ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி. தலைவர்களை படுகொலை செய்வதற்கு அரசினால் உருவாக்கப்பட்டுள்ள ஆயுதக்குழுவே மக்கள் விடுதலை இராணுவம் என்ற அமைப்பு என்றும் அரசுக்கும் இந்த ஆயுதக்குழுவுக்கும் இடையிலான தொடர்பினை தன்னால் ஆதாரத்துடன் வெளியிடமுடியும் என்றும் மேல் மாகாண மக்கள் முன்னணி தலைவர் மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
கெர்ழும்பு நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மக்கள் விடுதலை இராணுவம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஆயுதக்குழு தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
இந்த ஆயுதக்குழு அரசின் முழுமையான ஆதரவுடனும் ஆசீர்வாதத்துடனும் அனுசரணையுடனம் ஆரம்பிக்கப்பட்டுள்ள அமைப்பாகும். நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட்டோம் என்றும் அவ்வாறு அழிக்கவல்ல திறமையான இராணுவம் தமது இராணுவம் என்றும் கூறிவரும் சிறிலங்கா அரசு, இவ்வாறான ஒரு ஆயுதக்குழுவை உருவாக எவ்வாறு அனமதித்தது?
விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்த ஆயுதங்களையே அகழ்ந்தெடுத்துக்கொண்டிருக்கும் சிறிலங்கா படையினர், ஆயுதங்களுடன் ஆரம்பிக்க ஒரு அமைப்பினை எவ்வாறு அனுமதித்தது?
இந்த அமைப்பின் மூலம் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி. தலைவர்களை படுகொலை செய்வது அரசின் திட்டம். எனக்கு எதிராக ஏற்கனவே மூன்று படுகொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை தோல்வியமடைந்துவிட்டன. எதிர்வரும் வாரங்களில் தேர்தல் பிரசாரத்துக்காக வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு செல்லவுள்ளேன். எனது உயிருக்கு ஏதாவது ஆபாத்து ஏற்பட்டால் அதற்கு அரசே பொறுப்பு ஏற்கவேண்டும்.