அரச பயங்கரவாதம் குறித்து சார்க் மாநாட்டில் பேசப்படவில்லை – ஹக்கீம்

15ஆவது சார்க் மாநாட்டில் கலந் கொண்ட வலய நாடுகளின் தலைவர்கள் தமது நாட்டில் நடைபெற்ற சம்பவங்களை பட்டியலிட்டு காட்டினார்கள். இலங்கையில் இடம்பெறும் தாக்குதல்கள் அரச பயங்கரவாதம் குறித்து ஏன் சார்க் மாநாட்டில் பேசவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றில் இன்று நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சார்க் வலய தலைவர்கள், இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் பேசுவதை வேண்டும் என்றே தவிர்த்து விட்டனர்.

இலங்கை நிலவரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர், சார்க் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவில்லையா? அல்லது அரச பயங்கரவாதம் என்பதனால் மறைத்து விட்டார்களா? அல்லது தெரியாதா? தெரிந்து கொண்டே சாதுரியமாக செயற்பட்டனரா? என்ற சந்தேகம் எமக்குண்டு. பயங்கரவாதம் தொடர்பில் பேசினார்கள். ஆனால், நாட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை பற்றி கூட பேசவில்லை. அதனை தவிர்த்து விட்டார்கள்