியாபாரிகள் தம்மையும் நுளைத்துக்கொண்டு கொள்ளையடிக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
எந்த மக்களுக்கு “உதவிசெய்வதாக” புலம்பெயர் நாடுகளில் நீங்கள் பணம் சேர்த்துக்கொண்டீர்களோ அந்த மக்கள் தெருவோரங்களில் அனாதைகளாக, அடிமைகளாக விரட்டியடிக்கப்படுகிறார்கள். பட்டினிச் சாவை எதிர் நோக்குகிறார்கள். பசியின் கொடுமையால் உடலை விற்கக்கூடத் தயாராக ஒரு வறிய மக்கள் கூட்டம் உருவாக்கப்படுகிறது. புலம்பெயர் நாடுகளில் அமரிக்காவை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு ‘கலாச்சாரம் சீரழிகிறது’ என்ற உங்கள் கூக்குரல்கள் நாரசமாக ஒலிக்கிறது.
யாழ். மாதகல் கிராமத்தினை கடற்படையினர் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்களால் பேரணியும் மகஜர் கையளிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
05.12.2011 திங்கட்கிழமை முற்பகல் சண்டிலிப்பாய் அந்தோனியார் தேவாலய முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணியாக பிரதேச சபைச் செயலகத்தினைச் சென்றடைந்த மக்கள் பிரதேச சபைச் செயலரிடம் மனுவை கையளித்துள்ளனர்.
மாதகல் கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.
இன்று பேரணி இடம்பெறுவதை அறிந்து கொண்ட இராணுவத்தினரும் பொலிஸாரும் குறித்த பகுதிகளில் பெருமளவில் குவிக்கப்பட்டு வாகனங்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
நாடுகடந்த தமிழீழ கனவான்கள் தமது அடையாள அட்டை வியாபாரத்தைத் தீவிரப்படுத்த ஆரம்பித்து விட்டனர். இலங்கை அரச கைக்கூலி கே.பிக்கும் குறுந்தேசியத்திற்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கின்றனர்.
தமிழர் பேரவைகள் சோனியா காந்தியைத் தேடிக்கொண்டிருப்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலையிலிருந்து மேற்கே திரும்பி ரோபேர் ஓ பிளேக்கை நோக்கித் தேவாரம் பாடிக்கொண்டிருப்பார்கள்.
இந்தியப் பழங்குடி மக்கள் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி வெற்றிபெறுகிறார்கள். நாளுக்கு நாள் குவிக்கப்படும் இராணுவத்தை புறமுதுகு காட்டி ஓடச் செய்கிறார்கள். நீங்கள் நம்பியிருக்கும் மனித கசாப்புக்கடைக் காரர்களிடம் அவர்கள் மண்டியிட்டுத் தம்மைக் காப்பாற்றும் படி இரஞ்சவில்லை. நீங்கள் அமரிக்காவிடமும், இந்தியாவிடமும், ஐரோப்பாவிடமும் உங்கள் கனவான்களின் உடைகளோடு மண்டியிடுவது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாமில்லை. அப்படித் தெரிரிந்துகொண்டால் உங்களைக் கேலிச்சித்திரங்களாக வரைந்திருப்பார்கள்.
மாவீரர்தினம் நடத்தி மகிழந்தாகிவிட்டது. இனிமேல் பாலசிங்கத்திற்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தி அகமகிழ ஆயத்தமாகிவிடுவீர்கள். மக்களை மட்டும் மறந்துவிடுவீர்கள்.
இதுவரைக்கும் இலங்கையில் மக்கள் போராடுகின்ற போது எங்காவது மூலையில் நின்றாவது குரல் கொடுத்தீர்களா?
இப்போது இன்னொரு சந்தர்ப்பம். என்ன செய்வதாக உத்தேசம்?
நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இன்னும் சில வருடங்களில் தமிழ்ப் பேசும் மக்கள் செறிவாக வாழ்ந்த பிரதேசங்கள் இருந்ததாக புத்தகங்களில் மட்டுமே படித்தறியக் கூடிய நிலைமை உருவாகும்.
நிலத்தை ஆக்கிரமிக்கும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத கொலைகாரர்களுக்கு எதிராகவும் பல் தேசிய முதலைகளுக்கு எதிராகவும் தெருவில் இறங்கிப் போராட நீங்கள் தயாரா?
வீரம் செறிந்த போராட்டத்தின் பங்குதாரர்கள் என்று கூறி பணம் கேட்க வரும் நீங்கள் இப்போது உங்கள் வீரத்தோடு இலங்கை இந்தியத் தூதரகங்களின் முன்னாலும், பல்தேசிய ஆக்கிரமிப்பாளர்களின் முன்னாலும் அணிதிரண்டு போராடத் தயாரா?
அல்லது போராடும் மக்களை அனாதைகளாகத் தெருக்களில் அலையவிட்டுவிட்டு ஐந்து நட்சத்திர விடுதிகளில் மனிதக் கசாப்புக்கடைக் காரர்களோடு விருந்துண்டு களிக்கப்போகிறீர்களா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மின்னஞ்சல் அனுப்பினால் சில வேளைகளில் தெரிந்து கொள்வார்கள் தங்களுக்கு வாக்களித்த மக்கள் போராடுகிறார்கள் என்று.
ஒற்றுமை ஒற்றுமை என்று நீங்கள் போட்ட ஓலத்தில் அழிக்கப்படுக்கொண்டுருக்கும் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நீங்கள் தயாரானால் ஒற்றுமை தானாக உருவாகும்; சந்தர்பவாதிகள் தொலைந்து போய்விடுவார்கள்.
என்ன செய்யப்போகிறீர்கள்? போராடத் தாயரா??
சும்மா விசா;க்கதை கதையாதோங்கோ. எங்களுக்கேன் தேவையில்லாத வேலை!
மக்கள் புரட்சிக்காரர்கள் ஏனாம் களமிறங்காது இருக்கிறீர்கள்??? மக்கள் போராட்ட களம் திறக்கப்பட்டாச்சு புரட்சி புலுடாக்களே இன்னுமேன் தயக்கம்? பயமா! போரட்டம் என்றால் அவ்வளவு பயமா!
விசக் கிருமிகளே! குறித்துக்கொள்ளுங்கள்!! உங்கள் கோவில்களில் இருந்து மக்களை வெளியில் வரவழைத்துப் போராடத் தயார்!!!
சொல்ல வேண்டாம் செய்து காட்டுங்களேன்..
As you said we have to do continuous protest infront of Indian and srilankan embassy.
All the organisations must join together and do this in a big way.If posiible we can cover both the embassies on the same day with our crowd.
வீரம் செறிந்த போராட்டத்தின் பங்குதாரர்கள் என்று கூறி பணம் கேட்க வரும் நீங்கள் இப்போது உங்கள் வீரத்தோடு இலங்கை இந்தியத் தூதரகங்களின் முன்னாலும், பல்தேசிய ஆக்கிரமிப்பாளர்களின் முன்னாலும் அணிதிரண்டு போராடத் தயாரா?//////
ஒருவர் எந்தவகையான போராட்டத்தை எந்தக்களத்தில் செய்யவேணுமென்பது அவரது முடிவு. நீங்கள் அடுத்தவருக்கு கட்டளையிட யார் என்று சொல்லுங்கள்? உங்களிற்கு போராடா விருப்பிருந்தால் போய் போராடுங்களேன் யார்தடுத்தது!
