மக்கள் போராட்ட இயக்கத்துடன் இணைந்து செயற்படவேண்டாம் என்று முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பி.பி.சிக்குத் தெரிவித்துள்ளார்.
இது அவர்களின் அரசியல் உரிமையை மறுப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போராளிகள், இராணுவப் புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்பின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் ஒரு தொகுதியினர் வாரத்தில் ஒரு தடவையும் மற்றைய தொகுதியினர் மாதத்தில் ஒரு தடவையும் இராணுவ முகாமுக்குச் சென்று அறிக்கையிட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று அவர்தெரிவித்தார்.