ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் உருவக்கி அதனை முன்வைத்து ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தும் நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. பிரித்தானியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி ஸர்தாரி மற்றும் ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாய் ஆகியோருடன் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் பேச்சுவார்த்தை நடத்தினார். மக்கள் அழிவிற்கு காரணமான மூன்று முக்கிய தலைவர்களின் சந்திப்பாக இது அமைந்தது. ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையிலான எல்லையில் அமைதியை ஏற்படுத்த முயலுவது, ஆப்கானில் இருந்து அடுத்த வருடம் சர்வதேச படைகள் தமது மோதல் நடவடிக்கைகளை முடித்துக்கொண்டதன் பின்னர் தாலிபான்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சிக்கல்கள் குறித்து விவாதித்தனர். நேட்ட்டோ நாடுகளின் தசாப்தம் கடந்த ஆக்கிரமிப்பு யுத்ததிலேயே தலிபான்கள் அழிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிரியா போன்ற நாடுகளில் நேட்டோ நாடுகளே இஸ்லாமிய தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிடுகின்றன.









Christians abd Catholics have a permanent interest in the State of Israel. Like wise they will not say in public that the Third World War is against the Muslims. Albert Einstein can Rest in Peace. He said that he cannot predict the outcome of the Third World War but the Fourth One will only be fought with sticks and stones. The 9/11 in 2001 in USA also laid the foundation stone to end the war in Sri Lanka – Shri Lanka by May 18, 2009..
மக்கள் வாழ்வுநலன்களைப் பிழிந்தெடுத்து அந்தச் சாற்றை உறுஞ்சி வாழும் இன்றைய கேடுகெட்ட கொழுத்த அரசியல் பிரமுகர்களில் இந்த முக்கிய தலைவர்களும் அடங்குவர். ஆனாலும் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உருவக்கியவர்கள் இவர்களே எனக் கூறுவது சற்று மிகையானது. பெண்களின் மூக்கறுப்பது, காதறுப்பது வேறு எதையோ எல்லாம் அறுத்துக் கொண்டாடுவதுதான் இஸ்லாமிய அடிப்படைவாதம். குழந்தைகளை நரபலிகொடுக்கும் இந்துத்துவ வாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல.
தாலிபான்கள் என்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளை இவா்களும், குறிப்பாக அமெரிக்காவும் சோ்ந்தே உருவாக்கினார்கள்.காரணம் சோவியத் யூனியனை அடக்குவதற்கு,தங்கள் நலன்களுக்காக பேயையோ சாத்தானையோ நண்பராக்கிக்கொள்வதில் அவா்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் நிலமை இவா்கள் எண்ணியது போல் அல்லாமல் பேய்கள் தாங்கள்தான் நாட்டை ஆளவேண்டும் என்றபோதுதான் வில்லங்கமே ஆரம்பமானது இப்போது வேறுவளியின்றி பேய்களிடமே பணிந்து போக முடிவெடுத்துள்ளார்கள் இதன் அா்த்தம் வெகுவிரைவில் ஆப்கானிஸ்தானில் கழுத்தறுப்பும் கைவெட்டலும் ஆரம்பமாகப்போகின்றது.
ஈழவிடுதலைக்காகப் போராடிய தமிழர்கள் பேயோ, சாத்தானோ அல்ல என்பதைச் சிங்களமும் அறியும். ஈழப்போராளிகளை எந்த நலன்களுக்காக இந்தியா உருவாக்கி அழித்து இன்று கழுத்தறுப்புக்கும் கைவெட்டலுக்கும் துணைபோகிறது?.