மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த பல மாதங்களாக வட இந்திய விவசாயிகள் போராடி வருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா, மபி, உபி போன்ற மாநிலங்களில் இப்போராட்டம் திவீரமாக இன்றும் நடந்து வருகிறது.அதே போன்று ஹரியானாவிலும் நடக்கிறது.
அரியானா வில் ஆளும் பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று கர்னல் என்ற பகுதியில் நிகழ்ச்சிக்கு வருகை தர இருந்தார். அவரது வருகைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இந்த போராட்டத்தை பாரதிய கிசான் யூனியன் உட்பட பல விவசாய சங்கங்கள் முன்னெடுத்த நிலையில் விவசாயிகள் மீது ஹரியானா போலீஸ் கொடூரத் தாக்குதலை நடத்தியது. இதில் பல விவசாயிகள் ரத்தக் காயம் அடைந்தனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கொடூரமான இந்த தாக்குதலை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டித்துள்ளார்.