குருதிக் கறைபடிந்த எனது தேசத்தின் தெருக்களின் இன்னும் நடைப்பிணமாய் அலைந்து கொண்டிருக்கிறேன். அழிக்கப்பட்ட மக்கள், புதைக்கப்பட்ட வரலாறு, கொன்று போடப்பட்ட போராளிகள், சிதைக்கப்பட்ட போராட்டம் என்பன மீண்டும் மீண்டும் எனது வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் பாதிக்கின்றன. நியாயமான போராட்டத்திற்கு அப்பாவியான மக்கள் தார்மீக ஆதரவை வழங்கினர். இன்றும் அந்த ஆதரவுத்தளம் அப்படியே காணப்படுகின்றது.
ஒடுக்கு முறை கோலோச்சும் வரை போராட்டத்திற்கான தேவையும் போராட்டமும் வாழும். ஆனால், தவறுகள் மீண்டும் மீண்டும் நியாயப்ப்படுத்தப்படுகின்றன. கடந்து போனவற்றிலிருந்து கற்றுக்கொள்ளத் தயாரற்ற கூட்டம் மக்களின் உணர்வுகளிலிருந்து தமது நலன்களைக் கறந்து கொள்கிறார்கள். போராட்டம் வெற்றி கொள்ளப்பட கூடாது என்பதில் அதிகாரவர்கங்கள் தமது மொழி, பிரதேச, தேசிய இன வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்துள்ளன. வட,கிழக்கில் எனது ஊரோடி வாழ்வு தற்போதும் தொடர்கிறது. தற்போது நான் தனியாளாக வெறுமையுடன் அலைந்து திரிகிறேன்.
கூட இருந்தவர்கள் கொல்லப்பட்டும் கொல்லப்படுவதிலிருந்து தப்பியோடியும் விட்டார்கள். 1986 ஏப்ல் 29 ஆந் திகதி, யாழ்ப்பாணத்தில் நிற்கிறேன். துப்பாக்கி வேட்டுக்களுடன் டெலோ மீது தாக்குதல் நடத்தப்படும் செய்திகளும் வருகின்றன. இடதுசாரி அன்பர்கள் “மணியம்” கடைக்கு முன்னால் ஒன்று கூடி என்ன செய்வது என்று அறியாது நிற்கிறார்கள். தொடர்ந்து அழிவுகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. மக்கள் புலிகளுக்கு ஆதரவு வழங்கி வரும் தகவல்களும் கிடைக்கின்றன. டெலோ இயக்கம் புரிந்த அடவாடித்தனங்கள் அவர்களுக்காதரவான ஒரு போக்கை உருவாக்க முடியாமல் செய்து விட்டது.
இதற்கு முன்னதாகத்தான் டெலோ உட்கட்சிப்படுகொலை-அதனுடன் தொடர்பான மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் நிகழ்ந்திருந்தன. அதில் சம்பந்தப்பட்டு டெலோவின் கோபத்திற்கு இலக்காகியிருந்தோம். நண்பருர் குகமூர்த்தி (புலி ஆதவராளர் என அறியப்பட்டவர்-கொழும்பில் கடத்தப்பட்டவர்), வா நிலைமைகளைப் பார்ப்போம் எனக்கூற, சண்டை நடந்த பகுதிகளுக்குள் நுழைகிறோம்.
முக்கியமான குடும்பங்கள் சிலரைச் சந்திக்கிறோம். ஆனால் டேலோ உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் தெரியவரவில்லை. சிலர் தப்பியோடிப் பாதுகாப்பாக இருப்பதாக தெரிய வந்தது. கிறிஸ்தவ மதகுருமார்களிடம் சிலர் அடைக்கலம் புகுந்து தப்பியதாக தெரியவந்தது. பின்னர் சிறீ கொல்லப்பட்டார். பல போரளிகள் அடைக்கப்பட்டிருந்தார்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் புலிகளிடம் பேசி தங்கள் பிள்ளைகளை காப்பாற்றிக் கொண்டார்கள். திருகோணமலை-மட்டக்களப்பு போராளிகள் பலர் சிறையில் (நல்லூரில்) அடைக்கப்பட்டிருந்தார்கள்.
