இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைக்கும் எதிரான பேரணி
பிரான்சில் பல தடைகளைத்தாண்டி வெற்றிகரமாக நடைபெற்றது.
– இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
– இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுகந்திரம் வழங்கு!
– அராஐகம் படுகொலைகள் காணாமல்போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
– பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
– பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
– பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!
மேற்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து பிரான்ஸ் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்த ஊர்வலம் நேற்று பாரீசில் நடைபெற்றது. இந்த ஊர்வலம் பாரீஸ் Place Georges Pompidou
இருந்து ஆரம்பமாகி பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சு முன்றலில் முடிவுற்றது. அடிப்படையில் சிறீலங்கா அரசிற்கு எதிரான ஊர்வலமாக இருந்தபோதும், அரசின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்தும் ஆர்ப்பட்டமாக முன்னெடுக்கப்பட்ட போதும், ஊர்வலத்தை புலிகள் தடைசெய்வதற்கும் குழப்புவதற்கும் முயன்றும் இத் தடைகளைத்தாண்டி இந்த ஊர்வலம் நடைபெற்றது. புலிகளின் இந்த நடவடிக்கையானது கருத்துச் சுதந்திரத்தின் மீதும் ஐனநாயத்தின் மீதும் புகலிடத்தில் புலிகள் கட்டவிழ்க்கும் பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகவே பாhக்கப்படவேண்டியுள்ளது.
புலிகளிடம் சமூகப்பற்றுள அனைத்துத் தரப்பினரும் கோரியது போராடுவதற்கான உரிமையை மட்டும்தான். இந்த உரிமையை மறுத்து புலிகளற்ற போராட்ட சக்திகள் அனைவரையும் நிர்மூலமாக்கிய புலிகள், அரசிற்கெதிரான போராட்டத்தைத் தொடர்ந்து பலவீனப்படுத்தி வந்துள்ளனர். அரச ஆதரவாளர்கள் அரசின் பாசிசத்தை நியாயப்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புலிகளின் தவறுகளையே சுட்டிக்காட்டுகின்றனர்.
உலகம் முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளும், ஒடுக்கப்பட்ட மக்களும் புலிகள் என்று அடையாளப்படுத்தப்படும் போராட்டங்களை ஏற்றுக்கொள்ளத் தயாரில்ல்லை. இதைத் தனக்கு ஏதுவாகப் பயன்படுத்திக்கொள்ளும் இலங்கை அரசானது, தனது இனப்படுகொலையை எந்தத் தடையுமின்றி நடத்திமுடிக்கின்றது.
அரச ஆதரவாளர்கள், புலிகளின் பாசிசம், மகிந்த பாசிச அரசு என்ற இந்தக் கூட்டு அப்பாவிமக்களை அடிமைகளாக்கிப் பந்தாடிக்கொண்டிருக்கிறது.
புலிகளின் தலைமையானது சமூகப்பற்றுள்ள மக்கள் தலைமையால் பிரதியீடு செய்யப்படும் போது மட்டும் தான் அடக்குமுறைக்கெதிரான போராட்டம் வெற்றிபெறும். அந்தவகையில் இந்தப்போராட்டமானது, அரச ஆதரவாளர்களை மடுமல்ல புலிகளையும் கூட பொதுத் தளத்தில் நடைமுறையோடு அம்பலப்படுத்திய புகலிடத்தில் முதலாவது போராட்டமாகக் கருதப்படலாம்!
//இன்று ஊர்வலம் ஆரம்பிக்கப்படும் இடத்திலும் கூடிய தங்களை புலி ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டவர்கள் தங்கள் வசைகளைக் கொட்டினர். இவர்களது அடாத்தான செயல்களால் அவ்விடத்தில் வன்முறை நிகழும் என்று அஞ்சிய பலர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் தரும்பினர். அவ்வாறு திரும்பிய பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தேசம்நெற்றுடன் தொடர்பு கொண்ட போது, தான் தனது மனைவியுடனும் பிள்ளைகளுடனும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளச் சென்றதாகவும் ஆனால் அங்கு இந்த ஊர்வலத்தை குழப்ப விளைந்த சிலர் தகாத வார்த்தைகளை தமிழிலும் பிரெஞ்சிலும் பேசியதாகவும் நிலைமை பதட்டமாக இருந்ததால் தாங்கள் வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார். அந்த வார்த்தைகளைக் கேட்கவே காது கூசுவதாகக் கூறிய அவர் அவர்கள் அதனை பலருக்கும் மத்தியில் திருப்பித் திருப்பிக் கூறியதாகக் கூறினார்.//
//தமிழ் மக்களுக்குப் போராட நீங்கள் யார்?’, ‘அதற்குத் தான் நாங்கள் இருக்கிறோம்.’, ‘சிங்களவனோடு சேரச் சொல்லுறியளோ’ என்று ஆரம்பித்து தமிழ், பிரெஞ் மொழிகளில் உள்ள தகாத வார்த்தைகள் அனைத்தும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வசையாகக் கொட்டப்பட்டது.//
http://thesamnet.co.uk/?p=8370
நண்பரகளே
இத்தனை அறிவுள்ள மனிதர்களாக இருந்தும் ஏனிந்தப் பிடிவாதம் உங்களுக்கு.
