அலுத்கம உடப்ட முஸ்லிம்கள் வாழும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களின் பின்புலத்தில் கோத்தாபய ராஜபக்சவின் நேரடி வழி நடத்தலில் இயங்கும் புலனாய்வுப் படைப்பிரிவினர் செயற்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்கள் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நேரம் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த நபர்கள் பொதுபல சேனாவின் பௌத்த குண்டர்களுடன் இணைந்து தாக்குதல்களை ஆரம்பித்தனர் எனத் தெரியவருகிறது. இதனால் சாட்சிகளின் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இத் தகவல்கள் வெளியாமை தொடர்பாக புலனாய்வுத் துறையில் செயற்படும் முஸ்லீம்கள் சிலரை மேலதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்துவருவதாகத் தெரியவருகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய முஸ்லிம் தலைவரகளுக்கு தாக்குதல் தொடர்பான முழுமையான தகவல்கள் தெரிந்துள்ள போதிலும் இலங்கை அரசுடனான தமது உறவைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அவற்றை வெளியிட மறுத்து வருகின்றனர்.
வடகிழக்குத் தமிழர்களும், சிங்களத் தலைவர்களும் மட்டுமே ஆங்காங்கு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இலங்கை அரசுடன் முரண்பட்டுக்கொள்ளாத இஸ்லாமிய அமைப்புக்கள் சில புலம்பெயர் நாடுகளில் போராட்டங்களை முன்னெடுத்தன. அவர்களில் போராட்டங்களில் இலங்கை இந்திய அரச ஆதரவுத் தமிழர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
முஸ்லிம்கள் மீதான இத் தாக்குதல்கள் தொடரும் அபாயம் காணப்படுவதால் உறுதியான அரசியலைக்கொண்ட போராட்ட அமைப்பு மக்கள் மத்தியிலிருந்து தோன்றும் வரை சந்தர்ப்பவாதிகள் தலைவர்கள் என தம்மைக் காட்டிக்கொள்வது தவிர்க்க முடியாது.