இந்தியாவின் மிகப்பெரிய ஊழலான 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக பதவியை ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் ராசாவின் சகோதரி, நண்பர் வீடுகளிலும், தமிழ் மையம் அமைப்பாளர் ஜெகத் கஸ்பர் அலுவலகத்திலும் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மையிலாப்பூரில் உள்ள, கருணாநிதி குடும்பத்திற்கு நெருக்கமான, ஜெகத் கஸ்பர் அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று காலை 10 மணி முதல் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
மேலும் பெரம்பலூரில் உள்ள ராசாவின் நண்பர் சுப்புடு என்ற சுப்பிரமணியன் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று திருச்சியில் உள்ள ராசாவின் சகோதரி விஜயாம்மாள் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் 5 பேர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பெரம்பலூரில் உள்ள ராசாவின் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்பத இந்திக்காரன் தெரிந்து வைத்திருக்கிறான்.
நன்றாகச்சொன்னீர்கள் தமிழ் தமிழனுக்குமடிக்கத் தெரியும் பொறுத்து பாரும் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாதைஅட்ம் தேடி அலைக்றார் அல்லது லைவது போல்னடிக்கிறார் கர்சத் மேத்தா ஊழ்லையே ஒன்றும் ச்ய்ய முடியவில்லை இதெல்லல் ச்ச்சும்ம்மா
எத்தனை ஈழத்தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்தவர். இன்றும் அவஸ்திரேலிய தமிழ் வானொலி, கனடா வானொலி, ரிஆர்ரி தமிழ்ஒலி என்று வாய்க்கு வந்ததையெல்லாம் ஈழத்தமிழர்களின் காவலன் என்று உளறிக் கொண்டிருக்கின்றார். தனக்கு உதவியவர்களுக்கே நன்றிமறந்த வகையில் நடந்து கொண்டவர். பலருக்கு ஆப்பு வைப்பதில் வெற்றி கண்டவர். அவர் விதைத்த வினை அவரைச் சூழ்ந்து கொண்டதில் வியப்பில்லை. குருத்துவ மேலங்கி; போர்த்தி பாவத்தின் விளைநிலமாய் வாழ்ந்தவர். உலகத்தமிழர் பேரவைத் தலைவர் பாதிரியார் இம்மானுவேலின் செல்லப்பிள்ளை இவர். இவரின் செயல்களுக்கு காலம் விரைந்து பதில் சொல்லும்
ஈழத்தமிழருக்கு ஆரம்பத்தில் அவர் பல கஸ்டங்களுக்குள் உதவிசெய்துள்ளார் என்பதை மறக்கவேண்டாம்…எம்மில் பலருடைய சரித்திரமும் இப்படித்தான் உள்ளது.. வேணுமானால் முன்ன்னைய கஸ்பர் பின்னைய கஸ்பர் என் பிரித்துப் பார்கலாம்…
உதவி என்ற போர்வையில் உதவி புரியச்சென்ற உதவி நிறுவனங்கள் (என்ஜிஓ கள்) உளவு வேலை பார்த்தமாதிரித்தான் கசுப்பாரின் நிலையும். நீங்களே வேணுமாயின் மு கசுப்பார் – பி கசுப்பார் என பிரித்துஎழுதலாமே?