அரச சார்பு தொழிற்சங்கங்கள் : வேலை நிறுத்ததிற்கு எதிராக

அரசாங்கத்திற்கு சார்பான தொழிற்சங்க கூட்டமைப்பு அதிகார சபை இன்று இலங்கை நேரம் 3.30 அளவில் கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளது. நாளை 10 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக இது அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம், அரச சேவை தொழிற்சங்க சம்மேளணம், இலங்கை தொழிலாளர் சங்கம், உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள உள்ளன. யூலை 10 ஆம் திகதி நடைபெறவுள்ள அடையாளப் பணிப்புறக்கணிப்புக்கான அழைப்பை ஜே.வீ.பீயின் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ளன. இந்த அடையாளப் பணிப்புறக்கணிப்புக்கு ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் கூட்டமைப்பும் தனது அதரவை வழங்கியுள்ளன.