மிக மிக மிகப் பெருப்பான்மையான தமிழர்கள் புலிகளை புலத்தில் ஆதரிக்கிறார்க்ள என்பதை நீங்கள முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள்.
புலத்தில் வாழும் தமிழர்கள் சுயாதீனமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
தற்போது புலிகளுக்கு யாரும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. யாரும் பயப்படுவதும் இல்லை.
இதையடுத்து நீங்கள் ஜனநாயக வாதிகள் என்னு உங்களையே நீங்கள் பிரகடனம் செய்கிறீர்கள். அது உண்மையானால் இந்தப் மிக மிக மிகப் பெரும்பான்மையான தமிழர்களின் உணர்வுகளை மதியுங்கள்.
வெள்ளைக்காரர்களுக்கும் புரிந்திருக்கும் உங்கள் அடாவடித்தனமும் ஜனநாயக மறுப்பும்.
புலிக்கு ஆதரவானவர்கள் கூட்டம் வைத்தால் ஆயிரமாயிரமாக வந்து கூடுகிறார்கள். நீங்கள் யாரென்பது புலம் பெயர் தமிழர்களுக்குத் தெரியாது என்னு நீங்கள் எண்ணுவதுதான் இதில் நகைப்புக்குரியது.
நீங்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என அவர்கள் எண்ணுகிறார்கள்.
அவ்வாறு எண்ணும் உரிமை அவர்களுக்கு உண்டு. அவர்களைப் பற்றி நீங்கள் என்னவும் கூறிக்கொள்ளலாம்.
உங்களுக்கும் அந்த உரிமை உண்டு.
நிலவைப் பார்த்து குலைக்கும் உரிமை நாய்க்குண்டென உறுதிப்படுத்துவதற்கு நான் உயிரையும் விடக்கூடிய ஜனநாயகவாதியென்பதையும் உங்களுக்குக் சொல்லிக்கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்.
Sooriyan,
//இத்தனை அறிவுள்ள மனிதர்களாக இருந்தும் ஏனிந்தப் பிடிவாதம் உங்களுக்கு.
மிக மிக மிகப் பெருப்பான்மையான தமிழர்கள் புலிகளை புலத்தில் ஆதரிக்கிறார்க்ள என்பதை நீங்கள முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள்.//
யாரிடமும் இதற்கு எந்தப் புள்ளிவிபரமும் கிடையாது! நாசி ஜேர்மனியில் மிகப்பெரும்பான்மையோர் ஹிட்லரை ஆதரித்தனர் என்பது வெளிப்படையான உண்மை. இன்று பாசிச ராஜபக்சவை ஆதரிப்போர் சிங்களப்பெரும்பான்மையினர் என்பதும் தெரிந்த உண்மை. இதற்காகவெல்லாம் தவறாக வழிநடத்தப்பட்ட மக்கள் கூட்டத்தின் பினால் எண்ணிக்கையைக் காரணம் காட்டி எடுபட்டுப் போகவேண்டுமானால், புலிகளைவிட ராஜபக்ஷவின் ஆதரவாளர்களாகவே நீங்கள் மாற வேண்டும்.
//உண்மையானால் இந்தப் மிக மிக மிகப் பெரும்பான்மையான தமிழர்களின் உணர்வுகளை மதியுங்கள். //
மறுபடி மறுபடி உங்கள் வாதம் பெரும்பான்மையை நோக்கியே முன்வைக்கப்படுகிறது. சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் ராஜபக்ச அரசால் இனவாதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். ஆக, பெரும்பான்மையின் பக்கம் நிற்கும் ராஜபக்ச அல்லவா உங்களுக்கு மிகப்பெரும் ஜனநாயக வாதியாக அமைய வேண்டும்.?