உறவுகள் யாழ்-புலிகளுடன் தொடர்புகளற்ற நிலையால் அவர்களை மீட்க முடியமல் போய்விட்டது. பின்னர் ஒரு நாளில் அடைக்கப்பட்டிருந்த அனைவரையும் கொன்று புதைத்தாக செய்தி வந்தது! பின்னர் ஈ.பி.ஈர.எல்.எப் உம், புளொட்டும், ஏனைய இயக்கங்களும் ரி.என.ஏ. யும் (கடத்தி சேர்க்கப்பட்டவர்கள்) எனவும் என எத்தனை பேர் அநியாயமாக் கொல்லப்பட்டு நமது பூமியில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் இப்படி மனிதப் புதைகுழிகள் நிரம்பிக் காணப்படுகிற போது, இந்த மண் குறித்து எனக்கு அவலமும் சோகமும் தான் மிஞ்சி நிற்கிறது.
முன்வைக்கும் ஒவ்வொரு கால் அடியின் கீழும் மனதிர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்! அரச படைகள்-புலிகள்- ஏனைய இயக்கங்கள்-உட்கட்சி படுகொலைகள் என …..மனிதர்களின் புதைகுளிகளால் நிரம்பியிருக்கிறது நம் பூமி! எல்லாவற்றிற்கும் மேலாக குகுமூர்த்தி, வாசுதேவன், யோகன் போன்றவர்கள் நம் மத்தியில் வாழ்ந்தார்கள் என்பது குறித்து பெருமையும் ஏற்படுகிறது.
புலிகளில் சிலர் மனிதாபிமானம் மிக்கவர்களாக “பெரும் மனிதர்களாக” நடந்து கொண்டிருந்தது பற்றியும் அறிய முடிகிறது. ஆனால் அவர்கள் ஒதுக்கப்பட்டு-ஒதுங்கி அழிந்து போனார்கள். புலிகள் புரிந்த படுகொலைகள் சித்திரவதைகள் பற்றி உலகம் அறியாதிருப்பதே நல்லது. வன்னியில் தடுப்பிலிருந்து வந்தவரிடம் புலிகளால் கைது செய்யப்பட்ட தில்லை-தர்மு-செல்வி பற்றிக் கேட்டேன்.
அங்கே கைதும்-கொலையும்-விடுவிப்பும் சர்வசாதரணமானது என்ற சாதரணமாகக் கூறிச்சென்றார். படுகொலைகள் குறித்து இவ்வாறு எமது சமூகம் சிந்திப்பதற்கு காரணமென்ன? ஏன் படுகொலைக்கெதிராக ஏனைய இணக்கங்கள் ஒன்றிணைய முடியாமல் போனது. ஒரு முற்போக்கு அணி ஆகக்குறைந்தது அறிக்கை விடும் அரசியல் தகைமையுடனாவது வளராமல் விட்டதற்கு என்ன காரணம்? கொலைகள் பற்றி நாம் பேசியாக வேண்டும். அது கொலை செய்யப்பட்டவர்களுக்கும் – அதனால் துயருற்று வாழும் அவர்கள் குடும்பத்தினருக்கும் பல்லாண்டுகள் கடந்து நாம் செய்கிற கடன் மட்டமுல்ல, எதிர்காலம் ஒரு புதிய பாதையில் செல்வதற்கான பாதையை அமைப்பதற்காகவும். நிகழ்கிற கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும். நிழல் உலகக் குழுக்கள் போன்று கொலை செய்துகொண்டவர்கள் தம்மை விடுதலை இயக்கங்கள் என்று பெயர் சூட்டிக்கொண்டதை திரும்பிப்பார்க்க வேண்டும்.