வீரம் செறிந்த போராட்டத்தின் பங்குதாரர்கள் என்று கூறி பணம் கேட்க வரும் நீங்கள் இப்போது உங்கள் வீரத்தோடு அணிதிரண்டு போராடத் தயாரா?////
Time has come to protest against all of them(இலங்கை இந்தியத் தூதரகங்களின் முன்னாலும், பல்தேசிய ஆக்கிரமிப்பாளர்களின் முன்னாலும்)People have learnt the lessons and now clearly seeing the anti Tamils actors.People will come to protest.
மக்களை அழைக்க முன் எதற்காக இந்தப் போராட்டம் என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இதற்கு தொடர்ச்சியான போராட்டம் தேவை. பாலஸ்தீனர்களுக்கும் இதே பிரச்சனை இருக்கிறது.
அந்த அமைப்புக்களையும் இணைத்து போராட வேண்டும். இஸ்ரேலுக்கு பிடிக்காது,அமெரிக்காவிற்குப் பிடிக்காது
என்று ஒதுங்கி நிற்க முடியாது. தனித்து நின்று போராடி உலக வல்லரசுகளை வெல்ல முடியாது என்பதை
இனியாவது இந்த அமைப்புக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சிவன்- கேள்விகளை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா?
தருமி – ஆ.. ஆ.. நீ கேட்காத..நீ கேட்காத.. நானே கேட்கிறன் எனக்கு கேட்கத்தான் தெரியும்.
முக்கியமாக வருகின்ற வருடம் மார்ச் மாதம் ஐநாவின் மனித உரிமை பேரவையின் அமவிர்க்கு முன்னர் நாங்கள் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பாக இக் கூட்டத்தில் ஆரயப்பட்டது. இதில் பிரித்தானிய தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானிய உறுப்பினர்கள், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள், பிரித்தானிய தமிழ் கொன்சவற்றி , பிரித்தானிய தமிழ் லேபர், தமிழ் பிரண்ஸ் ஒப் லிப்ரெம் மற்றும் சர்வதேச தமிழ் ஊடகவியளாளர் சங்கம்(ஈஆTஆJ) ஆCT ணோW ஆகிய அமைப்புக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் தகவல் மையம், தமிழ் தேசிய கூட்டமைப்பு-பிரித்தானிய கிளை, ஆகிய அமைப்புக்கள் கலந்து கொள்ளமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்திருந்தனர். மேலும் சில செயல் அமர்வுகள் நடைபெறவிருக்கின்றது:
///
Tamil orgs are still going behind Labour, LIb, conservatives.,Why these Labour, LIb, conservatives couldn’t they stop May09.? Please learn,try to see the role of these parties.
http://www.eelamenews.com/archives/112419
A delegation from International Crisis Group met with British All Party Parliamentary Group for Tamils (APPG) in the UK to apprise them of the plight of Tamil people in Sri Lanka and to urge them to support the call for an Independent International Investigation into the conduct of the civil war.
The recent meeting in London, of senior ICG members with British All Party Parliamentary Group for Tamils delegation, headed by Lee Scot (Conservative MP), Suborn McDonald Labour Party MP. The meeting was organised by the British Tamil forum
.
//// 1. Lobbying won’t work.
our tamil orgs should learn this simple rule first.
2.
put the pressure/protest against INDIA, WEST will work.: இதற்கு தொடர்ச்சியான போராட்டம் தேவை. பாலஸ்தீனர்களுக்கும் இதே பிரச்சனை இருக்கிறது.
அந்த அமைப்புக்களையும் இணைத்து போராட வேண்டும். இஸ்ரேலுக்கு பிடிக்காது,அமெரிக்காவிற்குப் பிடிக்காது
என்று ஒதுங்கி நிற்க முடியாது. தனித்து நின்று போராடி உலக வல்லரசுகளை வெல்ல முடியாது என்பதை
இனியாவது இந்த அமைப்புக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்:thanks SUTHA,
போராடுபவர்களின் தெரிவுதான் யாருடன் சேர்வது யாரை தவிர்ப்பது. எப்படி எங்கு இயங்குவது என்பதும் அவர்களின் உரிமை. சிறிலங்கா அரசபயங்கரவாதிகளை இன்றும் நட்பு சக்தியாக கொண்ட பாலஸ்தீனர்கள் தான் உங்கள் நண்பர் எனில்! நீங்கள் யார்! நீங்கள் தாரளமாக பாலஸ்தீனர்களுடன் கைகோருங்கள் தடையெதும் இல்லை. போராட்டம் போராட்டம் என சொல்கிறீர்களே தவிர போராடுவது மாதிரி தெரியவில்லையே! ஓஓ உங்களிற்கு தெரிந்த போராட்டம் தமிழ்தேசீய ஆதரவு அமைப்புக்களின் ஊர்வலங்கள் ஒன்றுகூடல்களில் போய் குழப்பம் விளைவிப்பதுதானே!
நிர்மலன், நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எம்.பீ மாருக்கு பின்னால் ஓடுவதுதானே உங்கள் வேலை. இவ்வளவு அழிவிற்கும் காரணமான இந்த வல்லாதிக்கங்களோடு தானே இன்றும் கைகுலுக்குகிறீர்கள். நீங்கள்தானே பாலஸ்தீன இயக்கத்திடம் முன்பு பயிற்சி பெற்றீர்கள்.
இப்போது என்ன நடந்தது. முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டினீர்கள். அதனால் அரபு உலகம் உங்களை வெறுத்தது. உங்களை திருத்திக் கொள்ளுங்கள். சனல் 4 உம் எத்தனை நாளைக்கு உதவி செய்யுமென்று பார்ப்போம்.
எம்.பீ மாருக்கு பின்னால் நான் ஒடுவதாக சொல்லும் தங்களை சிறிலங்கா அரசபயங்கரவாதத்திற்கு பின்னால் ஒடுவதாக நான் சொன்னால் என்ன தவறு? அங்குதானே உங்கள் பாலஸ்தீன தோழர்கள் நிற்கிறார்கள்.
தமிழனுக்கு யார்தான் அழிவை ஏற்படுத்தாது விட்டார்கள் சொல்லுங்களேன்? அப்ப நாங்கள் தற்போது சிறிலங்காவுடன் முரண்படும் நாடுகளை ஆதரிப்பதில் என்ன தவறு!
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது பலசம்பவங்களின் சங்கிலி கோர்வையே தவிர தனியொரு உதிரிச்சம்பவம் அல்ல. சிறிலங்கா முஸ்லிம்கள் தமிழருக்கு பல தசப்தங்களாக கூடியிருந்து குழிபறிப்பது உங்களிற்கு ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் தற்காலிகமாக கெளரவமாக வெளியேற்றப்பட்டதுதான் உங்களிற்கு ஆறாக்கவலையெனில் நீங்கள் யார்? சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் நண்பர்களான பாலஸ்தீனர்கள் சிறிலங்கா முஸ்லிம்கள் உங்களிற்கு நண்பர்கள் எனில் நீங்கள் யார்?
