பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்துக்காக அவரது வீட்டு முன்பு பா.ஜனதா கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஷ்மீர் குறித்து அருந்ததி ராய் தெரிவித்த கருத்துகளுக்காகவும், அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் டெல்லி சாணக்கியபுரியில் உள்ள அவரது வீட்டு முன் இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் நடத்தினர்.
பா.ஜனதா மஹிளா மோர்ச்சாவின் டெல்லி கிளை தலைவர் சிகா ராய் தலைமையில், அதன் தொண்டர்கள் அருந்ததி ராய் வீட்டுக்குச் சென்று, அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அருந்ததிராய் மற்றும் ஹ_ரியத் மாநாட்டுத் தலைவர் சையத் அலி ஷா கிலானி ஆகியேர்களுக்கு எதிராக இந்திய சட்ட அமைச்சகம் ‘தேசத்துக்கு எதிராக அதிருப்தியுடன் இருத்தல்” என்ற பிரிவின் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்ற ஆலோசனையைத் தெரிவத்திருக்கிறது. இந்த ஆலோசனையை இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சட்ட அமைச்சகம் வழங்கியிருக்கிறது.
இந்த ஆலோசனையை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அருந்ததிராய் மற்றும் சையத் அலி ஷா கிலானி ஆகியேர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியதாகவும், ஆயினும் தற்கால நிலைமைகளைக் கருத்தில் கொண்டு வழக்குப் பதிவு செய்வதில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்தள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இந்து பாசிசம் சும்மா இருக்குமா?
அருந்ததி ராய் போன்று, மிரட்டிப் பணிய வைக்க இயலாதோர் இந்தியாவில் இன்னமும் உள்ளனர் என்பது இந்தியா பற்றி நம்பிக்கையூட்டும் விடயம்.
நீங்கள் சொல்வது சரிதான், அருந்ததிராய் போன்ற பலர் உள்ளனர் ஆனால் நாம் தான் கண்ணை கட்டிக்கொண்டு இருக்கிறோம். பத்துவருடமாக உண்ணாவிரதம் இருக்கும் ஒரு பெண் உள்ளார் மணிப்பூரில் http://kumarikantam.blogspot.com/2010/10/10.html
இச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளபடி தற்கால நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தான் அருந்ததிராய் இருட்டடிப்பு செய்யப்படாமல் இருக்கிறார். மேலும் இந்திய ஆளும் வர்க்கமாக உள்ள பார்ப்பனர்களுக்கு இது அடிப்படைப் பிரச்சினை அல்ல. அதனாலும் இந்திய அரசு இதை விட்டு வைத்திருக்கிறது.
பார்ப்பனா;களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால் உயர்நிலைகளில் பார்ப்பனர்களும் பார்ப்பனர்களுக்கு விலைபோகிறவர்களும் மட்டுமே இருக்க வேண்டும் .என்பதே ஆகும். பார்பனர்களில் அறிவுத் திறன் குறைவாக உள்ளவர்களும் கீழ் நிலை வேலைகளைச் செய்யும்படி வற்புறுத்தப்படக் கூடாது என்பதிலும் பார்ப்பனர்களுக்கு விலை போக மறுக்கும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலைக்கு வரக் கூடாது என்பதிலும் இந்திய ஆளும் வர்க்கம் உறுதியாக உள்ளது. அவர்களுடைய அடிப்படைப் பிரச்சினை அது தான். இதற்கு ஊறு ஏற்படாத எதையும் தாங்கிக் கொள்வார்கள். பார்ப்பனர்களுக்கு விலை போக மறுக்கும் திறமையான ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்நிலைக்குச் செல்லும்படியாகவும் பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் கீழ் நிலைப் பணிகளில் வேலை செய்வதில் இருந்து தப்ப விடக் கூடாத விதமாகவும் ஆன செயல் திட்டங்கள் என்றால் தான் அவர்களுடைய உண்மையான கொடூர உருவம் வெளியே வரும். வேறு எதிலும் அவர்களுடைய முழு உருவத்தைப் பார்க்க முடியாது.
ஆனால் நம் விடுதலையும் நல்வாழ்வும் அதில் தான் உள்ளது. இதை வென்றெடுக்காத வரையில் வேறு எதிலும் நாம் வெற்றி பெற முடியாது.
பாசிசம் என்றால் நிலங்கள பிடித்தல் இந்தியாவில் மனங்கள பிடிக்கும் ஆச்சிரமங்களூம் மனிதனைப் புனிதனாக்கும் அழகான வாழ்க்கை முறயும் இருக்கிறது இதை இந்துவாகி உணர்ந்தால் மட்டுமே உணர முடியும்.அருந்ததி ராய் இந்தியாவின் அழகான நட்சத்திரம் அவ்வப்போது என்றீல்லாமல் எப்போதும் புரட்சிக் குரலாய் ஒலிப்பவர் அவரை சிறப்பிடிக்க முடியுமா? இந்தியா தன் முகத்திலேயே எச்சில் துப்புமா?
துப்பிக் கொண்டு இருப்பதைச் சொல்வதால் தானே அருந்ததி ராய் மிரட்டப்படுகிறார்
எந்த பாக் குடிமக்னவது பாக் எதிராவது பெசுவனா??? ந் சென்ட்ரல் கொவ்ட் சுத்த வெச்ட்….நம்ம நாட்டுல தாண் … சுதந்திரம்…இவல தூகில பொடனும்