ஒடுக்குமுறை தொடரும் நிலையில் விடுதலை இயக்கங்களில் மறு உருவாக்கம் தவிர்க்க முடியாதது; ஆயினும் முன்னைய விடுதலை இயக்கங்களின் மறு பதிப்பு நிராகரிக்கப்பட வேண்டும்.
முன்னாள் பெண் போராளி ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவான் ஈவினை கிழக்கைச் சேர்ந்த ரி.லாவண்யா (21 வயது) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரின் உடலில் சில சந்தேகத்துக்கிடமான தடயங்கள் காணப்படுவதால்இ யாழ் போதனா வைத்தியசாலைக்கு இவர் உடல் அனுப்பப்பட்டு பிரேதப் பரிசோதனை நடைபெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
அண்மைக் காலமாக யாழ். மாவட்டத்தில் தற்கொலைகளும்இ மற்றும் தற்கொலை போன்று மர்மமான முறையில் சடலங்களும் மீட்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது யாழ் குடாநாட்டு மக்களை மேலும் அச்சத்துக்குள் தள்ளியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இ
னியும் சாக விடுவதா?
முன்னாள் புலிகளின் தற்போதைய வாழ்நிலை குறித்து துயரமான செய்திகளே கிடைக்கின்றன. பெண் புலிகள் சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தப்பட்டு வாழ்வதாகவும் கூறப்படுகிறது. அங்கவீனமானவர்கள் கவனிப்பாரற்று இருக்கிறார்கள். இதற்கு இவர்கள் கடந்தத இரண்டு வருடங்களுக்கு முன்னர் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தலைவர்களாக இருந்தவர்கள் என்பதுதான் துயரத்திற்குரியது. அப்போது இவர்களைத் தலைவர்களாக் கொண்டாடிய கூட்டம் தற்போது வேறு முகாமில் இணைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுவும் அவலமானதே. இதற்கப்பால் பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள்-தொலைது}ரக்கிரமங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இராணுவ நிர்வாகத்தின் கீழ் வாழவைக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களை வெளிப்படுத்தாத பெண்கள் குழுவொன்று நிலைமைகள் குறித்து மூன்று அறிக்கைகளை பத்திரிகையில் வெளியிட்டுமிருந்தன.சில மனித நேயமிக்கவர்கள் – சிங்கள இனத்தைச் சேந்தோரும் நிலைமை குறித்து ஆழ்ந்த துயருடன் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
விஜய்,
நீங்கள் இலங்கையிலிருந்து கருத்தெழுதுவது போல தெரிகிறது. புலம் பெயர் தமிழர்கள் அவர்களது அரசியல் என்பன குறித்த உங்கள் பார்வை எப்படி இருக்கிறது. இங்குள்ள அரச ஆதரவாளர்கள், புலி ஆதரவாளர்கள் குறித்து உங்கள் போன்றவர்களின் கருத்து என்ன? இங்கு அரசியல் செய்கின்றவர்களால் எதாவது மாற்றம் ஏற்பட முடியுமா.?
அழிக்கப்பட்ட மக்களின் கல்லலைகளுக்கு மேல் மகிந்த அரசு ஊர்களின் பெயர்களைக் கூட தமிழில் விட்டு வைக்கத் தயாரில்லை. மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைப் பயிற்சியாம். தமிழ் பகுதிகள் எங்கும் புத்தர் சிலைகள். தமிழ மக்களில் பலர் இந்துக் கடவுளை வணங்கினாலும் தேவாலயங்களுக்கு சென்றும் வழிபாடு செய்பவர்கள். இந்த அரசாங்கம் சும்மா விட்டிருந்தால் புத்தரையும் போற்றி வணங்கியிருப்பார்கள். இப்போது புத்தரும் பலவந்தமாக திணிக்கப்படுவதால் அவர் மீது அடங்காத வெறுப்பை மனதுள் புதைத்துள்ளார்கள். மக்களை மகிந்தாவும் அவரின் பரிவாரங்களும் சும்மா இருக்க விடப் போவதில்லை. மகிந்தாவுக்கு ஒரு பிரபாகரன் அவசரமாக தேவை.