ஆயுதபயிற்சியை ஒரு அமைப்பிடம் பெற்றால் நாமென்ன அவர்களுக்கு ஆயுளுக்கும் அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கணுமா! புலிகள் எங்கே அவர்களிடம் ஆயுத பயிற்சி பெற்றார்கள்? நீங்களும் இந்தியனிடம் பயிற்சி பெற்றீர்கள் தானே அதற்காக இந்திய விசுவாசத்துடனா இருக்கிறீர்களா சுதா! ஆமா அதற்கு முதல் அரபுலகம் சிறிலங்காவின் எதிரிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றிய பின்னர்தான் நண்பர்கள் ஆனர்களா! உந்தக்கதையை யாருக்கும் போய் சொல்லுங்கள். ஒரு இனவிடுதலைப் போராட்டத்தை வரட்டு சிந்தாந்த போரட்டமாக அணுகும் முறைமையிலிருந்து முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள். ஒரு சிறுபான்மையினம் வரட்டு சிந்தாந்த போரட்டமூடாக விடுதலை அடைந்த ஒரு உதாரணத்தை சொல்லுங்கள்! அண்மையில் இனவிடுதலை பெற்ற நாடுகளிற்கு பின்னால் மேற்குலக நாடுகள் இருந்தன. கரட்டுச் சித்தார்த்தங்களும் பாலஸ்தீன பயங்கரவாதமும் அல்ல.
//அவர்கள் தற்காலிகமாக கெளரவமாக வெளியேற்றப்பட்டது//
மிகக் குறுகிய கால அவகாசத்தில் கையில் ஒரு பையும் சில நூறு ரூபாய்களுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப் பட்ட மக்கள், கால் நடையாகவே வெளியேற்றப் பட்டனர். புலிகளின் அகராதியில் இது ஒரு கெளரவமான நடவடிக்கையாக இருக்கலாம். எம்மைச் சுற்றி எல்லாப் புறமும் எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருக்கும் நாம் விடுதலை அடைந்திருந்தால் தான் அதிசயம்.
நிர்மலன், 1915 ஏற்பட்ட கலவரத்தில் முஸ்லிம்கள் சிங்களவர்களால் தாக்கப்பட்டனர். அப்போது சேர் .பொன்.ராமநாதன்
என்ற தமிழ் அரசியல் தலைவர் சிங்களவர் பக்கம் நின்று பிரித்தானியாவிற்கு காவடி தூக்கினார். ஆரம்பத்தில் யாருக்கு யார்
குழிபறித்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அன்றில் இருந்தே தமிழ் அரசியல்வாதிகளின் மேல் இருந்த
நம்பிக்கை பொய் விட்டது.
அடுத்து, புலி இயக்கத்தின் சார்பில் உமா மகேஸ்வரன் செல்லவில்லையா? நீர் சிறுவனாக இருந்திருப்பீர்.
பழைய புலி ஆட்களிடம் கேளும்.
புலிகளை தடை செய்த ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் நண்பர்கள் என்று எப்படி சொல்வீர்கள்? இன்னமும் தடை
நீடிக்கிறது. உங்கள் புலி இயக்கத்தை இன்றும் பயங்கரவாதிகள் எண்டு சொல்லும் பிரித்தானியாவுடனும், அமெரிக்காவுடனும்
எப்படி சார் உங்களால் கை குலுக்க முடிகிறது?
ஒரே இரவில் உடைமைகளை விட்டுச் செல்ல வேண்டுமென அறிவித்தல் கொடுப்பது ,கௌரவமான வெளியேற்றம் எண்டு
எப்படி சார் நாக் கூசாமல் சொல்கிறீர்கள்? பிழைகளை நியாயப்படுத்த முயல வேண்டாம். அது இனி விடும் தவறுகளையும்
நியாயப்படுத்தும் மோசமான வல்லமையைத் தந்துவிடும்
நேற்றய தவறுகள் இன்றய தாக்கங்கள் இன்றய தவறுகளுக்கு நாளைய சந்ததி பதில் கூறவேண்டிய அல்லது முகம் கொடுக்கவேண்டிய நிலைக்கு உடந்தையாக ஒரு மக்கள் கூட்டமோ அல்லது அதன் தலைவா்களோ இருந்தால் எப்படி அமைதியும் சமாதானமும் உன்னத வாழ்க்கையும் ஏற்படும்.
நிர்மலன்,சுதா இந்த உலகில் நிரந்தர நண்பனென்றோ நிரந்தர எதிரியென்றோ யாரும் கிடையாது,பாலஸ்தீன தலைமை இலங்கையை ஆதரிப்பது உண்மையில் வேதனையான விடயமே ஏனெனில் விடுதலைக்காக போராடுபவா்கள் செய்யும் முறை அல்ல இருந்தாலும் நாளை சிலவேளை அவா்கள் மாறக்கூடும்.சுதா அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் புலிகளைத்தான் தடை செய்துள்ளார்கள் தமிழா்களையோ அவா்களது போராட்டத்தையோ அல்ல அந்த வகையில் நிர்மலனை புலி வெறியா் அல்ல என்று நீங்களே ஆமோதிக்கிறீா்கள்.யாழ்ப்பாணத்திலிருந்த முஸ்லீம்களை வெளியேற்றியதன் விளைவுகளை நாம் சந்திக்கத்தொடங்கிவிட்டோம் நிர்மலன் நீங்கள் ஆயிரம் நியாயங்களை கூறினாலும் அது ஒரு சரித்திரத்தவறு நியாயப்படுத்தமுடியாத தவறு.
அா்த்தமற்றவகையில் சம்பந்தமில்லாத விடயங்களை இழுத்து முடிச்சுப்போடுவதால் என்ன இலாபம்? இன்று தமிழ் இனத்திற்கு ஏதோ ஒருவகையில் மனிதா்களாக வாழக்கூடிய விடுதலை தேவை அதற்கு என்ன செய்யவேண்டுமோ அல்லது செய்யக்கூடாதோ என்று உரையாடுவது ஒன்றே நம் முன் உள்ள கடமை இதற்கு புலியையோ புளட்டையோ அல்லது ரெலோவையோ இழுக்கவேண்டிய தேவையில்லை என்றே நான் நம்புகிறேன்.
“யாழ்ப்பாணத்திலிருந்த முஸ்லீம்களை வெளியேற்றியதன் விளைவுகளை நாம் சந்திக்கத்தொடங்கிவிட்டோம் ” இதை என்னவென விளக்கமாக சொல்வீர்களா குமார்!
யாழ்ப்பாண மேட்டுக்குடியின் சிந்தனை வழிதான் நமது துயருக்கு காரணம் என்று பல மேதாவிகள் புலம்பினாலும் யாழ்ப்பாணமே தமிழரின் கலாச்சார நதி ஊற்றெடுக்கும் இடம்,அடையாளத்தின் இதயம், அங்கேதான் அடக்குமுறைக்கு எதிரான எண்ணங்களின் கரு உருப்பெறுகின்றது ஆதலால் //யாழ்ப்பாணம் ஒரு பிரச்சனை//அதை அழித்துவிட்டால்,சிதைத்துவிட்டால் பிரச்சனையே இருக்காதல்லவா அதற்கு யாரை பயன்படுத்தலாம் என்று பேரினவாதிகள் முயலும் வேளை பாதிக்கப்பட்டவா்கள் பளிவாங்கும் மனநிலையில் முன்வந்து நாங்கள் இருக்கிறோம் என்பார்கள் அதன் பலனே இன்று யாழில் போதைவஸ்து வினியோகங்கள்,விபச்சார கலாச்சாரங்கள் சிறுவா் பாலியல் துஸ்பிரயோகங்கள் மிக வேகமாக அதிகரித்து செல்கின்றது.இதன் பின்னால் யார் யார் உள்ளார்கள் என்பதை நீங்கள் முயன்றால் அறியலாம்.
