நாட்டின் பல பகுதிகளிலும் சுகாதார சேவையைச் சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளக்கூடாது என்று கூறி காவற்துஐறயினரால் மிரட்டப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சமன் ரட்ணபிரிய தெரிவித்துள்ளார். அங்கொட மனநோயாளர் மருத்துவமனையைச் சேர்ந்த சில பணியாளர்கள் மிரிஹான காவற்துறை நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு எச்சரிக்கப்பட்டனர் எனச் சமன் ரட்ண பிரிய தெரிவித்தார். இதேபோன்று அம்பாந்தோட்டைக்; காவற்துறையினரும்; அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்று சுகாதாரப் பணியாளர் ஒருவரிடம் பிரதிப் காவற்துறை மா அதிபரைச் சந்திக்குமாறு உத்தரவிட்டுச் சென்றுள்ளனர். இதேபோன்ற சம்பவங்கள் இரத்தினபுரி, களுபோவில, திருகோணமலை மருத்துவமனைகளிலும் இடம்பெற்றுள்ளன எனக் கூறப்படுகிறது. முல்லேரியா மருத்துவமனையைச் சேர்ந்த எழுதுவினைஞர் ஒருவர் அங்கொட காவற்துறை நிலையத்திற்கு அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளார். வேலைநிறுத்தப் போராட்டத்தைக் குழப்புவதற்கான அரசின் சதிமுயற்சி இது எனவும் பொலிஸாருக்குத் தொழிற்சங்க உறுப்பினர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள உரிமையில்லை என்றும் சமன் ரட்ணபிரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் சந்தித்த அனுபவத்தை போன்ற மற்றும் ஒரு அனுபவத்தை அமைச்சர் மேவின் சில்வா நேற்று மீண்டும் சந்தித்தார். மேவின் சில்வா, தேசிய வைத்தியசாலையின் சமையலறைக்கு சென்று அங்குள்ள ஊழியர்களை இன்று நடைபெறவுள்ள, பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளிக்கக்கூடாது என அவர்கள் அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த ஊழியர்கள் அனைவரும் அமைச்சரை சுற்றிவளைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒருவாறு அவர் சமாளித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமைச்சர் மேவின் சில்வாவின் உதவியாளரான கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர்,சமன் அபேகுணவர்த்தன, நேற்று கொழும்பு கண் வைத்தியசாலைக்கு சென்று அங்கு ஊழியர்களை இன்று பணிப்புறக்கணிப்பில் பங்கேற்க்ககூடாது என அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து அவர் ஊழியர்களின்; பலத்த எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த மச்சான் எல்லா ரவுடிகளையும் சேர்த்துக் கொண்டு நடாத்தும் ரவுடிகளின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வரட்டும்.