அல்ஜசீரா தொலைக்காசியின் ஊடகவியலாளர் தினுக் கொலம்பேயை கைது செய்யுமாறு இலங்கை அரச ஊடகவியலாளர் ஒருவர் பகிரங்கமாகக் கோரிக்கைவிடுத்துள்ளார். லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஊடகவியலளாரான ராஜ்பால் அபேநாயக்க இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். பிழையான செய்தி அறிக்கையிடல்களில் கொலம்பே ஈடுபட்டுள்ளதாகவும் அவரை கைது செய்து தண்டிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். டுவிட்டர் ஊடாக இந்தக் குற்றச்சாட்டை ராஜ்பால் அபேயநாயக்க தெரிவித்துள்ளார்.
அலுத்கமவில் முஸ்லிம் தமிழர்களுக்கு எதிரான அரச பாசிச அடியாட்படைகளின் வன்முறைகளை வெளியிடவும், செய்தி சேகரிக்கவும் கோத்தாபயவின் படைகள் தடை விதித்திருந்ததன. இந்த ஒடுக்குமுறைகளின் ஊடாக செய்தி சேகரித்து பெரும்பாலான அலுத்கம அழிவுகளை தினுக் கொலம்பே வெளியிட்டார்.
தமிழ் இனவாத ஊடகங்களின் அதே மாதிரியைப் பின்பற்றும் சிங்கள ஊடகங்கள் சில இஸ்லாமியத் தொலைக்காட்சிக்கு சிங்கள பௌத்தன் தகவல் வழங்கினான் என இனவெறிக் கருத்துக்களைப் பரப்ப ஆரம்பித்துள்ளன.
தமது நிறுவனத்தின் ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அல் ஜசீரா அறிவித்துள்ளது
Four Al Jazeera journalists are in trouble in Egypt. I always stood with the journalists. I also support Al Jazeera out of Doha, Qatar. Next to CNN, BBC and CCTV.. Sri Lnaka will catch up with Singapore.