1915ல் சிங்கள இனவாத வன்முறையில் 10 சிறிலங்கா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். கொலைகாரர்களிற்கு தூக்குதண்டை விதிக்கப்பட்டது. இராமநாதன் அரசியல்வாதிமட்டுமல்ல சட்டத்தரணி. அது அவரது தொழில். தண்டனைக் குறைப்பை கோரர வேண்டியது அவரது தொழில் தர்மம் அதை செய்தார். அதை செய்யாது விட்டிருந்தால் என்ன நடக்கும். அவர்களின் தூக்குநாளை ஒரு இனப்படுகொலை நாளாக்கி மேலும் பல ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவார்கள். அதை தடுத்தது தவறா?
சரி தனது தொழில் தர்மத்தின் படி நடந்த ஒருவரை காரணம் காட்டி இன்றுவரை சிறிலங்கா முஸ்லிம்கள் செய்யும் தமிழின விரோதத்தை நியாப்படுத்துகிறீர்கள். அந்த படுகொலையை செய்த சிங்களவருடன் எப்படி விசுவாசமாக சிறிலங்கா முஸ்லிம்களால் ஒத்தியங்கமுடியாது. கொலைகாரன் உற்ற நண்பன் சட்டத்தரணியின் இனம் ஆயுள்கால விரோதி. இதை நியாயம் எனச்சொல்லப்போகிறீர்களா!
உமா மகேஸ்வரன் புலிகள் இயக்கத்திலிருந்து துரோகியென விலக்கிய பின்னர் எப்படி அவரை புலியாக அடையாளப்படுத்த முடியும்.
முதலில் அரசியல் அரிச்சுவடியை தெரிந்து கொள்ளுங்கள்.
1) அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை எதிரியுமில்லை
2) எதிரியின் எதிரி எனக்கு நண்பன்.
எனிச்சொல்லுங்கள் மேற்குலகு இந்தக்கணம் எமக்கு எதிரியா! நண்பனா! யாரினது பக்கமும் சாராது சுயமாக தமிழ்மக்கள் பலத்தில் இருந்தது தானே ஒருவருக்கும் எம்மை எமது போராட்டத்தை பிடிக்காமல் போனது.
கிழக்கில் சிறிலங்கா முஸ்லீம் அரசியல் மத தலைவர்களின் வழிகாட்டலுடன் தமிழர்கள் கிராமம் கிராமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர் பாலகி முதல் பாட்டி வரை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டனர். சொத்துக்கள் காணிகள் சூறையடப்பட்டன இப்படி வார்த்தைகளால் சொல்லி முடிக்க முடியாத கொடும் செயலை செய்துகொண்டிருந்த நிலையில் கூடவிருந்து குழிபறித்த சிறிலங்கா முஸ்லீம் இனத்தின் ஒரு அங்கமான வடபகுதி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்களிற்கு 2நாட்கள் தொடக்கம் 3வரையான கால அவகாசம் கொடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்படவில்லை பாலியல் வல்லுறவோ புரியப்படவில்லை. அவர்கள் எடுத்துச் செல்லக்கூடிய உடமைகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். போர் நெருக்கடிக்குள்ளும் அவர்களிற்கான போக்குவரத்து வசதி செய்யப்பட்டது. 2002 யுத்த நிறுத்தத்தை அடுத்து அவர்களிற்கான பகிரங்க மீள்குடியேற்றம் அனுமதிக்கப்பட்டது. இவற்றை ஒரு யுத்த நெருக்கடிக்குள் எதிரிக்கு துணை போன கூடியிருந்து குழி பறித்த ஒரு சமூகத்திற்கு ஒரு இராணுவ அமைப்பு செய்து கொடுப்பது என்பது நிட்சயமாக ஒரு கெளரவமான நடத்தையே.
முதலில் அரசியல் அரிச்சுவடியை தெரிந்து கொள்ளுங்கள்.
1) அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை எதிரியுமில்லை
2) எதிரியின் எதிரி எனக்கு நண்பன்.
/// தெளிவாக இருத்தல் வேண்டும் இந்த சிந்தனை முறை மாறவேண்டும்.
பாட்டியின் எதிரி காகம் மட்டுமல்ல, நரியும் தான் .
பாட்டியின் எதிரி காகம் ,காகத்தின் எதிரி நரி ஆகவே நரி பாட்டியின் நண்பன் என்று நாம் சிந்திப்பது ,நாம் நமக்காக
எதிரிக்கு எதிராக போராடவேண்டும் என்ற சிந்தனையை மழுங்கடித்து எதிரி தண்டிக்கப்பட்டால் போதும் என்ற ஒரு சின்றின்பமே.எதிரிக்கு எதிரான தீர்வு அல்ல. பாட்டியின் வடை பாட்டிக்கு வேணும்
இன்னமும் போராட போகவில்லையா! பாட்டி வடைசுட்ட கற்பனை கதை சொல்லதான் தெரியும்.
எதிரியின் எதிரி நண்பனாக இருக்கவேண்டிய கட்டாயமில்லை என்பதை இவ்வளவு சீக்கிரம் புரியக்கூடிய வல்லமை உள்ளதையிட்டு மகிழ்ச்சி
முஸ்லீம்கலை யாழில் இருந்து துரத்தியதுநல்விடயமே, ஏனெனில் அதனால் தானே பாக்கிஸ்தானும், இரானும் இலங்கை அரசுக்கு புலிகலை ஒழிக்க உதவியது, தேசிய தலை தீர்க்க தரிசனம் மிக்கவர், இந்தியாவை பலகைத்து விட்டோம், பாக்கிஸ்தானும், இரானையும் பகைக்க வேன்டும் என்று முஸ்லிம்கள் மீது கை வைத்தார், சினாவுக்கும். அமெரிக்காவுக்கும் க புலி அனுப்ப அவர் திட்டம் வைத்திருந்தார்,
.
அவர் புலி இயக்கத்தில் இருந்த போது, பிரபாகரனின் ஒப்புதலோடுதான் பாலஸ்தீனம் சென்றார்.
அது என்ன அரசியல் அரிச்சுவடி? ‘எதிரிக்கு எதிரி நண்பன்….அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை நண்பனுமில்லை…
இதைத்தான் நீங்கள் அரசியல் ராஜதந்திரம் என்கிறீர்களோ…போராடும் மக்களுக்கு எதிரி என்பவன் ஒடுக்குபவனாகவும்,
அவனுக்குத் துணை போபவர்களாகவும் இருப்பார்கள். உங்கள் சித்தாந்தம் எமக்குப் பொருந்தாது. அனேகமாக
வல்லரசுகளோடும் அவர்களின் எம்பீக்களோடும் உறவாடுவதற்கு நீங்கள் சொன்ன ‘எதிரிக்கு எதிரி நண்பன்….அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை நண்பனுமில்லை’ பயன்படலாம்.
