பேரின வாதிகளும், தோற்றுப் போன போராட்ட முறைகளுமாக மறுபடி மறுபடி ஒரே சுழல் வட்டத்தினுள்ளேயே செயற்படும் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் குறித்த வழிமுறைகள் பேசப்பட வேண்டிய முக்கிய காலகட்டத்தில் வாழ்கிறேம். பரந்துபட்ட கருத்துப் பரிமாற்றங்களும், புதிய முன்னோக்கிய சிந்தனை முறையின் உருவாக்கமுமே பேரினவாதத்தை எதிர்கொள்ளும் அடிப்படையை எமக்க்கு வழங்கவல்லது. இந்தவகையில் புதிய திசைகள் மேற்கு லண்டனில் “கருத்தும் விவாதமும்” என்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துளது.
சமூகப்பற்றும் மக்கள் அக்கறையுமுள்ள ஒவ்வொருவரும் இப் பொதுக்கூட்டத்தி கலந்துகொண்டு செழுமைப்படுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.
இலங்கை அரச பாசிசத்தின் புலம் பெயர் தமிழர் கூறுகள் வேகமாக விரிவடைந்து வரும் சூழலில், எமது செயற்படுதளம் விரிவாக்கப்படவும், இலங்கையின் எல்லைக்குள் அது நகர்த்தப்படவும் வேண்டும். இதற்கான முன்மொழிவுகளும் எதிர்வினைகளும் எமது கருத்தரங்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.
“இலங்கைச் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் எதிர்காலம் குறித்து” என்ற தலைப்பில் சபா நாவலனும், மாசில் பாலனும் உரையாற்றுவார்கள். இதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும்.
காலம் : 06:02:2011 (ஞாயிறு) 3:30 PM
இடம்: Northolt Village Community Centre
Ealing Rd,
Northolt
UB5 6AD
Northolt tube station
தொடர்புகள் : 07960484545
-புதிய திசைகள்