இலங்கையில் தற்போது அரச பயங்கரவாதம், அடக்குமுறைகள் தலைவிரித்தாடுவதாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாற்றியுள்ளார்.
இலங்கையிலிருந்து அனைத்து வகையான பயங்கரவாதங்களும் துடைத்தழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் உரத்த குரலில் பீற்றிக் கொண்டாலும், அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாக அவர் கூறியுள்ளார்.
கட்டுநாயக்கவில் நடைபெற்ற மறைந்த விஜய குமாரதுங்கவின் நினைவு தின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நானும், விஜய குமாரதுங்கவும் அன்று தொடக்கம் ஜே.வி.பி.யினரின் பயங்கரவாதத்தை மட்டுமன்றி அரச பயங்கரவாதத்தையும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளோம் என்றும் சந்திரிகா கூறியுள்ளார்.
இன்றைய நிலையில் இலங்கையின் அரசியல் நிலவரம் பற்றி விஜய குமாரதுங்கா இருந்திருந்தால் பெரிதும் மனம் வருந்தியிருப்பார் என்றும் அந்தளவுக்கு அரச அடக்குமுறையும், அரச பயங்கரவாதமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நானும் என் கணவரும் இந்நாட்டின் நலனுக்காக மேற்கொண்ட பல செயற்திட்டங்கள் இன்று தலைகீழாக புரட்டப்பட்டுள்ளன என்றும் சந்திரிகா குற்றம் சாற்றியுள்ளார்.
இலங்கையில் அரசபயங்கரவாதம் என்பது சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு தமிழினத்திற்காக உருவாக்கப்பட்டு இன்றும் தொடருவதும் அதன் வெளிப்படைத்தன்மையை மழுங்கடிப்பு செய்யும் வகையில் சிங்கள கட்சிகள் தமக்குள் மோதிக் கொள்வதும் தமிழ்மக்களின் உரிமை எனறும் அதற்குள் ஒன்றை சேர்ப்பதும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கான பதிலே அன்றி வேறு எதுகுமே அல்ல. இதனை தமிழினம் எதுவரைக்கும் சரியாக புரிந்து தகுந்த பதில் அளிக்கும் என்பதை விட ; தேவையானவற்றை கையில வைத்துக் கொண்டு தேடித்திரிவது தமிழ்மக்களின் இயல்பாகி விட்டது. இது சந்திரிக்கா அம்மையாருக்கு ஒரு போழுது போக்கு கதை காரணம் அவர் இருந்த காலத்திலும் இதே நிலமை சிங்கள இனத்தின் வாக்கு தமிழித்தை அழிப்பதற்கானது சிங்கள இனத்தின் தடுமாற்றம் யாதெனில் தமது உரிமையின் எதிர்கால சிந்தனையே. ஆனால் தமிழினம் இப்பவும் தயாராகத்தான் இருக்கின்றது சிங்கள இனத்திற்காக அழுவதற்கு.
தமிழ் மக்களின் பிரச்சனை ஒரு அரசியல் பிரச்ச்சனை என்று முதன் முதலில் ஒப்புக்கொண்ட ஒரு ஜனாதிபதி சந்திரிகாவே.ம்றைய ஜனாதிபதிகள் எல்லாம் தமிழ் மக்களின் பிரச்னையை பயங்கரவாத பிரச்சனையாகவே சித்தரித்தார்கள்.
புலிகள் எல்லோரையும் தட்டி கழித்தார்கள்.