அண்ணன் இல்லையேல் தமிழரிற்கு விடிவே தேவையில்லை என்று சிந்திக்கும் கூட்டம் இது . பிரபகரனிசம் மட்டுமே தேசியம் என்ற மாயையில் சிந்தனையில் மூழ்கியோரை மீட்டு எடுக்க முற்சிப்பதிட்கு பதில் கல்லில் நாருரிப்பது சுலபம்.
இவர்களிலும் பார்க்க தேசியத்திற்காக உயிரை தியாகம் செய்த மாவீரர் குடும்ப உறவுகளை வென்றெடுத்து இந்திய இலங்கை மற்றும் இனப்படுகொலைக்கு துணை போன பல்தேசிய ஆக்கிரமிப்பாளர்களின் முன்னாலும் அணிதிரட்டுவது போராடுவது உண்மையான உணர்வுபூர்வமானதாகவிருக்கும். வெல்லும்
குமார்! 1977வரை முஸ்லீம்கள் தமிழரிடம் ஒற்றுமையாக வாழ்வது போல் காட்டிக்கொண்டார்களல்லவா? அப்போ எதற்காக1977 பாரளமன்ற தேர்தலில் தனிநாட்டு கோரிக்கைக்கு எதிராக முஸ்லீம்கள் வாக்களித்தனர் ? இலங்கைதீவின் போதை வஸ்து கடத்தல் விற்பனை முன்னோடிகள் முஸ்லீம்கள்தான். புலிகள் இருக்கு மட்டும் அடங்கி கிடந்தார்கள் இப்போ தொழிலை யாழில் தொடங்கிவிட்டனர். அவ்வளவுதான்.சும்மா மொட்டம் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதீர்கள் குமார்.
சுதா! புலிகளில் உமாமகேசுவரன் இருக்கும் போது அவர்தான் தலைவர். பிறகெப்படி பிரபாகரனிடம் அனுமதி பெற்றார் என்கிறீர்கள்? பலஸ்தீன தொடர்பென்பது மார்க்சிசவாதிகளின்(?) தொடர்பே தவிர பிரபாகரனினது தலைமையில் இருந்த விடுதலைப்புலிகளின் தொடர்பல்ல. உந்த ஒடுக்குபவன் மக்கள் போராட்டம் பலஸ்தீனதோழர் என கதைவிடுகிற நீங்கள். வரட்டுச் சித்தார்த்தங்களும் பாலஸ்தீன பயங்கரவாதிகளுடம் இணைந்து இனவிடுதலை பெற்ற நாட்டை குறிப்பிடுங்கள். “என்எதிரியின் எதிரி எனக்கு நண்பன்” என்பது எந்த அரசியலுக்கும் அடிப்படையானது. உங்கடை வரட்டுச் சித்தார்ந்தம் உண்மையை ஏற்க மறுக்குது.
தேவன்2 இன்னமும் போராட போகவில்லையா? பழுதான மாவை எவ்வளவுகாலத்திற்குத்தான் திருப்பி திருப்பி அரைக்கப்போகிறீர்கள்? ஏதாவது புதிசாய் அரைக்க இல்லையா!
வீரன்! பாகிஸ்தானுக்கும் சிங்களத்திற்குமான தொடர்பு இந்தியா-பாக்கிஸ்தான் போரின் போதே தெளிவாக தெரிந்த ஒன்று. இந்நிலையில் கூடியிருந்து குழி பறித்த முஸ்லீம்க ளின் வெளியேற்றத்தை காரணமாக சொல்வது தங்கள் வழமையான லங்காபுவத் பிரச்சாரம்.
எம்மை எமது போராட்டத்தை பிடிக்காமல் போனது.
கிழக்கில் சிறிலங்கா முஸ்லீம் அரசியல் மத தலைவர்களின் வழிகாட்டலுடன் தமிழர்கள் கிராமம் கிராமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர் பாலகி முதல் பாட்டி வரை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டனர். சொத்துக்கள் காணிகள் சூறையடப்பட்டன—-நிர்மலன்,
அப்ப உங்கள் புலி கேடிகள்,நிலாவினியையும் கருனாவின் மற்றய பெண் ஆதரவாளர்களையும் ஏமாற்றி கடத்தி வன்னிக்கு கொன்டு சென்று, கற்பழித்து கொன்ற போது, அவர்கள் தமிழர்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையோ. முஸ்லிம்கள் செய்ததாக பொய் கூறும்நீர் புலி கேடிகள் மட்டக்களப்பு தமிழ் பெண்களுக்கு செய்த அனியாயத்தை சொல்வீரா, செய்த அனியாயத்துக்கு தான் அந்த குன்டன் கேடி குடும்பத்தோடு அழிந்தான்
என லங்காபுவத் செய்திகள் சொல்கின்றன.
பதில் சொல்ல முடியா விட்டால் புலிகல் ஒளியும் கோவனம் லங்கா புவத் என புலிகலின் பொய் குரல் சொல்கின்றது,
வீராதி வீரரே, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான துரோகிகளின் கற்பழிப்பு பழியை எதிரிகளும் ஏற்கார் என்ற அடிப்படை அறிவு கூட உமக்கு இல்லை போலும். மட்டக்களப்பு மக்களுக்கு புலிகள் பற்றியும் எலிகள் பற்றியும் நன்றாகத் தெரியும். நீர் அம் மண் சார்பாக சான்றிதழ் கொடுக்கத்தேவையில்லை. அதற்கு உங்களைப் போன்றவர்களுக்கு தகுதியுமில்லை. அடிப்படையில் 83 இல் இருந்து உம்மைப்போன்றவர்களின் செயற்பாடுகள் காரணமாகத்தான் முஸ்லீம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் படிப்படியாக குரோதம் வளர்ந்தது என்பது அங்கு வாழ்ந்தவர்களுக்கும் வாழ்பவர்களுக்கும் நன்கு தெரியும்.
கொடுமை செய்தவர்களில் முன்ணணியில் யார்ரென்று கேட்டால் புலிகளைத்தான் சுட்டிக்காட்ட முடியும். அரிச்சந்திரா! அதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். இலங்கையில் தமிழ்யினம் சமயுரிமை தேடிப் போனபோது அதை சூனியத்தில் புகுத்திவிட்டன் பிரபாகரனும் அதன் வழிந்தவர்கள்களாகிய யாழ்.மேட்டுக் குடி சமூகமே!. இதற்கு மறுப்பு தர முயலாதீர்கள். முனைந்தால் திரும்பவும் பழைய தவறைச் செய்தவர்களாவீர்கள்.
அரிச்சந்திரன் என்று பெயர் வைத்துக்கொண்டு பொய் சொல்ல கூடாது, சரனடைந்த புலிகல் சொல்லும் சாட்சியம் பெண் ஆதரவாளர்களையும் ஏமாற்றி கடத்தி வன்னிக்கு கொன்டு சென்று, கற்பழித்து கொன்ற விபரங்கல்
உண்மைதான் chandran.raja கொடுமை செய்தவர்களை கொடுமை செய்தவர்களில் முன்னிலையுள்ளவர்கள் புலிகள்தான்.
veeran, நிர்மலன் சுட்டிக்காட்டும் லங்காபுவத் செய்திகள் இவைகள்தான் என்பதை விளங்கிக்கொள்ளும் உள்ளே இருந்தால்.
