பதுளை கொஸ்லந்தை நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினாலும்,பல்கலைக்கழக சமூகத்தினாலும் சேகரிக்கப்பட்ட உலர் உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்,மாணவர்கள் மற்றும்ஆசிரிய சங்கத்தினர்,விரிவுரையாளர்கள் சகிதம் நேற்றய தினம்(செவ்வாய் கிழமை) நேரடியாக சென்று அவர்களிடம் கையளித்ததுடன் அவர்களுடன் கலந்துரையாடினோம். இவ் மனிதாபிமான செயற்பாட்டுக்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைப்புக்கள் மற்றும் யாழ்.வர்த்தக சமூகத்தினர் மற்றும் நலன்விரும்பிகள்,பல்கலைக்கழக சமூகத்தினர், பொருட்களை ஆர்வமாக சேகரித்த மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகள், என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியதைச் சர்ந்தவர்கள் தெரிவித்தனர். இலங்கையில் காலடி வைத்த நாளிலிருந்து இந்த நூற்றாண்டின் அவமானகரமான அடிமைகளாக நடத்தப்படும் மலையகத் தமிழர்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணர்வகளின் உதவி என்பது அரசியல் சமூகப் பெறுமானங்களைக் கொண்டது.
இலங்கை அரசால் திட்டமிடப்பட்டுப் புறக்கணிக்கப்ப்படுவதால் நிகழும் இவ்வாறான கோரச்சம்பவங்கள் இனப்படுகொலைக்கு ஒப்பானவையே. திட்டமிட்டு அழிக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களதும், ஒடுக்கப்பட்ட சிங்கள உழைக்கும் மக்களதும் ஒன்றிணைந்த போராட்டமே சுய நிர்ணைய உரிமைக்கான பாதையையின் தடைகளை அகற்றும்.