அரச ஆதரவுத் துணைக் குழுவான ஈ.பி.டி.பி யின் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஈ.பீ.டீ.பீ அமைப்பின் தென்மராட்சி அமைப்பாளரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளருமான சாள்ஸ் என்றழைக்கப்படும் அலெக்ஸ்சாண்டர் சூசைமுத்து மற்றும் யாழ் மாநகர சபையின் துணை முதல்வரான றேகன் என்றழைக்கப்படும் துரைராஜா இளங்கோ ஆகிய இருவருக்கும் எதிராகவே கொலைமுயற்சி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இதனிடையே குறித்த இருவரும் ஆயதங்கள் சகிதம் அப்பகுதியில் நடமாடி உள்ளமை மற்றும் நீதவானின் வாசஸ்தலத்தில் உட்பிரவேசிக்க முற்பட்டமை தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கடிதங்கள் மூலம் சாவகச்சேரி நீதிமன்றிற்குத் தகவல் அனுப்பி உள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக இன்று நீதிமன்றில் பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க சாவகச்சேரி பொலிசாருக்கு நீதவான் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு ஈபிடிபியினரும் நீதிவான் வசிக்கும் பாண்டியன் தாழ்வு பிரதேசத்தில் கடந்த செவ்வாய்கிழமை முதல் ஆயுதங்களுடன் நடமாடினர் தெரிவிக்கப்ப்பட்டது..
இதே வேளை நீதவான் வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சாவகச்சேரியை சேர்ந்த மாணவனான திருச்செல்வம் கபில்தேவை கடத்திச்சென்று கொலை செய்தமை தொடர்பில் ஏற்கனவே கடந்த மார்ச் 29 ஆம் திகதியன்று ஈபிடிபி உறுப்பினர் ஜீவன் என்பவரை கைது செய்யுமாறும் அவர் நாட்டில் இருந்து தப்பிச்செல்வதை தடுக்குமாறும் நீதிவான் பிரபாகர் உத்தரவிட்டிருந்தார்
கொலை செய்யப்பட்ட மாணவனின் நண்பர் வழங்கிய தகவல்படி ஜீவனே கடத்தலுக்கும் கொலைக்கும் முக்கிய பொறுப்பாளி என்பது தெரியவந்துள்ளது
ஜீவன் கடந்த 8 வருடங்களாக தென்மாராச்சி நுணாவில் ஈபிடிபி முகாமில் இருந்து வருகிறார்
இந்த முகாமுக்கே சார்ல்ஸ் எனப்படும் அலெக்சாண்டர் சூசைமுத்து பொறுப்பாக உள்ளார்
இதேவேளை தமது அமைப்புக்கும் கபில்தேவ் என்ற மாணவனின் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் இன்று தமது உத்தரவை யாழ்ப்பாண பொலிஸ் அத்தியட்சகர் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நீதிச்சேவைகள் ஆணைக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா ஆகியோருக்கு அறிவிக்குமாறும் நீதிவான் பிரபாகர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இப்படியும் ஓர் செய்தி:
யாழ் பொதுசன நூலகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையை தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள வர்த்தகர்கள் நடத்துவற்கு வழங்குமாறு யாழ் மாநகர முதலவர் திருமதி யோகேஸ்வரி பற்குணம் பிரயோகித்து வருகின்ற நிர்ப்பந்தங்கள் பெரும் சர்ச்சைகளை கிளப்பி உள்ளதென இணைய செய்தியொன்று தெரிவிக்கின்றது.
யாழ்ப்பாண பொதுசன நூலகத்தில் அமைந்திருக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட சிற்றுண்டி விடுதி தற்பொழுது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் கேள்வி கோரப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. குறித்த உணவு விடுதியினை இவர் நடத்தி வருகின்ற நிலையில் மாநகர முதலவர் திருமதி யோகேஸ்வரி பற்குணம் தென்னிலங்கையைச் சேர்ந்த சிலர் இந்த உணவு விடுதியை நடத்த ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அதனால் உடனடியாக இந்த உணவு விடுதியை விடுமாறும் நிர்ப்பந்தித்து வருகின்றார். வழமையான கேள்வி கோரல் நடைமுறை மூலம் பெற்றுக் கொண்ட இந்த விடுதியை இவ்வாறு தென்னிலங்கை சிங்கள வர்த்தகர்களுக்கு விடுவிக்குமாறு கோரும் மாநகரின் நிர்ப்பந்தம் பெரும் சர்ச்சைகளை மாநகரப் பணியாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. யாழ் பொதுசன பணியாளர்களிடையேயும் இந்தச் சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே யாழ் நகரப் பகுதியில் தெருவோரத்தில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்ற சிங்கள வர்த்தகர்களில் கணிசமானவர்களுக்கு மாநகர முதல்வர் பின்னணியில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. லாபம் கருதி மாநகர முதல்வர் இத்தகைய நடவடிக்கைளில் ஈடுபடுவதாக யாழ்ப்பாண வணிகர் கழகம் தற்பொழுது பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளது. பல லட்சம் ரூபாய்களை செலவளித்து தம்மால் உருவாக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக அதே பொருட்களை தெருவோரங்களில் வைத்து விற்கும் சிங்கள வர்த்தகர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துச் செல்வதாகவும் அவர்களை வர்த்தக நிலையங்களை அகற்றுமாறு கோரினால் மாநகர முதல்வரின் அனுமதியை தாங்கள் பெற்றிருப்பதாகக் கூறி தம்மையே அச்சுறுத்துவதாகவும் தம்மை வெளிப்படுத்த விரும்பாத யாழ் வணிகர் கழக முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார் எனவும் மேற்படி இணைய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தான் இணக்கப்பாடு அரசியல் என்று சொல்வது!!!
யாழில் அதி கூடிய விருப்பு வாக்குகளால் வென்றவர் என்று தம்பட்டம் அடிப்பவர் எங்கே?
இதுதான் வடக்கையும் தெற்க்கையும் இணைக்கும் இலட்சணமா?
ஓர் பெண்ணான யாழ் மாநகர முதலவர் திருமதி யோகேஸ்வரி பற்குணத்திற்கு இப்படியும் ஓர் பிழைப்பு தேவைதானா?
மக்களே! சிந்தியுங்கள்!!!
எமக்கு அபிவிருத்தி என்ற பெயரில் பிச்சை வேண்டுமா?
சுய கவுரவம் வேண்டுமா?
எல்லாவற்றிற்கும் மனிதாபிமானமும்; மனித நேயமும் வேண்டும்!
வவுனியா,செட்டிகுளம் பகுதியிலுள்ள பாழடைந்த கிணறொன்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்ட இந்த சடலத்துக்குரியவர் ஞானசிங்கம் தனுசன் (வயது 26) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போனவர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இருப்பினும் அவரது மரணத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை