ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் பாதுகாக்கவென தொடர்ந்து அரசியலில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நேற்று இரவு சபாநாயகர் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கட்சியின் தலைமை பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையைச் சூறையாடிய பாசிஸ்ட் மகிந்த ராஜபக்சவும் பரிவரங்களும் கூச்சமின்றி மீண்டும் அரசியலில் ஈடுபடுவொம் எனக் கூறுகின்றன. இனக்கொலை நடத்தி லட்சக்கணக்கில் மனிதர்களைச் சாகடித்துவிட்டு உல்லாசமாக வாழ்ந்த மகிந்த பரிவரங்கள் இப்போது மைத்திரி அரசோடு இணைக்கப்ப்பாட்டிற்கு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விட்டுக் கொடுக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மகிந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பின் படி கட்சியின் ஒருவர் ஜனாதிபதியாகும் ஒருவருக்கு தலைவர் பதவி சென்றடையும். சந்திரிகாவுக்கு தலைவர் பதவி கிடைக்காமல் பண்ணுவதற்காக இப்படி திருத்தப்பட்டது. அது பூமரங் ஆகியுள்ளது.
கடைசியாகக்கிடைத்த தகவல்களின் படி சுதந்திரக் கட்சியின் தலைமையை மைத்திரியிடம் கையளிக்க மகிந்த இணங்கியுள்ளார். மறுபடி சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றக்கூடும்.