//புலிக்கு ஆதரவானவர்கள் கூட்டம் வைத்தால் ஆயிரமாயிரமாக வந்து கூடுகிறார்கள். நீங்கள் யாரென்பது புலம் பெயர் தமிழர்களுக்குத் தெரியாது என்னு நீங்கள் எண்ணுவதுதான் இதில் நகைப்புக்குரியது.//
புலிகளால் கொலைசெய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் கூட்டம் வைத்தால் ஆயிரமாயிரமாய் வந்து கூடினார்கள். உங்கள் கருத்துப்படி புலிகள் கூட்டணிக்கு எதிராகப் போராடியதே தவறானதல்லவா?
ராஜபக்ஷ கூட்டம்வைத்தால் அலையலையாக மக்கள் கூடுகிறார்கள். தம்ழ் பேசும் மக்கள் மீதான ராஜபக்ஷவின் அரச பயங்கரவாதத்திற்கெதிராகக் கூட்டம் போடும் இடதுசாரிகளின் கூட்டங்கள் வெளித்தெரிவது கூட இல்லை. தமிழ் பேசும் மக்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட லசங்கவின் இரங்கல் கூட்டத்திற்குக் கூட 50 இற்கும் குறைவானவர்களே சென்றார்கள்.
அடிப்படையில் சிறீலங்கா அரசு கூறுவதும் நீங்கள் கூறுவதும் ஒன்றுதான். சிறிலங்கா அரசைப்போலவே புலிகளும் தமது இருப்பிற்காக யாரையும் அழித்தொழிக்கத் தயாராக இருக்கிறார்கள். எல்லா மாற்றுக்கருத்தாளர்களையும் அரச எதிர்ப்பாளர்களையும் கொன்று போட்டு தனிமைப்பட்டுப் போன புலிகள் அழிவின் விழிம்பில் கூட தம்மை மாற்றிக்கொள்ளத் தயாராகவில்லை என்பதற்கு இந்தப்போராட்டம் ஒரு எடுத்துக்காட்டு.
//நீங்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என அவர்கள் எண்ணுகிறார்கள்.
அவ்வாறு எண்ணும் உரிமை அவர்களுக்கு உண்டு. அவர்களைப் பற்றி நீங்கள் என்னவும் கூறிக்கொள்ளலாம்.//
அவர்கள் பரிதாபத்திற்குரியவர்களாகவே இருந்துவிடுப் போகட்டும்! ஆனால் மக்களின் அழிவிற்குப் பொறுப்பானவர்களல்ல என்று பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடியவர்கள். இக்கட்டான ஒரு சூழலில் அரசை மட்டுமல்ல புலிகளையும் கூட அம்பலப்படுத்த மிரட்டல்களுக்கு மத்தியில் தெருவுக்கு வந்தவர்கள் என்பதில் பெருமிதமடைய உரிமையுடையவர்கள்.
சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! ஊர்வலத்தில் முன்வைக்கப்பட்டதோ அரசிற்கெதிரான கோசக்ங்கள். அவற்றையிட்டு ஆத்திரமடைந்ததோ புலிகள். ஆக, புலிகள் மக்கள் குறித்தும் அவர்களின் அழிவு குறித்ட்கும் கிஞ்சித்தும் அக்கறையற்றவர்கள். அவர்களைப் பொறுத்தவரை தமது இருப்பு மட்டும் தான் முக்கியம். இவை அம்பலப்படுத்தப்படும் போது, பெரும்பான்மை ராஜபக்சக்வும் பெரும்பான்மைப் பிரபாகரனும் மக்களால் விரட்டியடிக்கப்படுவார்கள்.
புலிகளின் இணையத்தளமான “சங்கதி”யில் இன்று வெளிவந்த செய்தி. புலிகளின் அண்டப் புழுவுக்கு இது நல்ல உதாரணம்.
பிரான்சில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
திகதி: 08.03.2009 // தமிழீழம் // ஜபாண்டியன்ஸ
சிறிலங்கா அரச ஆதரவாளர்களால் தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தி இடம்பெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றும் தமிழ் மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை மாலை பரிசின் முக்கிய பகுதிகளில் ஒன்றான றம்புத்தோ பகுதியில் சிறிலங்கா அரச ஆதரவாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்கள் இணைந்து தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன.
