நாம் தமிழர் கல்யாணசுந்தரம் திராவிட இயக்க வெறுப்பை ஐய்ரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழர்கள் இடையே பரப்பி வந்தவர்.இப்போது பெயரில் மட்டும் திராவிடம் என்ற பெயரைத் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்திருக்கிறார்.
இது ஒரு புறமிருக்க இன்னொரு பக்கம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் மற்றும் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது . இது தொடர்பான விவாதம் ஒன்றில் அதிமுக ஜவஹர் அலியை நோக்கி “நீங்கள் வாக்கிற்கு பணம் கொடுக்கவில்லை என்று அல்லாவின் மீது சத்தியம் செய்யுங்கள்” என கல்யாண சுந்தரம் ஜவஹர் அலியை நோக்கிக் கேட்கிறார். உச்சபட்சமாக ஒரு நம்பிக்கையை வைத்து ஹவஹர் அலியை மடக்கி காலி செய்த அதே கல்யாணசுந்தரம் இன்று ஜவஹர் அலி சார்ந்த கட்சியில் இணைந்திருக்கிறார்.
பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக இதுவரை இல்லாத அளவுக்கு ஊழல் புகாரில் சிக்கியிருக்கிறது. கொரோனா தொற்றில் கூட ஊழல். எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் பல்லாயிரம் கோடி அளவுக்கு ஊழல் புரிந்திருக்கிறார்கள். இப்போது நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 200 கோடி ரூபாயை சப்ளை செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
சமீபத்தில் தஞ்சையைச் சேர்ந்த அமைச்சர் துரைக்கண்ணு இறந்தார். அப்படி அவரிடம் நான்கு தொகுதிகள் செலவுக்கு 800 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரோ அதை பல கட்சிகளிலும் இருக்கும் தன் சாதிகளைச் சேர்ந்தவர்களிடம் கொடுத்து வைத்ததாக கூறப்படுகிறது. அவர் மறைவுக்குப் பின்னர் அந்த பணத்தை எடப்பாடி பழனிசாமி திருப்பிக் கேட்டதாக கூறப்படுகிறது. பணத்தை கொடுத்து விட்டு அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு கூற துரைக்கண்ணுவின் மகன் 200 கோடியை முதல் கட்டமாகக் கொடுத்து அவரது உடலை பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது. அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எவரும் தஞ்சைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மீதி பணத்தை மீட்க போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட தனிப்படை அமைத்து மூட்டை மூட்டையாக பணம் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சரின் பண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக செய்திகள் வெளியானது. இந்த பண மீட்பு நடவடிக்கை தொடர்பாக 6 பேர் வரை இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஜவஹர் அலியை சத்தியம் செய்யச் சொன்ன கல்யாண சுந்தரம் எடப்பாடி பழனிசாமியை சத்தியம் செய்யச் சொல்வரா?