கடந்த நூற்றாண்டில் கொடிய யுத்தங்களை புரிந்த சமூகங்கள் அந்தக்கொடுமைகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் மூலம் தம்மை நோ்வளிப்படுத்தி சிறப்பான வாழ்வு முறைகளை உருவாக்கி முன்னோக்கிச்செல்கின்றன,30 வருடங்களில் நாம் யாவையும் இளந்தும் நாம் கற்றுக்கொண்டதென்ன?எதுவுமில்லை நாம் பக்குவப்படுவதற்கும் பூரணம் ஆவதற்கும் இன்னும் எத்தனை யுத்தங்கள் அளிவுகள் தேவை? ஏன் நாம் இப்படி இருக்கின்றோம்? நேற்றுவரை அவா்களை நேசித்தவா்கள் உண்மையாகவே நேசித்தார்களா அல்லது வெறும் வேசம் போட்டார்களா? இப்படிப்பட்ட கொடிய மனநிலையில் நமது இனம் இருப்பதானால் நமக்கு சுதந்திரம்,உரிமைப்போராட்டம் என்பதெல்லாம் எதற்காக என்று எண்ணத்தோன்றுகிறது.
ஒடுக்கு முறை எப்போதும் இல்லாதவகையில் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகிறது,விளைவு?போராட்டம் தவிர்க்கமுடியாததே ஆனால் புதிய திசையில் புதியவா்கள் வளிநடத்த மிகவும் திடமான அரசியல் அடித்தளத்துடன் கூடிய இராணுவ அலகு கொண்டதாக இருந்தாலே சாத்தியம். அதைவிட்டு பழய எலிகள் புலிகள் வால்களில் தொங்குவதானால் அப்படி ஒன்று தேவையற்றது.
முன்னைநாள் “துரோகிகள் ” இன்றும் ஆய்வாளாரகலாகவும் ,கொள்கை வகுப்பார்கலாகவும் உலவுகின்ற பொது மீண்டும் புலிகளின் தவறுகளே நிதர்சனமாகியுள்ள சூழ்நிலை தொடர்கிற போது மக்களால் எப்படி சிந்திக்க முடியும்?
பிரபாகரனை காட்டி கொடுத்த குழுவினர் ( நாடு கடந்த தமிழ் ஈழ குழுவினர்- உருத்திரகுமார் ,கே.பி, ) ஒரு புறம் , புலத்தில் தங்களை முற்போக்காளர்களாக காட்டிக் கொள்ளும் கி.பி. அரவிந்தன் , இதய சந்திரன் வகையறாக்கள் ,மற்றும் புலத்து புலி விசுவாசிகள் இருக்கும் வரை இந்த இழிந்த நிலை தான் தொடரும் , புலி அரசியலே முன்னெடுக்கப்படும் என்பதை வருத்தமுடன் தெரிவித்து கொள்கிறேன்.
திருமலை
24 / 05 / 11
புலி அரசியல் முன்னெடுக்கபடுவதில் என்ன தவறு?
சிங்களரைப்போல புத்தரை எவரும் கேவலப்படுத்தியிருக்கமுடியாது?திருப்பதி கோயிலுக்குப் போய் சாமிகும்பிடுபவனை புத்தமதத்தவன் என ஏற்கிறது சிங்கள புத்தம்
திருப்பதிக்கு போய் பெருமாள சேவிப்பது வெள்ளயோடு பார்ட்டி வைக்கும் தமிழர் செய்யும் கூத்தைப் போன்ற வேசம்,நடிப்பு,ஏமாற்றூ வித்தை.உண்மை வேறூ விதமானது இந்த நடிப்பு புலிகளூக்கு கை வராததே தமிழரது இன்றய நில்மைக்கு காரண்ம்.