உள்ளே இருந்தால் தலைவரின் தலையில் தான் ஒன்றும் இல்லை
உள்ளே இருந்தவர்களின் நடவடிக்கை மூலமாக தான் இன்று பகத்துலட்சம் தமிழர்கள் நிரந்தரமாக வெளியிலும் உள்ளார்கள்.
இனிமேலும் உள்ளே- வெளியே என்கிற கருத்துக்களை பொறுப்புணர்வுடன் வெளிப் படுத்த வேண்டும் மகாராசா அவர்களே! வெளியே வந்த
வர்களுக்கு உள்ளே இருப்பவர்களின் அக்கறை என்னவோ? ஏன் உள்ளே இருப்பவர்களைப் பற்றி இனியும் பிழைப்பு நடத்தவா? அல்லது உங்கள் “உள்ளே” எங்கிற அர்த்தம் உடம்பின் மேல் பகுதியை குறிக்கிறதா? சூக்குமமாக எழுதினால் எப்படி? ஜனரஞ்சமாக புரிவைத்தால்தானே உங்களின் “உள்ளுக்குள்” அர்த்தத்தை நாமும் புரிந்து கொள்ள முடியும். உங்களுக்கும் உள்ளுக்குள் என்ன இருப்பதென்பதையும் நாம் அறியமுடியும்
மற்றவர்களுக்கும் வெளிப்படுத்த முடியும். அரிச்சந்திரா! இது விடயத்தில் கவனம் செலுத்தவும்.
கிளிநொச்சியில் எல்லா நாளும் ஒரு நாளே
நடேசன்
எண்பதுகளில் மதவாச்சியில் நான் வேலை செய்த காலத்தில் வார இறுதியில்; மோட்டார் சைக்கிளில் யாழ்ப்;பாணம் செல்லும் போது கிளிநொச்சி நகரத்தை தாண்டிச் செல்வேன். அக்காலத்தில் கிளிநொச்சியில் எனக்கு வேலை கிடைத்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்வேன். மதவாச்சியில் மிருக வைத்திய சாலை பால்சேகரிக்கும் நிலையம் என்பன என் காலத்தில் என் முயற்சியாலும் உருவாக்கப்பட்;டவை. அவை பலன் தரும் முன்பு நான் அந்த ஊரை விட்டு விலகிவிட்டேன். கிளிசொச்சியில் கறவை மாடுகள் ஏராளம். அதிக பால் சேகரிக்கப்படும் நிலையமும் வசதியான வைத்திய சாலையும் உண்டு. எனவே அரசாங்க ஊழியனாகிய நான் வேலை பயணத்தில் யாழ்ப்பாணம் பாதி தூரத்தில் இருப்பதால் ஆசைப்பட்டதற்கு நியாயம் உண்டு.
இப்படியாக நான் ஆசைப்பட்ட கிளிநொச்சி 83 இற்குப்பின் தொடங்கிய போர் நடவடிக்கையால் காசநோய் பீடித்தவன் போல் மெலிந்து வந்தது. இதன் பிறகு 95களில் விடுதலைப்புலிகள் வன்னிக்குச் சென்றதும் மிகவும் பாரதூரமான எயிட்ஸ் நோயாக மாறியது.
விடுதலைப்புலிகள் கோலோச்சிய காலம் சங்க காலத்து பூம்புகாராகவும் கோவலன் மாதவி புனல் விளையாட்டு விளையாடிய இடமாகவும் வெளிநாட்டில் இருந்து சென்ற எனது உறவினர் நண்பர்களால் வர்ணிக்கப்பட்டது. திருட்டுகள் கொலைகள் நடைபெறாத இராம இராச்சியம் என்றார்கள். அவர்கள் பார்த்தது தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நீதிமன்றம் செஞ்;சோலை என இராம இரச்சியத்தின் கருணை வெளிப்பாடுகளைத்தான். ஆனால் எனது துரதிஷ்டம் நான் கேள்விப்பட்டது காந்;தியின் சிறைச்சாலை பின்பு மாதவன் மாஸ்டரின் நாய்க்கூடுகள், துணுக்காய் இறைச்சிக்கடை என்பனவே
ஓமந்தையில் என் படம் இருந்ததால் என்னால் அக்கால கிளிநொச்சி தரிசிக்க முடியாத இடமாகிவிட்டது..
இப்படியான இடத்தில் வானவில் என்ற பெயரில் நானும் எனது நண்பர்களுமாக சுவிகாரம் செய்து மாதம் 2000 இலங்கை ரூhய்கள் உதவி; செய்யும் ஐந்து குடும்பங்களை பார்ப்பதற்காக அண்மையில் கிளிநொச்சிக்குச் சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்குவதற்கு எண்ணினேன். அங்கே போயச்; சேர்ந்த பின்புதான் எனது தொலைபேசியில் மெல்பனில் நடக்க இருக்கும் மாவீரர் தின நிகழ்ச்சிக்கான அழைப்பு குறும் செய்தியாக வந்தது. அப்பொழுதுதான் நினைத்தேன் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாளிலும் மாவீரர்தின நாளிலும் கிளிநொச்சியில் இருப்பதற்கு கொடுப்பினை இருந்திருக்கிறது என நினைத்துக்கொண்டேன்.
ஆனால் இப்பொழுது கிளிநோச்சியில் எல்லா நாட்களும ஒரு நாளாகவே தோற்;றமளிக்கிறது.
