அவுஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சியில் எதிர்வரும் திங்கட்கிழமை ‘சிறிலங்காவின் கொலைக்களம்’ பிரிட்டன் சனல் 4 தொலைக்காட்சியில் கடந்த மாதம் ஒளிபரப்பாகிய காணொளி காண்பிக்கப்படவுள்ளதாக அத்தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை 04 – 07 – 2011 அன்று இரவு 8.30 மணிக்கு ஏபிசி1(ABC1) இன் “Four Corners” என்ற நிகழ்ச்சியிலேயே இக்காணொளி காண்பிக்கப்படவுள்ளது. இதனை மீண்டும் செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கும் தொடர்ந்தும் ஏபிசி24(ABC24) இல் சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கும் மீள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியை ஏபிசி தொலைக்காட்சியின் கெரி “ஓ“ பிரையன் தொகுத்து வழங்குகின்றார்.
நடந்துமுடிந்த போரில் எதுவித மக்களின் உயிரிழப்புக்களும் இடம்பெறவில்லை என சிறீலங்கா அரசு இப்போதும் தெரிவித்துவரும் நிலையில் இக்காணொளியை பார்ப்பதன் மூலம் நீங்களே அதுபற்றிய முடிவினை எடுங்கள் என அத்தொலைக்காட்சி வெளியட்ட குறிப்பு தெரிவிக்கின்றது.
அந்தோ பரிதாபம் இராசபக்சேவே நாண்டுகிட்டு சாகப்போறான்