இதனை அறிந்த தமிழ் மக்கள் பெருமளவில் அவ்விடத்தில் தமிழீழத் தேசியக் கொடிகளுடன் குவிந்துள்ளனர். ஆனால்இ சுமார் ஐந்து வரையான சிறீலங்கா ஆதரவாளர்களே அங்கு வந்திருந்ததால்இ ஆர்ப்பாட்டம் எவையும் நடைபெறாமலேயே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
இதேவேளைஇ சனிக்கிழமை மாலை பரிஸ் லாச்சப்பலில் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஒன்று கூடல் இடம்பெற்றது.
சிறிலங்கா அரசிற்கெதிரான இவ்வாறான போராட்டங்களை ஏன் புலிகள் தனது ரவுடிப்பட்டாளத்தைக் கொண்டு தாக்க முயல்கிறார்கள்? இப்படிப் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொல்கிறார்கள்?
பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.
அரசுக்கும் புலிகளுக்கும் மறைமுக உடன்பாடு ஏதவது உள்ளதா?
கொழும்பில் அரசுக்கு எதிரான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட போது கூட புலிகள் அலட்டிக்கொள்ளாமல் இருந்ததெல்லாம் இப்ப்படிப்ப்ட்ட உடன்பாடுகளால் தான?
மிக மிக மிகப் பெரும்பான்மையான மக்கள் பாசிச அரசினதும் புலிகளினதும் போர்ப்பொறிக்குள் சிக்கி மரணத்துள் வாழ்கின்றனர்! அவர்களைக் காப்பாற்று என்ற கோசத்துடனேயே புலத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரள்கின்றனர்! மக்களைக் கேடயமாக்கி அவர்களின் மரணத்தில் உயிர் வாழும் புலிகளைக் காப்பாற்று என கோரி அவர்கள் திரளவில்லை! முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட தற்கொலைப்போர் 20.000 ற்கு மேற்பட்ட இளைஞர்களின் அர்த்தமற்ற தியாகம் லட்சக்கணக்கில் தமிழ்மக்களின் அழிவு>இதனால் எல்லாவற்றையுமே இல்லாதாக்கிய புலிகளை புலம்பெயர்மக்கள் இனம் காணாதவர்கள் அல்ல! வன்னியில் புலிகள் சேடம் இழுப்பதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்!
நாவலன்
நீங்கள் புத்திசாலி.
அதனால்தான் தமிழர்களையும் நாசிகளையும் துல்லியமாக ஒப்பீடு செய்கிறீர்கள்.
தமிழர்களை அழிக்கவேண்டும் எனும் உங்களது உள்நோக்கின் சூட்சுமம் என்ன என்பதை சரியான முறையில் வெளிக்காட்டுங்கள்.
சூர்யன்,
நான் புத்திசாலி என்பது போகட்டும் நீங்கள் முட்டாளாக இருப்பது என்று முடிவே செய்துவிட்டீர்கள்!
ஜேர்மன் மக்களும், தமிழ் மக்களும், சிங்கள மக்களும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்பட்கு தான் எனது வாதம். எவ்வாறு ஹிட்லரும், மகிந்தவும் பாசிசத்தின் பிடிக்குள் மக்களைக் கட்டிவைத்துள்ளார்களோ அப்படியே புலிகளும்.
இதைப் புரிந்து கொண்டு புதிய சக்திகளை அரசிற்கெதிராக வளர்த்தெடுக்கும் வரை அழிவுகள் தவிர்க்க முடியாதவை.
அருமையான ஆக்கம் – ஆக்கபூர்வமான விமா;சனங்கள்/
யதார்த்தத்தினை சிறப்பான வகையில் பூpந்து கொண்டு போராட்டத்தனை முன்னெடுக்க வுணே;டிய காலம் இது என்பதனை அனைத்து விதமான தலைமைகளும் பூpந்து கொண்டிருக்கும் என்று நம்புகின்றேன்.
மக்களுடைய ஆதரவு இல்லாதவிடத்து எந்தவொரு பொதுச் செயற்பாட்டினையும் முறையாக செயற்படுத்த முடியாது இது விடுதலைப்போராட்டத்திற்கும் பொருந்தும் எனவே குறித்த தலைமையானது தான் என்கின்ற நிலையில் இருந்து விடுபட்டு மக்களை அரவனைத்துக்கொண்டு தொடா;ந்த வரும் காலங்களில் விடுதலைப்போராட்டத்தினை மக்கள் போராட்டமாக மக்களுடைய உண்மையான விடியலை நோக்கிய போராட்டமாக முன்னெடுக்க முனைய வேண்டும் அப்பாவி பொது மக்களை துன்புறுத்துவதனையும் கைவிட வேண்டும் எனவும் எதிர் பார்க்கின்றேன்.