நிச்சயமாக சங்ககாலத்து பூம்புகாரையும் இராம இராச்சியத்தையும் பார்க்காத எனக்கு, அதை கிளிநொச்சியில் அழிந்த மாவீரர் துயிலும் இல்லங்களையும் தளபதிகளின் இடிந்த வீடுகளையும் பார்க்க நேர்ந்தது. தமிழ் சினிமா முக்கியஸ்தர்களாகிய மகேந்திரன் சீமான் போன்றவர்கள் தங்கிய இடங்களை இடிந்த நிலையில் பார்க்க முடிந்தது ஆனால் தற்போதைய காட்சிகள் எல்லாம் மனதிற்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. விவசாயம் உற்பத்தி தொடங்கிவிட்டது. பாடசாலைகளுக்;கு பிள்ளைகள் போய்வருகிறார்கள். இளவயதுபெண் பிள்ளைகiளை கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டு இளவட்டங்கள் வீதி வலம்வரத் தொடங்கிவிட்டார்கள். பெரிய அரசாங்க கட்டிடவேலைகள் நடக்கின்றன. கடைகளில் வியாபாரம் நடக்கிறது. போர்க்காலத்தில் பெரும்பாலான மாடுகள் உணவாகிவிட்டதால் அரசாங்கத்தால் புதிதாக வழங்கப்பட்ட மாடுகள் ஒழுங்கைகள் நிறைந்;து வலம் வருகின்றன
இளமைக் கல்வி காதல் காமம் போன்ற அடிப்படையான தேவைகளை ஒறுத்து ஒரு சமூகத்தை உருவாக்க முனைபவர்கள் சரித்திரத்தில் எப்பொழுதும் தோல்வியைத் தழுவுவார்கள் அது மட்டுமல்ல பாடசாலையில் மாணவர்களை பாதுகாக்கும் ஆசிரியர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணிய பெற்றோர் ஆத்ம ரீதியான இறைவழிபாடு என எல்லா விழுமியங்களையும் போராட்டம் என்ற ஒன்றுக்குள் நசுக்க முயன்ற இயக்கம் தோல்வியடைந்தது என்ற உண்மையை கம்போடியாவில் கடந்த வருடம் பார்த்தேன். இந்த வருடம் கிளிநொச்சியில் பார்த்தேன். பாடசாலைக்கு வந்த பிள்ளைகளை விடுதலைப்புலிகளிடம் பிடித்துக் கொடுத்த மத குருமாரும் பாடசாலை அதிபர்களும் இருந்த கிளிநொச்சியில், தங்கள் மாணவர்களுக்கு பண உதவி செய்ய அக்கறையுடன் கேட்ட தலைமை ஆசிரியரை மீண்டும் சந்தித்தேன். பிள்ளைகளை நிலத்துக்கு அடியில் குழி வெட்டி பாதுகாத்த பெற்றோர் இப்பொழுது தமது பிள்ளைகள் டொக்டராகவும் எஞ்ஜினியராகவும் வருவார்கள் என கனவு காணுகிறார்கள். சாதாரண பஸ் வண்டியில் பயணம் செய்த போது மக்களின் முகங்களில் களிப்பைக் கண்டேன். அதனால் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்பது அர்த்தமல்ல. குறைந்த பட்சம் வண்ண வண்ண கனவுகளை காண்பதற்கு சுதந்திரம் இருக்கிறது. குழந்தைகளுடன் நிம்மதிகாக வீட்டில் உறங்க முடிகிறது. இராணுவத்தினரையோ இலங்கை அரசாங்கத்தையோ எதிர்ப்;பதற்கான சுதந்திரம் விடுதலைப்புலிகள் காலத்தில் மறுக்கப்பட்ட கொடுமை 86 ஆம் ஆண்டிலிருந்து விடுதலைப்புலிகள் தவிர்ந்த தமிழருக்கு இருந்ததை மறக்கமுடியுமா?
நான் நண்பர்களுடன் உதவியளிக்கும் ஐந்து குடுப்பங்களைப் பார்த்தேன்; ஒவ்வொரு வீட்டிலும் ஒருமணித்தியாலம் செலவு செய்து அவர்கள் தேவையை விசாரித்தேன். இதில் ஒரு பெண் விடுதலைப் புலியாக இருந்த கணவரை இழந்தவர். மூன்று குழந்தைகளின் தாய். அரசாங்கம் மற்றும் கொண்டர்தாபன உதவியுடன் மூன்று குடும்பங்கள் நிரந்தர வீடுகளையும் மற்ற இரண்டு குடும்பங்கள் தற்காலிக வீடுகளையும் பெற்றுள்ளார்கள். முன்அறிவித்தல் இன்றி போன போதும் மலர்ச்சியுடன் வரவேற்றார்கள். எல்லோரது வீடுகளும சுத்தமாகவும் அத்துடன் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருந்தார்கள். பெண்களிடம்; கல்வியின் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. இலங்கை அரசாங்கத்தை குறைகூறுபவர்கள் கூட இலங்கையில் பாடசாலை கல்விமுறை மற்றும் சுகாதார வைத்திய நடவடிக்கைகளை பாராட்டுகிறார்கள்.
நான் அங்கு சந்தித்த ஓவ்வொரு பெண்ணிடமும் நான்கேட்டஒரு கேள்வி, இராணுவத்தால் ஏதாவது துன்பங்களைச்சந்திக்கிறீர்களா என்பதுதான். அவர்கள் எல்லோரும் அழுத்தம் திருத்தமாக இல்லையென்றார்கள். இலங்கையின் தமிழ் ஊடகங்களும் புலம்பெயர்ந்;;த ஊடகங்களும் இதைக்கேட்டு மிகவும் கவலைப்படுவார்கள்
வெளிநாட்டு அவுஸ்திரேலிய தமிழர்கள் டொக்டர்கள் பலரது அன்பளிப்பில் உருவான தமிழர் புனர்வாழ்வு கட்டிடத்தில் நிலைகொண்டிருந்த 57 ஆவது படைப்பிரிவு கொமாண்டரை சந்தித்தேன். கட்டிடத்தை பார்த்ததும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தலைவர்களான ஜோய் மகேஸ் டொக்டர் கணபதிப்பிள்ளை ஆகியோரது சேவையை நினைத்துப் பார்த்து பாராட்டிக்கொண்டேன். தேரிந்தோ தெரியாமலோ நான் எழுவைதீவில் வைத்தியசாலையைக் கட்டி அரசாங்கத்திடம் கொடுத்தது போல் அவர்களும் ஒரு நல்ல கட்டிடத்தைக் கட்டி இராணுவத்திற்கு கொடுத்திருக்கிறார்கள்
பிரிகேடியர் ரேனுகா ரோவெலின் தகவல்களின் படி 133501 அதாவது 42430 குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது குடியேறி இருக்கிறார்கள். இதைவிட 2185 விடுதலைப் புலி இயக்கத்தை சேர்ந்தவர்களும் இவர்களில் அடங்குவர். இராணுவத்தினர் தாங்கள் மட்டும் 3708 வீடுகளை மக்களுக்கு இதுவரையில் கட்டிக் கொடுத்தாக கூறினார்கள். இதை விட பல வேலைகளை மக்களுக்காக இராணுவத்தினர் வலிந்து செய்கிறார்கள் .யுத்தத்தின்போது அழிக்கப்பட்ட இடம். எனவே இந்த அழிவில்தங்களுக்கும் பங்கு உண்டு என ஏற்றுக்கொண்டு பலவிடயங்களைச் செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மக்கள் இராணுவத்தினரை நண்பர்களாக ஏற்றுக் கொள்வது முடியாத காரியம். எவ்வளவு சிறந்த இராணுவமாக இருந்தாலும் அவர்களது உடை ஆயுதம் அதிகாரத்தை வெளிப்படுத்தும். இது சமதன்மையற்ற உறவை உருவாக்குகிறது. இதே வேளையில் இலங்கையில் இராணுவமும் மருத்துவர்களும்தான் குறைந்த பட்ச மனிதாபிமானத்துடன் இயங்குபவர்கள். மேலும் குறைந்தது ஐந்து வருடத்திற்கு இராணுவத்தினர் தமிழ் பகுதியில்; செறிந்து இருப்பது தவிர்க்;;க முடியாதது. இதற்கு மேலும் இருப்பதை தீர்மானிப்பது சிதறுண்டுபோன பொறுப்பற்ற அரசியல்வாதிகளும் வெளிநாட்டு புலி சார்பு தமிழர்களும்தான்;.
கோடை காலத்தில் காட்டுத்தீ உருவாகும் என்ற காரணத்தால் அவுஸ்திரேலியவில் சில நாட்களில் வெளியே தீ கொழுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. அது போல் இவர்களது பொறுப்பற்றதன்மைக்கு ஒரு கட்டுப்பாடுவந்தால் தமிழ்மக்களுக்குத்தான் நல்லது.
