அலுத்கம இல் இலங்கை அரச சார்பு சிங்கள பௌத்த பேரினவாதிகள் அப்பாவி முஸ்லீம்கள் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 80 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையை ஆரம்பித்து அழிவுகளை ஏற்படுத்திய பொது பல சேனா என்ற அரச ஆதரவு பௌத்த குழுவைச் சேர்ந்த எவரும் இன்னும் கைதாகவில்லை.
இதே வேளை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அரசுடன் இணைந்திருப்பதற்காக வெட்கப்படுகிறேன் என்கிறார். பதவிக்காக அரசுடன் ஒட்டிக்க்கொள்ளும் இவர் போன்ற கொழும்புசார் வியாபாரிகளின் தலைமைகளே இதுவரை பல அழிவுகளுக்குக் காரணமாயினர்.
படுகாயமடைந்த 80 பேரில் பெரும்பாலானவர்கள் ,முஸ்லீம்களே என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 36 பேர் தர்ஹா நகர் வைத்திய சாலையிலும் ஏனையோர் பேருவளையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லீம்கள் மதம் என்ற அடிப்படையில் அல்லாமல் தேசிய இனம் என்ற அடிப்படையில் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பது இன்றைய தவிர்க்க முடியாத முரண்பாடாகிவிட்டது. இந்த அடிப்படையிலான போராட்டம் குர்திஷ் மக்களால் முன்னெடுக்கப்ப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பேசும் முஸ்லீம் அப்பாவி மக்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புலம்பெயர் தமிழ்த் தேசிய பிழைப்புவாத அமைப்புக்கள், தமிழ்த் தேசிய தாதாக்கள் உட்பட ஏனையோர் எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
வெலிப்பிட்டிய பள்ளிவாசலில் துப்ப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று முஸ்லீம்கள் கொல்லப்பட்டதாக இறுதியாகக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Solidarity என்பது இரு பக்கத்திற்கும் பொதுவானது.
முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்ட போது,
ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வந்த போது,
முஸ்லிம் மக்காள் என்ன செய்தார்கள்?.
நீங்கள் வல்லாரை உண்ண வேண்டும்.
I think agen need to start LTTE then solve all problem.
## புலம்பெயர் தமிழ்த் தேசிய பிழைப்புவாத அமைப்புக்கள், தமிழ்த் தேசிய தாதாக்கள் உட்பட ஏனையோர் எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.##
இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ?
1958 , 77 , 81 , 81 ஆண்டுகளில் சிங்கள அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின்போதும் அதைத்தொடர்ந்த ஆய்தாப்போராட்டத்தின் இறுதி முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வரை முஸ்லிம் மதவாதிகளும் , அரசியல்வதிகளும் எவ்வாறு வாய் மூடி மவுனிகளாக இருந்தார்களோ அதே போல் இன்று தமிழ் தேசிய வாதிகள் மவுனிகளாக இருக்கிறார்கள் .
இன்னும் சொல்லப்போனால் அதனை முஸ்லி அரசியல்வாதிகள் , மதவாதிகளிடம்ருந்துதான் தமிழ் தேசியவாதிகள் கற்றுக் கொண்டார்கள்.
When the Tamils were attaked during the 83 riotes & even cintimuously after that no one spoke against the attacks but other minority community too robbed us.
How about your communist buddies ie Cuba, Noth Korea, China and Russia ? Where are they ??