இலங்கையில் மருத்தவர்களும் இராணுவத்தினரும் குறைந்த பட்;ச நேர்மை கொண்டவர்கள் என நான் சொல்லும்போது மிக மோசமானவர்கள் என நான் கருதுவது இலங்கை அரசியல்வாதிகளையும் ஊடகவியலாளர்களையும்தான். பலர் தெரியாமல் செய்கிறார்கள். சிலர் தெரிந்து செய்கிறார்கள்.
ஆண்டவன் இவர்களை மன்னிப்பாராக என இந்த கர்த்தர் பூமிக்கு வந்த நாட்களில் வேண்டுவதை விட வேறு என்னதான் செய்யமுடியும்?
முன்னைய பதிவுகள்
Yarl TV Live
புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்
சிங்களவர்கள் ஆகிய நாங்கள்
யாழ்ப்பாணத்தின் அவலம்!
பரீசில் பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்: புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் (பகுதி-1)
பரீசில் பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்: புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் (பகுதி-2)
ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி!
தமிழ் மக்கள் இழந்து வரும் சந்தர்ப்பங்கள்
றொபேட் பிளேக், தயவுசெய்து ஸ்ரீலங்கா மக்களுக்குப் பதில் சொல்லுங்கள் (1)
றொபேட் பிளேக், தயவுசெய்து ஸ்ரீலங்கா மக்களுக்குப் பதில் சொல்லுங்கள் (2)
“நோயில்” நடேசனின் சந்தர்ப்பவாதங்கள்.
மதவாச்சியில் மிருக வைத்திய சாலை, பால்சேகரிக்கும் நிலையம் என மாட்டு வைத்தியராக ஆரம்பித்து,காசநோய்,எயிட்ஸ் என மனித வைத்தியராக முகிழ்த்த ‘நோயில்’ நடேசன்,”வெளிநாட்டில் இருந்து சென்ற எனது உறவினர் நண்பர்களால் வர்ணிக்கப்பட்ட”தை நம்பாமல்,வேறெங்கோ “கேள்விப்பட்டதை” நம்புகிறது, முதலாவது சந்தர்ப்ப வாதம்.
“தெரிந்தோ தெரியாமலோ நான் எழுவைதீவில் வைத்தியசாலையைக் கட்டி அரசாங்கத்திடம் கொடுத்தது போல்,ஜோய் மகேஸ் டொக்டர் கணபதிப்பிள்ளை ஆகியோர் ஒரு நல்ல கட்டிடத்தைக் கட்டி இராணுவத்திற்கு கொடுத்திருக்கிறார்கள்.” என்கிற “எனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப்பிழை” கருத்து,அடுத்த சந்தர்ப்பவாதம்.
அரசாங்க ஆதரவுடன் விசயம் செய்த ‘நோயில்’,நாலு பேருக்கு ஒர் இராணுவம் இருக்கிற பூமியில் “கேட்டஒரு கேள்வி இராணுவத்தால் ஏதாவது துன்பங்களைச்சந்திக்கிறீர்களா என்பதுதான். அவர்கள் எல்லோரும் அழுத்தம் திருத்தமாக இல்லையென்றார்கள்.” என்பது இன்னொரு சந்தர்ப்பவாதம்.
தன் வருமானத்தை பலமடங்காக மாற்ற ‘வானவில்'(charitable organization is good for tax evasion and money laundering.) கட்டி,இலங்கைப் பணத்தில் பத்தாயிரம் ரூபாய் ஐந்து குடும்பத்திற்கு படியளப்பதை ,அதை விடப் பன்மடங்கு பணம் செலவழித்து படம் காட்டுவது,எல்லாத்தையும் விட மோசமான சந்தர்ப்பவாதம்.
மனித “கோள் பிடித்தலிலும்”,சீழ் பிடித்தலிலும்” வாழுகின்ற லாயர்கள்,டாக்டர்கள் தமிழ்ச் சமுகத்தின் தலைச்சன்களாக இருக்கும் வரை,தமிழினத்திற்கு விடிவு, வெகு தொலைவில்தான்.
நெடுங்கேணி, வன்னிப் பகுதியில் இராணுவத்தினரால் தென்னிலங்கையிலிருந்து கலைஞர்கள் அழைத்துவரப்பட்டு நடத்தப்படும் நிகழ்ச்சி கலாச்சாரத்தைச் சீரழிவுபடுத்துகின்றது என மக்கள் விசனம் தெவித்துள்ளனர்.
கனகராயன்குளப் பகுதியிலும் அதற்கு பின்னர் ஓமந்தை வெளியிலும் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
ஆனால் அவ்விடத்தில் அதிகளவு பியர் கடைகளே காணப்பட்டன. மதுபானக் கடைகள் அமைப்பதாயின் உரியவர்களிடம் அங்கீகாரம் பெறவேண்டும். ஆனால் பொதுமக்கள் பார்க்கும் ஒரு பொது நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தி அதில் இவ்வாறான கடைகளை அமைத்து இளைஞர்கள் அனைவரையும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக வைப்பது எந்த வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கனகராஜன்குளப்பகுதியில் 561 ஆம் படைப்பிவின் எல்லைக்குள் நடாத்தப்பட்ட இவ் இகநிகழ்ச்சியில் வன்னி மாவட்ட கட்டளைத்தளபதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் அப்பகுதி இராணுவத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கிடையே போட்டி நடாத்தப்பட்டு வெற்றியீட்டிய நெடுங்கேணி மகாவித்தியாலயம், சின்னடம்பன் பாரதி வித்தியாலயம், கனகராஜன்குளம் மகா வித்தியாலயம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்கு பசில்கள் வழங்கும் நிகழ்வும் அன்றைய தினம் ஏற்பாடு செயப்பட்டிருந்தது.
பரிசில்வழங்கும் நிகழ்வு நிறைவு பெற்றதும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முதலில் “ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா…´ என்ற அன்பு மிகுந்த பாடலோடு ஆரம்பித்த இந் நிகழ்வை பார்வையிட்ட போது மேடைக்கு கீழ் இருந்த இளைஞர்கள் ஆடத்தொடங்கினர். அதன் பின்னர் சிங்கள , தமிழ் மொழி என மாறி மாறி பாடல்கள் ஒலித்தன.
மேடையில் ஒரு பாடல் “வாடா மாப்பிள வாழைப்பழத் தோப்பில….´ எனும் பாடல் ஆரம்பித்த போது அங்கு அரைகுறை உடுப்புக்களுடன் மேடையில் 6 யுவதிகள் நடனம் புரிந்தனர். இதனை அந்த ஏற்பாட்டாளர்களே ஒழுங்குபடுத்தியுள்ளனர்.
பொது இடத்தில் பியர் விற்கும் கடைகளை அமைப்பதும் அரைகுறை ஆடைகளுடன் ஆடுவதும் எந்தவகையில் நியாயம் என மக்கள் விசனம் தெவித்துள்ளனர்.
எனவே பொறுப்பானவர்கள் இதனைக் கருத்திற் கொண்டு வன்னி மக்களின் குறிப்பாக இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை பாதிப்படைய ஒருபோதும் துணைபுய வேண்டாம் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந்து தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க”
எது எவ்வாறு இருப்பினும் விடுதலைப் பயணம் கடிக்க தொடரும் ……………….. இதை எவராலும் தடுத்து விடவோ, மழுங்ககடிக்க முடியா து !